Thottal Thodarum

Mar 16, 2013

பரதேசி

 பி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம். சமீபகாலமாய் பாலா இலக்கியவாதிகளோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இம்முறை நாஞ்சில் நாடன்.


1939 சாலூர் என்கிற கிராமத்திலிருந்து ஆரம்பிக்கிறது கதை. அங்கே ஓட்டுப் பொறுக்கி என்கிற ராசா தண்டோரா போட்டு நாலு வீட்டில் வாங்கி சாப்பிட்டு வாழ்பவன். அங்கம்மா தமிழ் சினிமா வழக்கப்படியான சூட்டிகையான பெண். அவளுக்கும் ஓட்டுப் பொறுக்கிக்கும் லேசாக பத்திக் கொள்கிறது. அவளது அம்மா அவனுக்கு தன் பெண்ணை தர மாட்டேன் என்கிறாள். அதனால் கூலி வேலைக்கு சென்றாவது பிழைக்கலாம் என்று பக்கத்து ஊருக்கு போகும் போது அங்கே வேலைக்கு ஆட்களை எடுக்கும் கங்காணி இவனை பார்க்கிறார். ஊருக்குள் உள்ள அத்தனை பேரையும் நல்ல சாப்பாடு, சாராயம், உடை, இருக்க இடம் என்று எல்லா வசதிகளோடு வேலைக்கு சம்பளமும் போட்டுக் கொடுப்பதாய் ஆசை வார்த்தை சொல்லி அவர்களை தேயிலைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாய் ஆக்கிவிடுகிறார். அங்கிருந்து தப்பிக்கவே முடியாத படியான நிலையில் வருடங்கள் கடக்கிறது. அவர்களுக்கு விடிவு காலம் பிறந்ததா? அங்கம்மா, ஒட்டுப் பொறுக்கியின் மற்றும் அங்கிருப்போரின் வாழ்க்கை என்னானது என்பதுதான் கதை.

அதர்வா இத்தனை நாள் காத்திருந்தது ஒர் நல்லதுக்குத்தான். உடல், மனம் எல்லாவற்றையும் ஒர் நிலைப்படுத்தி நடித்த்திருக்கிறார். அவருடய கேரியரில் இது ஒர் முக்கியமான படமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல  அங்கம்மாவாக வரும் வேதிகாவின் மேக்கப் நன்றாக இருக்கும் அளவிற்கு அவரது கேரக்டரில் வலிமை இல்லை. தேயிலைத் தோட்டத்தில் ரூம் மேட்டாக வரும் மரகதம் என்கிற தன்ஷிகாவின் நடிப்பு ஓகே. ஊரெல்லாம் பொண்டாட்டியாய் வைத்திருக்கும் குஷால் பேர்விழி விக்ரமாதித்யன், அந்த வெட்கப் கல்யாணப் பெண், கங்காணி, தேயிலைத் தோட்ட வைத்தியராய் வரும் நம்ம சுப்ரமணியபுர சித்தன், எல்லாருக்கு தாயத்தை கட்டிவிட்டு கூலியை எல்லாம் தனதாக்கிக் கொள்ளும் சாமியார் என குட்டிக் குட்டிப் பாத்திரங்களில் நடிப்பவர்களின் நடிப்பு அட்டகாசம்.
படத்திற்கு மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் செழியன். முதல் காட்சியில் சாலூரின் குடிசைகளுக்கூடே பயணிக்கும் ஷாட்டில் ஆரம்பித்து, கங்காணியின் பின்னால் 48 நாட்கள்  சாலூர் மக்கள் பயணிக்கும் பயணம், என்று தொடர்ந்து தேயிலைத் தோட்டத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஓடி, நம்மை அங்கேயே கொண்டு போய் இறக்கிவிட்டு விடுகிறார். முதல் பாதி முழுக்க வரும் செபியா டோனும், இரண்டாம் பாதியில் பச்சை பசேல் தேயிலைத் தோட்டமாய் காட்டாமல் அங்கே இருக்கும் இலைகளை கரும்பச்சையாய் ஒர் இருண்ட இடத்தில் வந்திருக்கிறார்கள் மிகைப்படுத்தாத பச்சையில் காட்டியிருப்பது க்ளாஸ். இசை ஜி.வி.ப்ரகாஷ்குமார்.  ஓ செங்காடே பாடலைத் தவிர மற்ற பாடல்கள் பெரிதாய் கவரவில்லை. இளையராஜா என்கிற மகா கலைஞனை இம்மாதிரியான கதைகளுக்கு பயன் படுத்தாமல் விட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வைக்கிறார் பின்னணியிசையில். கிஷோரின் எடிட்டிங்கில் நிறைய எடுத்து செதுக்கியிருக்கிறார்கள் என்பது படத்தில் வரும் காட்சிகளின் ஜம்புகளில் தெரிகிறது. பட் குட் ஒர்க். முக்கியமாய் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு நபர் கலை இயக்குனர் சி.எஸ்.பாலசந்தர் தான். உடை இருக்கும் இடம், குடிசைகள், அவர்கள் பயன் படுத்து பண்டங்கள் என்று நிறைய உழைத்திருக்கிறார்.  வசனம் நாஞ்சில் நாடன். கல்யாணம் செய்யாமலேயே அங்கம்மா கர்பமாகியிருக்கிறாள் என்பதை லெட்டரில் படித்தை வைத்து  ஊர் சாமியார் “இவனுக்கு இடுப்புல க்யிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?’ என்று கேட்குமிடத்தில் மட்டும் தெரிகிறார். இதற்கு இவர் எதற்கு?.

சில கதைகளை சில பேரால் மட்டுமே கையாள முடியும் அந்த வகையில் இம்மாதிரியான கதையை பாலாவால் மட்டுமே இவ்வளவு ராவாக தர முடியும். என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.  ஆரம்ப சாலூரை காட்டும் காட்சியில் ஒரே ஒரு ட்ராவலில் மொத்த ஊரையும் காட்டிவிட்டு,  ஒட்டுப் பொறுக்கியை அறிமுகப்படுத்திய விதத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஆக்கிரமிக்கிறார்.பழைய கால திருமணம். அவர்களின் உணவு.  பழக்க வழக்கங்கள்,  என  நிறைய டீடெயிலிங்கில் மனுஷன் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்று புரிகிறது.  இடைவேளை வரை ஊரைக்காட்டுவது, வேதிகா, அதர்வாவினிடையே ஏற்படும் நெருக்கம் என்று ஒரு மாதிரி நேரம் ஓட்டும் வகையாய்த்தான் தெரிகிறது. அதிலும் வேதிகா கேரக்டரின் மேல் ஒர் அழுத்தமில்லை. வழக்கமான தமிழ் சினிமா லூசுப் பெண் கேரக்டரைத்தான் வலிந்து திணித்திருக்கிறார்.  பெரியப்பா விக்ரமாதித்யன் கல்யாணத்தின் போது இறந்துவிட, அந்த செய்தி அதர்வாவுக்கு தெரிந்தால்  கல்யாணத்தை நிறுத்திவிடுவான் என்பதால் ஊரே சேர்ந்து கல்யாணத்துக்கு ஆதரவாய் ஆவருக்கு தெரியாமல் அவரது உடலை ஒளித்து வைக்க,  அவ்ரில்லாம கல்யாணம் செய்யக் கூடாது என்று நடுநடுவே புகுந்து அதர்வா கலாய்த்துக் கொண்டிருக்க,  அவரை கலாய்க்க, வேதிகா உங்க பெரியப்பாவை தேடிக் கூட்டி வந்தால்தான் சாப்பாடு என்று ஓட்டும் காட்சிகள் சுவாரஸ்யம். ஆனால் அதே நேரத்தில் இவர்களுக்குள்ளான நெருக்கத்திற்கு சரியான காட்சிகள் இல்லை.  இவர்களுளான காட்சிகள் நேரக்கடத்தியாகவே பயன்பட்டிருக்கிறது. அதே போல பெரியப்பா விக்ரமாதித்யனுக்கும் அதர்வாவிற்குமிடையே உள்ள நெருக்கதையும் இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். ஏனென்றால் அவ்வளவு தேடியவன் அநத சாப்பாட்டுக் காட்சிக்கு பிறகு அவரின் பிணம் என்னவானது என்று வசனத்தில் கூட சொல்லவில்லை. 

தேயிலைத் தோட்டதிற்கு பயணப்படும் காட்சியிலிருந்து நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிறார் பாலா. அருமையான பாடலுடன் மாண்டேஜுகளாய் சாலூர் மக்களின் 48 நாள் பயணம் நமக்கு வலிக்கிறது. பாதி வழியில் குற்றுயிரும் கொலை உயிருமாய்  தன் கணவனை விட்டு விட்டு கூட்டம் கிளம்பும் போது மனைவியை தரதரவென தரையில் இழுத்துக் கொண்டு தங்களுடன் செல்லும் காட்சி அப்படியே உரைகிறது. அதன் பிறகு தேயிலைத் தோட்டக் காட்சிகளில் அவர்கள் படும் சோகம், வேதனை ஆகியவைகளின் வலி நம்முள் அப்படியே இறங்குகிறது.  ரூம் மேட்டாய் போய் சேரும் தன்ஷிகாவின் குடிசையில் அவள் அனுமதிக்காமல் இருக்க,  வெகு நாட்கள் பனியில் படுத்துக் கொண்டு அதர்வா கஷ்டப்படுவது, தன்ஷிகாவுக்கும், அதர்வாவுக்குமிடையே ஏற்படும் நட்பு போன்ற நெருக்கத்திற்கான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் டீடெயிலிங் இருந்திருக்கலாம். அதுவும் இல்லாமல் கணவன் மனைவி இல்லாதவர்களை ஒன்றாய் தங்க வைப்பார்களா? என்பது கொஞ்சம் கேள்விக் குறியாய்த்தான் இருக்கிறது. அப்படி தங்க வைப்பார்கள் என்றால் உடன் வரும் புதுக் கல்யாண ஜோடியையும் பிரித்து வைக்கலாமே?. இன்னொரு சந்தேகம் 48 நாள் நடந்து வரும் போதும் சரி.. தேயிலை தோட்டத்தில் பணி புரியும் போதும் சரி. எல்லோருக்கும் தாடி அடர்ந்து வளருகிறது. ஆனால் தலை மட்டும் அதே சூப்பர் சம்மர் கட்டுடன் இருப்பது கொஞ்சம் இடறுகிறது. எல்லோரும் வெற்று மார்போடு இருக்க, அதர்வா மட்டும் கோணி போன்ற துணியில் ஒர் சட்டையை போட்டுக் கொண்டிருப்பது எப்படி?.  அதே போல திருமணத்திற்கு எல்லோருக்கும் நெல்லுச் சோறு போடும் காட்சியில் இப்போது நமக்கு கிடைக்கும் பாலிஷ் செய்யப்பட்ட பளிச் வெண்மை சாதம் எப்படி?.
இரண்டாம் பாதி முழுவதும் பாலாவிற்கே உரிய நக்கல் நையாண்டி அதிகம். வெள்ளைககாரனுக்கு வைப்பாக இருக்கும் ஒருத்தியிடம் சேதி ஏதாச்சும் இருக்கானு சித்தா டாக்டர் கேட்பதும். அவள் இருக்கு இருக்கு நேத்து முச்சூடும் என் மடியில்தானே படுத்திட்டிருந்தது. என்று சொல்லி வெள்ளைக்காரன் போல டார்லிங் என்று பேசிக் காட்டுமிடம்.  சித்தா டாக்டர் வெள்ளைக்காரன் பேசும் இங்கிலீஷுக்கும்,  பெண்கள் பேசும் தமிழிற்கு ஆங்கிலத்தில் சொல்லும் ட்ரான்ஸ்லேஷன். விஷகாய்ச்சல் காரணமாய் தோட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து இறந்து கொண்டிருக்க,  அங்கே வரும் நிஜ கிறிஸ்துவ டாக்டர் தம்பதிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மக்களை காபாற்றுவதாய் சொல்லிக் கொண்டே அவர்களை மதம் மாற்றம் செய்யும் காட்சியில் அவர்கள் பேசும் வசனங்களும், சித்தா பேசும் வசனங்களும் செம ரிலீப். வெள்ளைக்காரன் வேலை செய்யும் பெண்களை ஆள்கிறான் என்பது புதிய விஷயமில்லை என்றாலும், வெள்ளைக்காரன் புதியதாய் கல்யாணமான பெண்ணை அடையமுடியவில்லை என்பதால் கங்காணியை அடித்துப் பின்ன,  பெண்ணை வழிக்கு கொண்டு வர, அவள் வேலையில் ப்ரச்சனை செய்து வேறு வழியில்லாமல் கணவனே அவளை வெள்ளைக்காரணுக்கு தாரை வார்த்துவிட்டு, அவள் வருவதற்காக காத்திருக்கும் காட்சி அழுத்தம்.  ஆனால் அந்தப் பெண்ணை அவளின் நடத்தைக்காக அதர்வா பேசாம்ல் தவிர்ப்பது கொஞ்சம் இடறல்தான். கல்யாணம் ஆகாமல் கர்பமாக்கிவிட்டு வந்தவன், இங்கிருக்கும் நிலைய அறிந்தும் அவர்களை துச்சப்படுத்துவது ஏன்? வழக்கமாய் பாலா படத்தில் வரும் சம்பந்தமில்லா குத்து பாட்டு போல க்ளிஷேவாக வரும் அந்த ஏசு பாட்டுதேவைதானா?

தேயிலைத் தோட்டத்தில் அவர்கள் படும் வேதனையை தனியே சொல்வதைவிட, பாடல்களின் நடுவே மாண்டேஜுகளாய் காட்டிய விதம் அருமை. எங்கே வழக்கம் போல பாலா யாரையாவது மண்ணில் போட்டு புரட்டியெடுத்து விடுவாரோ? யாரையாவது அம்மணக்குண்டியாய் நிற்க வைத்துவிடுவாரோ?  எவன் கழுத்தையாவது பல்லாலேயே கடித்து குதறி வைத்துவிடுவாரோ என்ற பயத்தை கொடுத்திருந்த பாலா நீண்ட காலத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத ஒர் க்ளைமாக்ஸை கொடுத்து வாவ்!!! என்று சொல்ல வைத்துவிட்டார்.  படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால் நம்மால் டீ சாப்பிடவே தோன்றாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோன்றவில்லை. இன்று மட்டும் மூன்று டீ குடித்துவிட்டேன். தமிழ் சினிமாவில் ஒர் நாவலை, வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்த எடுக்க செய்த முயற்சியில் ஒரு சில இன்சுகள் பாலா தாண்டி வந்திருக்கிறார் என நாவலை படித்தவர்கள் கூறுகிறார்கள். வாழ்த்துகள்.
கேபிள் சங்கர்


Post a Comment

48 comments:

நாரதர் கலகம் said...

you proved again that you dont like bala's movie. I read many reviews no one criticised except you. Shame on you Mr. Sankar.

நாரதர் கலகம் said...

i thought you review is fair to everyone but not for MR.BALA

சில்க் சதிஷ் said...

Thanks thala

சில்க் சதிஷ் said...

Super and Thanks Thala

ஷண்முகா said...

Nice

ஷண்முகா said...

Nice looks like hit

ஷண்முகா said...

Nice

tjsadhik said...

இப்படம் பார்க்கையில் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு பிழைப்பு தேடி வளைகுடா நாட்டிற்கு வந்து வேதனைகளை தினம் தினம் அனுபவித்து கொண்டிருக்கும் என் மக்களின் நிலையை படம் பிடித்து காட்டியது போன்று இருந்தது.இங்கிருந்து பார்க்கும் பொழுது அதன் வழியை என்னால் உணர முடிந்தது.கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Sadhik -Abu Dhabi

வருண் said...

***படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால் நம்மால் டீ சாப்பிடவே தோன்றாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோன்றவில்லை. இன்று மட்டும் மூன்று டீ குடித்துவிட்டேன்.****

நீங்களும்தான் வேட்டை படம் பாத்துப்புட்டு தியேட்டர் காண்டீன்ல சண்டை போட்டேன்னு சொன்னீக. எல்லாருமா உங்கள மாரி சண்டை போட்டானுக?

படம் தரமா வந்திருக்கனால படத்தை ரொம்ப குறை சொல்ல முடியல போல இருக்கு, அதான் இந்த மாரி சேர்த்துவிட்டு உங்க வயிரை குளிர வச்சுக்கிறீக. :)))

அடுத்த முறை ஐஸ் டீ ட்ரை பண்ணுங்க! :)

வருண் said...

///மனசே இல்லாமல் பாராட்டி இருக்கிறீர்கள்
கஷ்டப்பட்டு குற்றம் கண்டு பிடித்து இருக்கிறீகள்
உங்களது வழக்கமான விமர்சனம் போல இல்லை///

பிளஸ் 1.

விசுவரூப விமர்சனத்தை பாத்தா சும்மா வம்புக்கு உசத்தி எழுதி இருப்பாக.

ஆனால் உண்மை என்றுமே வெல்லும்! பாலாவின் பரதேசி, இவர் சோப்புப்போட்டு விமர்சன்ம் செய்த விஸ்வரூபத்தை, கீழே தள்ளி ஏறி மிதித்துவிட்டது- சத்தியம் திரையரங்கில் மட்டுமல்ல!

நன்னயம் said...

வருணுக்கு கேபிள் மீது என்ன காண்டு ????
உங்களின் ஜென்ம எதிரியான கமலை பாராட்டி எழுதி விட்டார் என்பதாலா ???

இங்கு பின்னூட்டம் இட்டிருக்கும் அன்பர்கள் சங்கரிடம் விமர்சனத்தை எதிர்பார்கின்றார்களா அல்லது ஜால்ராவை எதிர்பார்க்கின்றார்களா ??

பரதேசி திரைப்படம் மோசமான திரைப்படம் என்று சொல்லவேயில்லை. அந்த படத்தில் உள்ள பல நிறைகளையும் சில குறைகளையும் குறிப்பிட்டு விமர்சனம் எழுதியிருக்கின்றார் .

நிறைகள் மட்டும் போட்டு எழுதினால் அதற்க்கு பெயர் ஜால்ரா. விமர்சனம் அல்ல

வருண் said...

****Ethicalist E said...

வருணுக்கு கேபிள் மீது என்ன காண்டு ????****

OPEN your EYES and read the COMMENTS other than mine!

அவங்களுக்கும் கேபிள் மேலே காண்டா??

He gets what he deserves!

Cable knows how to moderate and defend himself if he needs to.

WHY DO YOU speak for HIM???!!!

குரங்குபெடல் said...

கஷ்டப்பட்டு பல வரிகளில்

பாலா மீது துவேஷம் கொண்டவர் என்ற பிம்பத்தை

உடைக்க முயற்சி செய்துள்ளிர்கள் . . .



"படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால் நம்மால் டீ சாப்பிடவே தோன்றாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோன்றவில்லை. இன்று மட்டும் மூன்று டீ குடித்துவிட்டேன். "

படம் ரொம்ப சோர்வு ஆக்குவதை


போட்டு உடைத்துவிட்டீர்கள்



நான் ரெண்டு காபி . . .



படத்தை பத்தி எதுவும் அப்ப தோணலை . . .



காபிக்கு காசை யார் குடுக்குரதுன்ற யோசனைதான்



ஓடுச்சி . . .


Unknown said...

Ethicalist: Paradesi will be one of the best film in world cinema, but cable review was very bad, even he didint find the logic mistakes in tuppaki,viswaroopam, even though that flims had lot of logic mistakes, but he find very silly mistakes in paradesi. his review was depend on the persons.

saravanan selvam said...

அதர்வாவுகும் வேதிகாவுக்கும் இருக்கும் காதலை இன்னும் நன்றாக சொல்லி இருக்கலாம்.படம் சின்ன படம் தான்.அதனால் அதர்வாவுகும் வேதிகாவுக்கும் இடையில் இருக்கும் காதல் காட்சிகளை இன்னும் நிறைய காட்டி இருக்கலாம்.உங்கள் விமர்சனத்தில் நன்றாக தெரிகிறது நீங்கள் எந்த அளவிற்கு படத்தை உன்னித்து பார்துளீர்கள் என்று.பாலாவின் திரைக்கதை படத்திற்கு மிக பெரிய பலம்.உலகத்தரம் படம் செய்வதில் பாலா முக்கால் அடி கிணறு தாண்டி விட்டார்.படத்தில் வசனத்திற்கான சவுண்ட் போதுமான அளவிற்கு இல்லை.இந்த படம் அங்காடி தெரு படத்தின் கருவை பிரதிபலிகிறது.அதிலும் வேலை செய்யும் இடத்தில வேலையாட்கள் பஞ்சம் உள்ள கிராமத்தில் இருந்து அழைக்கப்பட்டு அடிமையாய் நடத்தபடுவார்கள்.இதிலும் அப்படியே.ஆனால் கதை நடக்கும் இடமும்,காலமும் வேறு.தேயிலை தோட்டத்திற்கு பயண படும் காட்சியிலிருந்து படம் முடியும் வரையில் படம் நம்மை படதினுல்லே ஒன்ற செய்து விடுவதில் எந்த அயமும் இல்லை.

மயில் றெக்க said...

திரைத்துறையில் இருக்கும் ஒருவரால்
இந்த படத்தை இப்படிதான் விமர்சனம் பண்ண முடியும்

இதை விமர்சனமாக படித்தால் அதிருப்தியே

உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ற முறையில் பார்த்தல், உங்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபடுவது சகஜம் தானே

அதே போல் பாலா, உங்களை மாதிரி ஜாம்பவான்கள் குறை சொல்ல முடியாத படம் எடுத்தால் அது எங்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு அதிகம் விஸ்வரூபம் மாதிரி

பரதேசி எங்களுக்கான படம்
விஸ்வரூபம் உங்களுக்கான படம்

Unknown said...

உங்க விமர்சனத்துல திருப்தியே இல்ல. சப்புனு இருக்கு. கடமைக்கு எழுதுன மாதிரி இருக்கு.

அசோகபுத்திரன் said...

கவுண்டமணி ஒரு படத்துல சோத்துக்கு நடுவுல செங்கல்ல தூக்கி வச்சுகிட்டு சோத்துல கல்லுடான்னு சண்ட போடுவாரு... நீங்க சொல்ற நொட்ட நொள்ள கூட அதே மாதிரிதான் இருக்கு... சாதம் வெள்ளையா இருக்கு.. முடி வளரல.. யாருப்பா அது ஜால்ரா பத்தி பேசுனது.. தலைவரோட விஸ்வரூபம் விமர்சனம் படிங்க பாஸூ... தலைவரு க்ளாஸே எடுத்திருப்பாரு... சத்தம் அமெரிக்கா வரைக்கும் கேட்டுருக்கும்...

அசோகபுத்திரன் said...

கார்த்திக் கவியின் கமெண்டை கன்னா பின்னாவென வழிமொழிகிறேன்...

நன்னயம் said...

@வருண்,
"OPEN your EYES and read the COMMENTS other than mine!

அவங்களுக்கும் கேபிள் மேலே காண்டா??"
உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டவர்கள் கேபிளின் விமர்சனத்தில் நிறைவு இல்லை என்றுதான் குறைபட்டார்கள்.

ஆனால் நீங்கள் மட்டும் தான் விஸ்வரூப விமர்சனத்தை இங்கு இழுத்துள்ளீர்கள். விமர்சனத்தில் குறை இருந்திருந்தால் அதை சுட்டி காட்டலாம். எதற்க்கு இங்கு விஸ்வரூபம் பிரச்சினை. விஸ்வரூபம் கேபிளுக்கு நன்கு பிடித்திருக்கின்றது. அது அவர் சார்ந்த ரசனை சம்பந்தப்பட்டது.
உங்களுக்கு கமல் பிடிக்காது என்பதற்க்காக விஸ்வரூபத்தை மொக்கை என்று விமர்சனம் போட முடியாது.

நீங்கள் பிரபல கமல் துவேசி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

("விசுவரூப விமர்சனத்தை பாத்தா சும்மா வம்புக்கு உசத்தி எழுதி இருப்பாக.")

நன்னயம் said...

@ Your Best,
"Paradesi will be one of the best film in world cinema, "

தாங்கமுடியல. Paradesi will be one of the best film in tamil cinema என்று சொல்லியிருந்தால் ஏற்கலாம். அதைவிட்டு இப்படி சொன்னால் ................................. இப்பவே கண்ணை கட்டுதே

நன்னயம் said...

இது போதாது என்று ஒரு ஒஒஒஒஒஒஒஒ லக சினிமா ரசிகர் முகநூலில் சொல்லியிருந்தார் "நான் கடவுள்" படம் வந்த பின் தமிழ் நாட்டில் பிச்சைகாரர் மீது மக்கள் அன்பாக இருக்கின்றார்கள் என்று.

இந்த மாதிரி status போடும் இவர்களை என்ன செய்வது ???

Unknown said...

விமர்சனம் அருமை
- பின்னூட்டப் புலி

dr_senthil said...

ஒன்பதுல குரு படம் பார்த்த பாதிப்பு இன்னும் தீரவில்லை போலும்.. பாலா படத்தில் குறைகளை பாடுபட்டு கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் மட்டுமே போதும் ஒரு நல்ல இயக்குனராக உருவெடுக்க முடியும் என்று யாரவது சொன்னாங்களா ?

dr_senthil said...

போஏஸ் கார்டன் இடத்தில பாலா வீடு வாங்கியது தெரிந்த பின் விமர்சனம் எழுதியது போல் உள்ளது

ARAN said...

நிறைகள் மட்டும் போட்டு எழுதினால் அதற்க்கு பெயர் ஜால்ரா. விமர்சனம் அல்ல...!! நீங்க விஸ்வரூபம் பத்திதானே சொல்றீங்க Ethicalist E ?

Raj said...

இளையராஜா என்கிற மகா கலைஞனை இம்மாதிரியான கதைகளுக்கு பயன் படுத்தாமல் விட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வைக்கிறார் பின்னணியிசையில்.

Intha unmai Niraya iyakkunarkalukku puriyaamal povathu eno?

Mani, Bharathiraja, shankar, Vijay, kamalhasan endru pattiyal Neelukirathe?

ARAN said...

As a fan of your review mee too had the same opinion like others Cableji.
Ok looks like biased.From your recent reviews Viswaroopam has more sympathy because of the things happened before its release and more hatred towards Paradesi its because of the Reality teaser episode.From your recent Tweets in Twitter we can judge your review before particular film's release.These are all changed recently in your reviews.Ok this is my humble opinion.Any how I will always like your write ups.If anything in this comment hurts you please do not approve this one this is for your view only.Thanks Ji

ரமேஷ் வீரா said...

அருமை....

Shan said...

Cable,
You can do one thing. Review the movie only if you like the director no matter how talented he is. This way, you can avoid writing some fiction.

Shan

Unknown said...

@ ethicalist: Neenga oru jalra ethicalist... viswaroopam endra padthil americanuku jalra adithadhai potri pesina vargathai sarandhavargal neengal .. ungalaku paradeshi kandipaga pidikadhu... pidikavum vendam... cable sankarin mosamana vimarsanathai support seidhu pesum poludhe adhu nandragave therigiradhu... idharku indha varuda national awards kandipaga padhil sollum

Katz said...

//படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால் நம்மால் டீ சாப்பிடவே தோன்றாது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோன்றவில்லை. இன்று மட்டும் மூன்று டீ குடித்துவிட்டேன்//

how cheap this one....looks like you are going to spend your life by writing biased review only...

please stop writing review and do that in some local tv channel... like charu (your kind)

may god save you....

unmaiyalan said...

அட ...நாட்டாமையா தீர்ப்பு சொல்லிட்டாரு ,,,,,,,இனி என்ன ..///// பரதேசி ...ஒரு குப்பை படம்..படத்தில் சந்தானம் இல்லை...பவர் ஸ்டார் இல்லை ...இதெல்லாம் ஒரு படம் ....எங்களுக்கு கலகலப்பு ....தில்லு முல்லு மாதிரி படம் வேண்டும் ......Ethliclist E ...அது என்ன பேரோ .....இவருக்கு முஸ்லிம் எதிர்ப்பு என்றால் அல்வா ?....
இவர் விஸ்வரூபம் ஆதரிபார் ....கமல் காரணம் இல்லை ...

Anbazhagan Ramalingam said...

அருமை...as usual

இவன் சிவன் said...

நீங்க இந்த விமர்சனம் எழுதனதுக்கு பதிலா படத்த கொஞ்சம் நல்லா பாத்திருக்கலாம். மொக்க ஹிந்தி படத்துக்கெல்லாம் சப்பக்கட்டு கட்டுவீங்க.அது சரி நிறைய பேரு பாராட்டுனா நம்ம மாத்தி எழுதுனாத்தானே நமக்கும் கடை ஓடும்.குறை சொல்றது தப்பேயில்லை ஆனா அதை எழுத்தில் நியாயப்படுத்திருக்கனும்.ஒன்னு நீங்க சரியா எழுதல இல்லேன்னா சரியா படம் பாக்கல.

kanavuthirutan said...

நான் உங்களுடைய விமர்சனத்தில் இருந்து பல இடங்களில் வேறுபடுகிறேன் கேபிள்ஜி...

JJ said...

என்ன நடந்திருக்கும்ன்னு ஓரளவுக்கு புரிஞ்சிக்க முடியிது. அந்த டீசர் வீடியோ பார்த்து அவசரப்பட்டு தப்பா எழுதி போஸ்ட் போட்டுட்டிங்க. படம் ஒருவேளை நல்லா இல்லாம இருந்திருந்தா, டீசரை வெச்சி கிழி கிழின்னு கிழிச்சிடலாம்ன்னு நெனச்சிருப்பிங்க. ஆனா படம் ரொம்ப நல்லா வந்திடுச்சி.
விமர்சனம் எழுதாம விட்டா எல்லாரும் கேள்வி கேப்பாங்க
அதனால, ஏனோ தானோன்னு ஒரு விமர்சனம். ஏன் ஏன் கேபிள் இப்படி ????????????

இதுல என்ன கொடுமைன்னா இவ்ளோ வருஷம் சினிமா துறையில இருக்கீங்க, நீங்களே அது வெறும் போலி கம்புன்னு கண்டுபிடிக்கல.
என்னை மாதிரி புதுசா பார்க்கறவங்க என்ன நெனப்பாங்க ?
அப்படி என்னதான் இவ்ளோ வருஷம் அங்க பண்ணிட்டு இருந்திங்கலோ?

sivasenthilkumar said...

நண்பரே நீங்கள் ...எந்த ஒரு விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு நடுநிலையான விமர்சகர் (அ ) சினிமாவின் காதலன் என்று நினைத்தேன் . இவ்வளவு வெறுப்புடன் எழுதியதற்கு விமர்சனம் போடாமல் இருந்திருக்கலாம் .

Unknown said...

Director Bala Says in Vijay TV interview that i am responsible to clarify the public who doesn't know about cinema and making, but those who are from cine industry must be knew about Making, still if they biased against the teaser, i could say what they are doing in cinema.?????

Unknown said...

விஸ்வரூபம் படத்தக்கு பரதேசி படம் 100% மேல், நிச்சயம் தேசிய விருதுகள் கிடைக்கும்.

Unknown said...

ஐயா, மனது தாங்கவில்லை. 1939 இல் வெண் சாதம் எப்படி வந்தது என்று கேட்கும் சீரிய திறனாய்வு மிக்க தங்களின் மதி நுட்பத்தை பார்த்து உண்மையான தடிக்கும், சினிமா தடிக்கும் வித்தியாசம் தெரியாதா என்று கேட்கிறார்கள்! நீங்கள் யார்? சினிமாவையே ஆழ அகல அலசி ஆராய்ந்து முதன் முறையாக தமிழ் திரை வரலாற்றில் 'சினிமா வியாபாரம்' எனும் அரிய நூல் வடிவ கல்வெட்டை தந்தவராயிற்றே! வெறும் 100 ரூபாய் கொடுத்து ஒரு படத்தை பார்த்து விட்டு என் போன்ற வெறும் ரசிகர்கள் மனம் போன போக்கில் உங்களை துளைத்து எடுப்பது மன வேதனையை அளிக்கிறது.

இதற்காகவே தாங்கள் விரைவில் 'சினிமா தொழிநுட்பம்' எனும் இன்னொரு கல்வெட்டை எழுதி என் போன்ற, உங்கள் நேர் மிக்க பார்வையும், வழுவற்ற விமர்சனமும், விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட சிந்தனையையும் ஆராதிக்கும் ரசிகர்களின் மனங்களை குளிர்விக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் தங்களை தகைமையை பரிகசிபோருக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

sivamahan said...

Nanri unga vimarsanathirku..... Ithu varai paditha entha padathin review kum nan comment pottathillai... Inimelum poda povathillai yenna ini nan intha pakathirku vara povathum illai.... Nanri....

KaviKutty said...

Cable, neenga Semma Comedy Boss. Daily veetla Tea ye kudinga please

sathesh said...

cable ji!(?),no offense balava vimarsika oru thaguthi venum ji!

Arun said...

After Kalavaani Review, I never trust his reviews. Now another one:) such a biased guy working in cinema.. Tamil cinema & tamil makkal paavaam..



vkbm42 said...

Hi Guys,

I have gone through all the comments for this movie 'Paradesi' and read cablesankars review. The review has been written from his point of view using his knowledge got over the years in the cinema industry. It is his freedom, no one can question him. I dont think every one who visits his site for movie review not deciding their priorities. This review is just a view of another person, no need to take literally all the points he mentioned.

Everyone forcing him to write good things about a movie especially 'Paradesi'. He may be biased as some of the comments mentioned. No one is perfect in this world.. Let him write want he wants to convey...

Kulandaivelu cholagar said...

பாலாவை குறை கூறுவதற்காக இங்கு சிலர் மேல் ஜாதி ,கீழ் ஜாதி, இந்து, கிறிஸ்தவன் என்று என்றெல்லாம் அவர் பாகு படுத்தியதாக சொல்வதெல்லாம் சரியில்லை !!!யதார்த்தத்தை படமாக்கியிருக்கிறார்!!!முஸ்லீமை கமல் தீவிரவாதியாக காண்பித்த மாதிரி தான் ஆங்கிலேயன் தன் மதத்தை பரப்பியதை பாலா கண்பிக்கிறார்!!! வீரமில்லாத ஜாதியை பற்றிய கதை!!!அவ்வளவுதான்!!!இந்த மாதிரி வாழ்ந்ததுக்கு வெள்ளைக்காரனை எதிர்த்து தூக்கில தொங்கினவன் எவ்வளவோ மேல்!!!

Anonymous said...

இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.