படத்தின் முதல் காட்சியே சும்மா ஜிவ்வென ஏறுகிறது. மந்திரி ஒருவரின் வீட்டிற்கு சி.பி.ஐ ஆபீஸர்களான அக்ஷய் குமார், அனுபம் கெர், ராஜேஷ் ஷர்மா, கிஷோர் ஆகியோர் அடங்கிய குழு போகிறார்கள். துணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிம்மி ஷெர்கிலையும் ஒரு லேடி கான்ஸ்டபிளையும் கூட்டிக் கொண்டு போய் வீட்டையே அல்லோல கல்லோலப்படுத்தி பல லட்ச ரூபாய் பணம், நகைகளை கைப்பற்றி வெளியேற இருக்கும் போது மந்திரி லஞ்சம் கொடுக்க விழைகிறார். அவர் கன்னத்தில் இரண்டு அறை அரைந்து கைப்பற்றிய எல்லா பணம், நகைகளை எடுத்துக் கொண்டு போகிறார்கள். என்னா ஒரு தில்லான ஆபிஸ்ர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் டூபாக்கூர் ஆட்கள் என்று காட்டப்பட, அட என்று நிமிர்ந்து உட்கார ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு தான் ஆரம்பிக்கிறது நிஜ சி.பி.ஐ ஆபீசர் மனோஜ் பாஜ்பாய்க்கும், அக்ஷய் டீமிக்குமான போராட்டம். கடைசி கடைசியாய் 26 பேர் அடங்கிய குழுவை இண்டர்வியூ செய்து நிஜ சிபிஐ ஆபீஸ்ர்களாய் தெரிந்தெடுத்து ஒரு ரைட் நடத்தி எஸ்ஸாக நினைக்கிறார்கள். அதை தடுக்க, இவர்களின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்க ஜிம்மி கொடுக்கும் ஒர் தகவலை வைத்து ப்ளான் செய்கிறார் மனோஜ். பின்பு என்ன ஆனது என்பது நிச்ச்யமாய் வெள்ளித்திரையில் பாருங்கள்.
ஆரம்பக் காட்சி அதகளத்தில் ஆரம்பித்தது முடியும் வரை நைல் பைட்டிங் தான்.அதிலும் அக்ஷய், அனுபம்கர், ஆகியோரின் நடிப்பு க்ளாஸ். சட்டென பார்த்தால் ஆபீசர் என்று ஒத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும், பேச்சும் அட..அட.. அக்ஷய் இப்படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பட் நீட் அண்ட் க்ளீன் பர்பாமென்ஸ். அனுபம் நன்றாக நடித்திருந்தார் என்று சொல்வது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. முக்கியமாய் மனோஜ் பாஜ்பாயிடம் மாட்டிக் கொண்டு ஒளரும் காட்சியில் அவரின் அனுபவம் தெரிந்தது. மனோஜை சரியாக பயன்படுத்துகிறவர்களுக்க் அவர் ஒர் சுரங்கம். இயக்குனர் இந்த சுரங்கத்தை கொஞ்சம் தோண்டியிருக்கிறார். கதாநாயகியாய் காஜல் அகர்வால். என்பதுகளில் நடக்கும் கதையானதால் அந்த கால க்ளாஸிக் ஹீரோயின்களின் காஸ்ட்யூமில் க்யூட்டாக இருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாய் வாய்ப்பில்லை.
இயக்குனர் நீரஜ் பாண்டே. வெட்நெஸ்டேவுக்கு பிறகு வரும் படம் என்பதால் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். நல்ல நாட். க்யூட்டான விறுவிறு திரைக்கதை. சிறந்த நடிகர்கள், க்ரிஸ்பான வசனங்கள் என்று எல்லாமே சரியாய் அமைந்துவிட்டது. ஆங்காங்கே வரும் காஜல், அக்ஷய் காதல் காட்சியும், பாடல்கள் மட்டுமே படத்தின் ஸ்பீடுக்கு தடை. என்பதுகளில் நடக்கும் கதையில் ஒர் தமிழ் கேண்டிடேட்டை இண்டர்வியூ செய்யும் காட்சியில் பாட்ஷா வசனம் பேசுவது டைம் அஹெட். கொள்ளையடிக்கப்படும் ஆட்கள் எல்லோருமே பெரிய ஊழல் செய்யும் ஆட்கள் ஆதலால் அவர்களிடம் அடிக்கும் கொள்ளை படம் பார்க்கும் நமக்கு நியாயமாகவே படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த கும்பல் மாட்டக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு திரைக்கதை சுவாரஸ்யம். இண்டர்வியூ காட்சி, அனுபம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவியை வைக்குமிடம் என்று குட்டிக் குட்டியாய் படம் நெடுக நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் போலி ஆபீசர்களான அக்ஷய் சீட் போகுமிடத்தில் நிஜ சி.பி.ஐ ரைடு நடத்திக் கொண்டிருக்க, அந்த சிட்சுவேஷனை சமாளித்து அவர்களையே தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமான காட்சி ஒன்று போதும் இப்படத்தின் குவாலிட்டிக்கு. நிறைய சொல்லலாம் . அது ஸ்பாய்லராய் போய்விடும். A Neat, Lovable, Comical Thriller. DON'T MISS
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
இந்த வாரம் நிச்சயமாகப் பார்க்கவிருக்கிறேன்.!
நன்றி ஜி!
இவ்வளவு சொல்லிட்டீங்கள்ள. ஒங்க கணக்கு தப்பாது. ஜரூர் தேக்கேங்கே.
தமிழ்லே இப்படி எல்லாம் வருமா? இந்தத் தரத்துக்குத் தமிழ்ப்படம் போக எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ? கனவு தான் காணணும். :(
Indha padam tamil la vandhuruka?
Post a Comment