சில வாரங்களுக்கு முன் அதிமுக சார்பில் “என் உயிரை திருப்பி தருவீங்களா தா..தா.. என்று கலைஞரை தாத்தா என்றழைத்து கிண்டல் செய்திருந்த போஸ்டர்களுக்கு போட்டியாய் சைதை பகுதி முழுவதும் திமுகவின் சார்பாய் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர். சபாஷ் சரியான போட்டி
@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் மட்டும் தமிழில் ஏழு எட்டு படம் வெளி வந்தது. வழக்கம் போல அவையனைத்தும் மக்களின் கவனத்திற்கு வருவதற்கு முன்னமே தியேட்டர்களை விட்டு போய்விடும். இதில் இன்னொரு அபாயம் என்னவென்றால் முன்பெல்லாம் இம்மாதிரியான படங்களை திரையில் பார்க்காவிட்டாலும், உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் என்று போடும் போது பார்த்துவிடலாம் என்ற வாய்ப்பிருந்தது. சமீப காலமாய் அதுவும் குறைந்து போய் வருகிறது. பெரும்பாலான சிறு முதலீட்டுப் படங்களின் நிலை படம் வெளியாவதற்கு முன் சாட்டிலைட் டிவிக்காக கேட்கப்பட்ட தொகை அடிமாட்டு விலைக்கு இருக்க, படம் ரிலீஸாகி ஓடினால் நல்ல விலை போகும் என்ற நம்பிக்கையில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அது மூன்று நாளில் பெட்டிக்குள் போகும் பட்சத்தில் பின்நாட்களில் ஐஞ்சுகும் பத்துக்கும் கூட விலைக்கு வாங்க ஆளில்லாம்ல சுமார் முப்பது சதவிகித படங்கள் சாட்டிலைட் வியாபாரமும் இல்லாமல் நஷ்டமடைய ஆரம்பித்திருக்கிறது. இம்மாதிரியான் நிலையில் எதிர்காலத்தில் நிச்சயம் பே-பர்-வியூவிலோ, அல்லது கேபிள் நெட்வொர்க்கில் வர இருக்கும் மூவி ஆண்ட் டிமாண்டில் போட்டு காட்டி சம்பாதிக்க இருக்கும் ஒர் வாய்ப்பை பயன் படுத்தினாலே ஒழிய சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுக்க வாய்ப்பேயில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ரொம்ப நாளாகிவிட்டது இலக்கிய கூட்டத்திற்கு போய். நேற்று நடந்த அஜயன் பாலாவின் உலக சினிமா வரலாறு , மற்றும் அவரது சிறுகதைகள் புத்தக விமர்சன கூட்டத்திற்கு போயிருந்தேன். நிறைய நாஸ்டால்ஜியாவுடன் சுவாரஸ்யமாய் சென்றது. வந்திருந்தவர்கள் அனைவரும் அவருடய நெருங்கிய நண்பர்கள் என்பதால் பேச்சில் ஒர் நெகிழ்ச்சி இருந்தது. அஜயன் பாலா அவருடய பேச்சில் பழைய நட்புக்களை பேணுவதில் தான் அவ்வளவு சிறந்தவனில்லை என்றாலும் இத்தனை நட்புகள் என்னுடன் இருப்பதில் மகிழ்ச்சியே என்றார். நிகழ்ச்சி முடியும் போது நான் என் வாழ்கையில் திரும்பிப் பார்ப்பதேயில்லை ஏனென்றால் தான் கடந்து வந்த பாதைகள் படு மோசமானவை என்பதால் தான் என்றார்.நிஜம்தான். அவர் கடந்து வந்திருக்கும் பாதையில் அவர் தற்போது அடைந்திருக்கும் வெற்றிக்கு நிறைய இழந்திருக்கிறார். எல்லாம் சரி.. யாராச்சும் கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பீங்களா அஜயன்?:) இரவு கவிதாபாரதி, ப்ரவீன், பாலகுரு அஜயன் ஆகியோருடன் நடந்த விவாதங்கள் நிகழ்ச்சியை விட நெகிழ்வானவை. அஜயனுக்கு வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீப காலமாய் குறும்பட ஸ்கீரினிங் அதிகமாகி கொண்டிருக்கிறது. ஒரு விதத்தில் நல்லது என்று எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் பெரிய திரையில் வரும் மொக்கை படங்களுக்கு போட்டியாய் பல படங்கள் இருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. சினிமாவில் சொல்ல முடியாத, சுவாரஸ்யமான உத்திகளை பயன்படுத்தி வெளிவந்த குறும்படங்களுக்கு மத்தியில் குறும்படம் இயக்கினால் திரைப்படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு, பாட்டு, டான்ஸெல்லாம் வைத்து இம்சிக்கிறார்கள். இன்றைய தயாரிப்பாளர்கள் குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார் என்றால் அதற்கு காரணம் வித்யாசமான திரைக்கதை, கதையினால்தான். அதை உணராமல் சினிமாவைப் பார்த்து குறும்படம் எடுப்பதால் நிச்சயம் அவர்களை இம்ப்ரஸ் செய்ய முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மயன்மாரில் நடக்கும் இனப்படுகொலையை பார்த்தால் புத்தர் போதித்த அஹிம்சை எங்கே போனது என்றே தெரியவில்லை.
இன்றைய காமெடி... சஞ்சய்தத் பற்றிய ரஜினியின் அறிக்கை.
அடுத்த காமெடி மோகன்லால். அவரும் சஞ்சய்தத்துக்கு சப்போர்ட்டாம்.. முடியலை
உன் மீதான அன்பும், காதலும் அதிகமாய் இருப்பதால் நீ என்னிடமிருந்து பிரிந்துவிடுவாயோ என்று பயப்படுகிறேன்.
துப்பாக்கி வச்சிருந்தது தப்புத்தானு சொல்லி மிச்ச இருக்கிற தண்டனைக்காலத்தை அனுபவிக்க ரெடியாயிட்டார்சஞ்சய்தத்.
மன்னிப்பு கேட்பதினால் நாம் தவறு எதிராளி சரியென்று அர்த்தமில்லை. அது நம்முடைய உறவின் நெருக்கத்தை, முக்கியத்துவத்தை காட்டுகிறது #Translation
இப்பல்லாம்.. சி.பி.ஐ ரைடுன்னாலே காமெடி தான். அதுக்காக அரசியல் பவர் ஸ்டார் நாராயணசாமியையெல்லாம் சேர்த்து ஓவர் சீன் பண்றது ர்ர்ர்ர்ர்ரெம்ம்ம்பத் தப்பு!!
திருக்குறளை ஆரேபியில் மொழிபெயர்த்துள்ளார்களாம்

விளம்பரங்கள் மூலமாய் நம்மிடம் பொருட்களை விற்க தலையைத்தின்று தண்ணி குடித்தாவது யோசிக்கிறவர்கள் சில சமயங்களில் பொது மக்கள் நன்மைக்காகவும் யோசித்து விளம்பரம் செய்கிறார்கள். அதுவும் இந்த விளம்பரத்தை பொருளை விற்கும் கடைக்காரரும் இணைந்து செய்திருக்கிறார்கள் எனும் போது பாராட்டவே தோன்றுகிறது. நண்பர் ஒருவர் இந்த விளம்பரத்தைப் பார்தததும் சொன்னார்.. “தலைவரே.. இது மக்களுக்கான விளம்பரமா தெரியலை.. இவனுங்க கால் ட்ரைவர் சர்வீஸ் ஆரம்பிச்சிருப்பானுங்க” என்றார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why are hurricanes normally named after women? When they come they're wild and wet, but when they go they take your house and car with them
கேபிள் சங்கர்
சமீபத்தில் பார்த்த, கேட்ட மாத்திரத்தில் பிடித்த பாடல். மாண்டேஜுகளாகட்டும், விஷுவலாகட்டும், ருமானி மாங்காய் போல உருண்ட அந்த பெண்ணின் முகமாகட்டும் எல்லாமே ரேவிஷிங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காண்டம் 2.0
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அதாங்க நம்ம பில்கேட்ஸ் பவுண்டேஷன் மூலமாய் இன்றைய காலத்திற்கு ஏற்றார் போன்ற ஒரு புதிய ஜெனரேஷன் காண்டமை தயாரிப்பதற்கான ஐடியாவிற்கு ஒரு மில்லியன் வரை கொடுக்க தயாராக இருக்கிறார்களாம். பெரும்பாலான ஆண்களுக்கு காண்டம் போட்டுக் கொண்டு உறவு கொள்வதில் திருப்தி இருப்பதில்லை என்ற எண்ணம் இருப்பதால் உபயோகப்படுத்த தவிர்ப்பதாகவும், பெண்களுக்கான காண்டமில் பயன்பாட்டுப் பிரச்சனையும் அதை எப்படி பொருத்திக் கொள்வது போன்ற ப்ரச்சனைகளும் இருப்பதால் பெண்கள் அதை தவிர்ப்பதாகவும் சொல்கிறார்கள். எனவே இம்மாதிரியான குறைபாடுகளை களையக் கூடிய எண்ணம் கொண்ட கண்டுபிடிப்புகளை இவர்கள் வரவேற்கிறார்கள். grandchallenges.org என்கிற இணையதளம் மூலம் செயல்படுத்த இருக்கிறார்களாம். ஐடியா இருக்கிறவங்க உடனே வேலைய ஆரம்பிங்கப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@அடல்ட் கார்னர்
Why are hurricanes normally named after women? When they come they're wild and wet, but when they go they take your house and car with them
கேபிள் சங்கர்
Post a Comment
9 comments:
grandchallenges.org
"s" in challanges.
Very clever and meaningful video.
1. வீடியோ / அட்வெர்டைஸ்மென்ட் பிரமாதம். கருத்துக் கொடுத்தவருக்கு வாழ்த்துக்கள்.
2. சஞ்சய்க்கு ரஜினியின் வாய்ஸ் ஒரே குடும்பத்தினரின் கருத்தாய் பார்க்கவேண்டும். தூக்கு தண்டனை கைதியின் மனைவும் உறவினர்களும் எப்படி feel பண்ணுவார்களோ அப்படித்தான் திரை உலகம் சஞ்சயை தன்னில் ஒருவராகப் பார்க்கிறது. அதற்காக கோர்ட் / கவர்னர் தண்டனையை குரைக்கக்கூடாது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகனும். எல்லோருக்கும் இது பாடமாயிருக்கணும்.
-ஜெ.
"இன்றைய காமெடி... சஞ்சய்தத் பற்றிய ரஜினியின் அறிக்கை."
hmm .. you are too biased .. Please write about Kamal and Sappadu related only, don't worry about Rajini ..
ஒரே குடும்பமா... விளங்கிடும்... அபடீனா தீவிரவாதிகள் கூட ஒரே குடும்பம்தான்... ஒரு ஆடோகாரன் கொலை செஞ்சா, அவன காப்பாத்த ஆடோகாரங்க எல்லாம் சேர்ந்து போராட்டம் பண்ணலாமா...
நல்ல குடும்பம்...
ரஜினி அவரோட திரை குடும்ப பாசத்த கமலின் விஸ்வரூப பட வெளியீட்டுல கான்பிசுருக்கலாமே... இங்க காவேரி-க்கு உண்ணாவிரதம் இருந்து கருநாடகத்துல மன்னிப்பு கேட்ட மாதிரிதான்...
அப்படி பார்த்தா க்ளஸ்டர் குண்டு போட்ட பிறகு கேட்டபோது "மழை விட்டிருக்கிறது தூவானம் விடவில்லை" என்று கலை நயத்தோடு சொன்னார் தமிழின தலைவர். அதை அடுத்த போஸ்டராக ஒட்டுவோமா?
என்னை பொறுத்த வரை இப்போது எல்லா அரசியல் கட்சிகளும் நடத்தும் நாடகங்கள் எல்லாம் வரும் தேர்தலை மையமாக வைத்துதான். வோட்டை வாங்கிவுடன் தமிழ் ஈழமா அது உசிலம்பட்டி பக்கதுலையோ தூத்துக்குடி பக்கதுலையோ இருக்கு, "அந்தா அந்த பொட்டி கடையில கேளுங்கன்னு " என்று சொல்லிவிட்டு தங்கள் கட்சி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள்.
ஈழ தமிழர்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்றாலும் பரவில்லை அவர்கள் பிணங்களை தோண்டி தின்னும் வேலையே செய்யாமல் இருந்தால் போதும்.
Sir,
the photo of that child balachandran makes whole tamils into deep feelings and the students show's it to the entire world...
today both parties playing with it ...really a shame...
but u r sabaass..sariyaana potti...not good...
இதில என்ன போட்டி வேண்டிகிடக்கு
த.ம: 1
Post a Comment