Thottal Thodarum

Mar 9, 2013

சாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்

நானும் கே.ஆர்.பியும் ஒரு வாரம் முன்பு சைதை ஜோன்ஸ்ரோடு வழியாய் சப்வேயில் இறங்காமல் இடது பக்கம் ஒரு சின்ன ரோட்டின் வழியே போனால் அரங்கநாதன் சப்வேவுக்கு போகலாம் என்ற அந்த சூடியம்மன் பேட்டைக்கு போகும் சிறு ரோட்டில் நுழைதோம். இரவு நேரம் வேறு சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி வண்டியை விட, நல்ல வாசம் ஒன்று வந்தது. குருமா வாசனை. வண்டி தானாகவே ஆப் ஆகிவிட, திரும்பிப் பார்த்தேன் மகாலட்சுமி மெஸ் என்று போர்டு இருந்தது.


தோசை, சப்பாத்தி, பரோட்டா, வீச்சு பரோட்டா என்றார்கள். ஆளுக்கொரு வீச்சு பரோட்டாவை ஆர்டர் செய்தோம். கிரிஸ்பான வீச்சு பரோட்டாவுக்கு அருமையான குருமா. அதிக மசாலா இல்லாமல் சுவையாக இருந்தது. இதன் வாசம் தான் என்னை இந்தக் கடைக்கு அழைத்து வந்தது. பொங்கல் இருப்பதாக சொன்னார்கள். சரியென்று ஒரு மிளகுப் பொங்கல் ஆர்ட்ர் செய்து இரண்டு பேரும் ஆளுக்கு பாதியாய் போட்டுக் கொண்டோம். அதிக நெய்யோ, அல்லது டால்டாவோ இல்லாமல் கையில் ஓட்டாத வகையில் நன்றாக வெந்திருந்தத் பொங்கல். உடன் தொட்டுக் கொள்ள, வெங்காய போட்ட காரசட்னி, சாம்பார், தேங்காய் சட்னி. நிஜமாகவே அவ்வளவு சுவை. காரசட்னிக்கும் பொங்கலின் நடுவே இருக்கும் மிளகின் டேஸ்டுக்குமிடையே நாக்கு விறுவிறுவென இருக்க, சட்டென அதனைக் குறைக்க, கொஞ்சம் சாம்பாரையும், ஒரு புரட்டு தேங்காய் சட்னியிலும் ஒரு வாய் போட்டால் ஆஹா. .ஆஹா.. டிவைன்..  ஆளுக்கொரு தோசையை சாப்பிட்டு விட்டு பில் கேட்டோம் மொத்தம் அறுபத்திஎட்டு என்றார்கள். 

இவ்வளவு நியாயமான விலையில் சுவையான உணவை தருகிறார்கள் என்பதால் நான் கடை உரிமையாளரை கூப்பிட்டு பாராட்டினேன். இரண்டு வருடமாய் இருக்கிறதாம். மதியத்தில் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்ததாகவும்,  ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாய்  தொடர முடியவில்லையென்றும், மதியத்தில் கலந்த சாதங்கள், இரவில் டிபன் என்று போட்டுக் கொண்டிருப்பதாய் சொன்னார்.  எப்படி இந்த கடையை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. பட்.. சைதையில் ஒர் சுவையான வெஜ் மெஸ் டிபனுக்காக இருப்பது சந்தோஷமாய் இருந்தது. 
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

arul said...

thanks for sharing anna

குரங்குபெடல் said...

"காரசட்னிக்கும் பொங்கலின் நடுவே இருக்கும் மிளகின் டேஸ்டுக்குமிடையே நாக்கு விறுவிறுவென இருக்க, சட்டென அதனைக் குறைக்க, கொஞ்சம் சாம்பாரையும், ஒரு புரட்டு தேங்காய் சட்னியிலும் ஒரு வாய் போட்டால் ஆஹா. .ஆஹா.. டிவைன்.. "

கதை நாயகனாய் . .

கேபிள் சங்கர் உண்டு கலக்கும்



" சாப்பாட்டுகாரன் "

விரைவில் . . . .

Forex Unlimited Wealth said...

தெரு பேரோ அடையாளமோ சொன்னால் நன்றாக இருக்கும்

Anonymous said...

குரங்குபெடல்...

கேபிள் சங்கர் சூப்பர் என்றால் நீங்கள் சூப்பரோ சூப்பர்... உங்களுக்கென்று ஒரு ரசிகர் மன்றமே உருவாகி விட்டது என்றால் நம்புவீர்களா :-)

Dwarak R said...

சைதை ஜோன்ஸ்ரோடு வழியாய் சப்வேயில் இறங்காமல் இடது பக்கம் ஒரு சின்ன ரோட்டின் வழியே போனால் அரங்கநாதன் சப்வேவுக்கு போகலாம்

It is not left. It is right. Took more than 30 minutes to find that.