Thottal Thodarum

Mar 11, 2013

கொத்து பரோட்டா-11/03/13

கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு திரும்புகையில் ஹைவேஸில் வரும் போது ஒர் கேள்வி எழுந்தது. கையில் காசு இல்லாவிட்டால் டோலில் அனுமதிப்பார்களா? இல்லை.. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் வசதி வைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் தான் அது. அதை செக் செய்து பார்த்துடலாம் என்று முதல் டோலில் ‘சார்.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?” என்று கேட்டவுடன் நின்று கொண்டிருந்த ஹிந்திக்கார பையனு புரியாமல் “சிங்கிள்?” என்று கேட்டான். “மேரே பாஸ் பைசா நஹிஹே.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் கரோகே” என்ற அரைகுறை இந்தியில் கேட்க, அவன் கண் வெளியே வந்துவிட்டது. “நஹி நஹி சாப்.. ஒன்லி பைசா..ஒன்லி பைசா..” என்ற பதற ஆரம்பித்தான் பின்னால் ஒர் பெரிய வால் நின்று கொண்டு ஹாரன் அடித்துக் கொண்டேயிருக்க, காசைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன். பின் அடுத்த டோல், அதற்கடுத்த டோல் எல்லாவற்றிலும் இதே நிலைதான். எனக்கொரு சந்தேகம். ஹைவேஸில் வந்தாகிவிட்டது. பர்சை மறந்து வைத்துவிட்டோம். அல்லது எங்கோ மிஸ்ஸாகி விடுகிறது. வருகிற வழியில் நம்பர் ஒன்னுக்கு போகும் இடத்தில் தொலைந்து விடலாம். டோலுக்கு காசு இல்லையென்றால் திரும்ப அனுப்புவேன் என்று சொல்வது சரியாகப் படவில்லை. பணத்தை வாங்க வேறு வசதிகள் நிச்சயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். க்ரெடிட் கார்டோ, அல்லது டெபிட் கார்ட் வசதியோ, அல்லது அங்கே ஒர் ஒருங்கிணைந்த ஏ.டி.எம்மோ அமைத்திருந்தால் அட்லீஸ்ட் பணம் எடுத்தாவது கொடுக்கலாம்.  சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட கார்டுகளில் டோல்களை கிராஸ் செய்யும் போது பணம் எடுக்கப்படுகிறது. அதை மீறி காசில்லாமல் இருக்கும் கார்டுகள் கொண்டு கடக்கிறவர்களின் வீட்டிற்கு ஃபைனோடு பில் அனுப்பப்படுமாம்.ஒர் இந்திய குடிமகனுக்கு அவனுடய நாட்டில் பணம் இல்லையென்றால் பயணம் செய்யக்கூட முடியாது என்ற நிலை கொஞ்சம் யோசிக்க வேண்டியதாய் தான் இருக்கிறது. நிச்சயம் இதற்கு சட்டத்தில் ஒர் இடம் இருக்கும். ஆனால் அதை இவர்கள் நடைமுறை படுத்தாமல் சத்தாய்க்கிறார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது. தெரிந்தவர்கள் தெளிவு படுத்தலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இன்று இந்தியா வருகிறார். அவரை சந்திக்க இந்தியாவில் உள்ள அத்துனை பெரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் துறை சம்பந்தப்பட்ட விற்பனர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்ற இருக்கிறார். ரிலையன்ஸ்தான் இவரை இங்கே வரவழைத்திருக்கிறது. ஸ்டீவனின் ட்ரீம் ஒர்க்ஸில் ரிலையன்ஸ் ஒர் பங்குதாரர் என்பதால் ஸ்டீவனும் இந்தியா வருவதாய் ஒப்புக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியை நடத்தப் போவது நம் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@
இம்முறை கும்பேஸ்வரர் கோயில் சுவற்றில் எந்த போஸ்டரும் இல்லாமல் சுத்தமாய் இருந்தது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட மூன்று முறை கும்பகோணம் போய் வந்திருந்த போதும் கோயிலுக்கு பெயர் பெற்ற ஊரில் அதன் சுவற்றில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தைப் பற்றி வருத்தப்பட்டிருந்தேன். எந்த சாமிக்கு கேட்டுதோ கும்பகோணம் முழுக்க, எல்லா கோயில் சுவர்களிலும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தது. லோக்கல் பாடி ஆர்டராம். நல்லது நடந்தா சந்தோஷம். அது சரி.. கும்பகோணத்தை கும்பைன்னு சொல்லாம எதுக்கு குடந்தைன்னு சொல்றாங்க? டவுட்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்னை டூ கும்பகோணத்திற்கு பாண்டிச்சேரி வழியாக போகும் ரோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் பாண்டி வராமல் நெய்வேலி, சேத்தியாதோப்பு வழியாக வரும் ரோடு மிக மோசமாய் இருக்கிறது. நாற்பது ஐம்பது கீமீட்டர் வேகத்திற்கு மேல் பகலிலேயே போக முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ரோட்டில் ஒரு பாதியை உளுந்து, வேர்க்கடலை போன்றவற்றை போட்டு காய வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட நேருக்கு  நேர் வண்டி ஓட்டவே முடியாத நிலை. ரோட்டை உடனடியாய் சரி செய்யாவிட்டாலும், அட்லீஸ்ட் டபுள் ரோட்டை சிங்கிள் ரோட்டாக்காமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@
இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்காக லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற்று வருகிறது. ஒர் அரசினால் செய்ய முடியாததை, அரசியல் கட்சிகளால் செய்ய முடியாததை மாணவர் சமூதாயம் நினைத்தால் மாற்றி அமைத்திட முடியும். எல்லோரும் ஒன்றினைந்திருக்கும் இந்நிலையில் அவர்களுக்கு நம்மாலான உதவியை செய்து, அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். விடுதலைப்புலிகள் அவர்களின் போராட்டத்தைப் பற்றிய என் கண்ணோட்டம் வேறாக இருந்தாலும் இலங்கைத் தமிழர்களி விடியலுக்கான போராட்டமாய் துவங்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சந்தர்பத்தை குறை சொல்வதை விட்டு வாய்ப்புகளை உருவாக்குபவன் புத்திசாலி.

பெண்ணை ஒர் ஆண் மகனால் அடிக்க முடியாது. அப்படி அடிப்பவன் ஆண்மகனாக இருக்க முடியாது.

நாம் என்றைக்கோ பேசியது நினைவுக்கு வந்து நமக்கு நாமே சிரித்துக் கொள்ளும் நிலை படு சுவாரஸ்யமானது. எல்லாருக்கும் கிடைக்காது.:)

கோடிக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்த காசை விவசாயிக்கு கொடுத்திருந்தாலாவது புண்ணியமாய் போயிருக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
மீண்டும் ஒர் ராஜாவின் பாடலோடு ப்ளாஷ்பேக். சிவசங்கரியின் நாவலை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட படம். ராஜாவின் பாடல்களுக்காகவே பார்க்க வேண்டியபடம். கேன்சரால் பாதிக்கப்பட்டவனைப் சுற்றி நடக்கும் கதை. மகேந்திரனின் இயக்கம்,அசோக்குமாரின் ஒளிப்பதிவு உடன் ராஜாவின் பின்னணியிசை கேட்க வேண்டுமா? அன்றைய காலத்தில் வியாபார ரீதியாய் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய படம். பாடலின் ஆரம்பத்தில் மங்களகரமாய் வீணையில் ஆரம்பித்து மெல்ல வயலின்களில் மெல்லிய சோகத்தோடு பயணிக்குமிடத்திலேயே ராஜா தெரிய ஆரம்பித்துவிடுவார். உமாரமணனின் குரல் கேட்கவே வேண்டாம். தேன். எப்போது கேட்டாலும் என்னை கிறங்கடித்துவிடும் பாடல். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
நீண்ட நேர செக்ஸுக்கு பின் பெண் ஆணிடம் அவனின் லுல்லாவைக் காட்டி “நீ ஏன் முன்னமே சொல்லவில்லை உன்னுடய கிடார் இவ்வளவு சின்னதுன்னு “ என்று கேட்டாள். நான் கூட்த்தான்  ஏதோ ஒரு ரூம்ல வாசிக்கணும்னு நினைச்சு வந்தேன் ஆனா இவ்வளவு பெரிய ஹாலா இருக்கும்னா நினைச்சேன் என்றான்.
கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

SathyaPriyan said...

கேபிள்ஜி,

என்ன ஆச்சு? சென்ற வாரம் கொத்து பரோட்டாவில் கொத்தியே அதே அடல்ட் ஜோக் தமிழாக்கத்தில் இந்த வாரத்தில்.........

//
அடல்ட் கார்னர்
Couplez were havng a borry sex nd afta hvn t. A gal asked why u ddnt say dat u hv a small guitar? Nd a man rply i waz not aware of dat i waz 2perfom in a hall.

அடல்ட் கார்னர்
நீண்ட நேர செக்ஸுக்கு பின் பெண் ஆணிடம் அவனின் லுல்லாவைக் காட்டி “நீ ஏன் முன்னமே சொல்லவில்லை உன்னுடய கிடார் இவ்வளவு சின்னதுன்னு “ என்று கேட்டாள். நான் கூட்த்தான் ஏதோ ஒரு ரூம்ல வாசிக்கணும்னு நினைச்சு வந்தேன் ஆனா இவ்வளவு பெரிய ஹாலா இருக்கும்னா நினைச்சேன் என்றான்.
//

Philosophy Prabhakaran said...

ஸ்டீபன் ஸ்கூல்பேக் பக்கத்தில் நின்று போஸ் கொடுத்துவிட்டு இனி ஆளாளுக்கு சீன் ஓட்டுவாங்களே...

Unknown said...

டோல்கேட் , தங்கள் யோசனை வரவேற்க்கதக்கது

Anonymous said...

மேற்கு சைதாப்பேட்டையை ஏன் மேசை என்று அழைக்கக்கூடாது?

Anonymous said...

கும்பகோணம் கொத்து பரோட்டா என்று டைட்டிலை மாற்றுமாறு...

Rajan said...

நேற்று ஸ்ரீ பெரம்பதூர் TOLL PLAZA வில் எனக்கும் இதே சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்ததில் இதே பதிலை தான் அவர்களும் கூறினார்கள்.

Unknown said...

அண்ணே நீங்க பேசாம அரசியலுக்கு வந்துருகண்ணே எம்புட்டு நல்ல கருத்துலம் சொல்லறிங்க அரசாங்கத்துக்கு நல்ல ஆலோசனையெல்லாம் சொல்றிங்க நடைமுறை படுதுன நல்ல இருக்கும்

Dare to Dream said...

New Bridge is Opend for Kumbakonam try that route it is much better that other routes

r.v.saravanan said...

எங்கள் ஊருக்கு வருகை தந்த சங்கர் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்

rafi said...

நீங்கள் சென்னைளுருந்து கும்பகோணம் செல்ல குறைபாடு இல்லாத சாலை திண்டிவனம் , விழுப்புரம் , உளுந்டுர்பெட்டை , விருத்தாசலம் , ஜெயம்கொண்டம் வழியாக செல்லவும் . ஜெயம்கொண்டதிளுருந்து நேராக சென்றால் புதியபாலம் வழியாக கும்பகோணம் அடையலாம்.

குரங்குபெடல் said...

"கோடிக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்த காசை விவசாயிக்கு கொடுத்திருந்தாலாவது புண்ணியமாய் போயிருக்கும் "

எனக்கு கூட இப்படி தோணலியே . . . .

இப்படிக்கு

- கலைஞர்

Ramya Mani said...

Dear Sankar,
ungalukku oru kelvi. perhaps you will know, with your vast knowledge of Tamizh cinema. My mom and I watched an old (80s) tamizh movie on TV (Doordarshan) a few years ago, but cant recall the name. the story was : the heroine gets pregnant because of her boyfriend. The boyfriend ditches her. When she tells her father about it, initially he is mad at her, but then decides to support his daughter. She has the baby and then the grandpa also raises the baby well. We didnt see the conclusion of the movie. but it was very different in making and the fact that the father accepts the baby and they even have a birthday function for the baby, considering its an illegitimate child, made it a memorable movie. Do you by chance know what movie it could be, I would like to revisit this and watch fully. Sorry if it was just a small bit of info and you cant make out. thanks, Ramya

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை...

keyven said...

I commented about your attitude towards free thing in this thread. I know that you have not posted it or deleted it. That shows how much narrow mind you have. God bless you.