யாராவது ஏதாவது ஒரு புது முயற்சி செய்யலாம் என்று அடியெடுத்து வைக்கும் போது “இதெல்லாம் விளங்காது. ஆகுற வேலைய பாரு” என்று ஆரம்பித்து அத்தொழிலில் உயர்வான இடத்தில் உள்ள ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு “அவரே செய்யலை நீ செய்திருவியா?” என்று கேட்டு நம் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள். அப்படியான ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ரொம்பவே அதிகம். எது சொன்னாலும் கமல் பண்ணலை, ரஜினி பண்ணலை, ஏவிஎம் பண்ணலை நீங்க பண்ணிருவீங்களோ? என்று கேட்பவர்கள் இருக்குமிடத்தில் அதுவும், வெற்றி மட்டுமே மதிப்பீடாக இருக்கும் துறையில் ஏதாவது சாதிக்க முயன்றாலும் அதற்கான கிண்டல்களும் கேலிகளும் நிறையவே வரத்தான் வரும்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்திற்காக முதல் முதலாய் அதன் தயாரிப்பாளர் இயக்குனர் இறுதியாண்டு எம்.பி.ஏ மாணவர்களுக்கு அவரது படத்தையே ஒரு ப்ராஜெக்டாய் கொடுத்து அதன் மூலம் தமிழ் படங்களைப் பற்றிய மார்கெட்டிங் சர்வேயும், தங்கள் படத்தையும் ஒருங்கே தமிழகத்தின் மூலை முடுக்கில் கொண்டு போய் சேர்க்க முயன்றார். அத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லையென்றாலும், அவர்கள் முன்னெடுத்த விஷயம் முதன்மையானது. தமிழ் சினிமாவைப் பற்றிய மார்கெட்டிங் சர்வேயும், முதல் முறையாய் வெறும் செவி வழிச் செய்தியாய் வரும் விஷயங்களையே சொல்லிக் கொண்டு இருக்கும் காலத்தில் சைண்டிபிக்காக அதை திரைத்துறையில் ஈடுபடுத்தி அதை செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. ஒரு காலத்தில் நல்ல படமெடுத்தா விளம்பரமில்லாமயே ஓடும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர், யுடியூப் என்று படங்களுக்கான மார்கெட்டிங்கை ஆரம்பித்திருப்பது தான் சாட்சி.
மணிரத்னம் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனராய் இல்லாமல் படமெடுத்து இந்திய சினிமாவை வென்றெடுத்த போது, இதற்கு முன்னால் உதவி இயக்குனராய் இருந்தால் தான் படம் எடுகக் வாய்ப்பே கிடைக்கும் என்பது உடைந்தது. அப்படியும் சிலர் அவர் சினிமாக்காரர் பிள்ளை, அண்ணன் தயாரிப்பாளர் என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். ஆனால் இன்றைய நிலை சினிமாவில் நேரடி அனுபவம் இல்லாது குறும்படங்கள் எடுத்த, பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பாராஜ், நலன், அருண்குமார் ஆகியோர் திரைப்பட இயக்குனர்களாய் வலம் வர ஆர்மபித்துவிட்டார்கள்.
அந்த வகையில் லிப்ரா ப்ரொடக்ஷன் எனும் பெயரில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நிறுவனம் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குள் நளனும் நந்தினியும், சுட்டகதை, ஆகிய இரண்டு ப்ராஜெக்டுகள் முடிவடையும் தருவாயிலும், மேலும் கொலை நோக்கு பார்வை, 1+1+3, ஐ.நா என்று மூன்று ப்ராஜெக்டுகள் முதல் கட்ட தயாரிப்பிலும் இருக்கும் நிலையில் ஒர் புதிய விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார். அதாவது கேம்பஸ் செலக்ஷன். என்னடா இது சினிமா கம்பெனி ஆரம்பித்துவிட்டு கேம்பஸ் செலக்ஷன் என்கிறாரே? என்று யோசிக்கிறீர்களா? ஆம் விஸ்காம் படிக்கும் ஃபைனல் இயர் மாணவர்களிடமிருந்து அவர்களுடய காலேஜ் ப்ராஜெக்ட் குறும்படங்களை பார்த்து, குறும்படம் போட்டி வைத்து அதில் சிறந்த ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர், நடிகர், நடிகை, மற்றும் இயக்குனர் என்று தெரிந்தெடுத்து அவர்களை தங்களது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களில் ஒரு வருடம் இண்டர்ன் ட்ரெயின் கொடுத்து, அதில் சிறப்பாக தேறுகிறவர்களும் அவரவர் துறையில் ஒர் வாய்ப்பு கொடுக்கவிருக்கிறார். இது நாள் வரை விஸ்காம் படிக்கும் மாணவர்கள் படித்து முடித்துவிட்டு ஒர் குறும்படம் எடுத்துவிட்டு அதை வைத்து ஒர் பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவோ, அல்லது உதவி ஒளிப்பதிவாளராகவோ, எடிட்டராகவோ தான் சினிமா எனும் கதவை தட்ட செய்யும் வழியாக இருந்தது. ஆனால் அதுவும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எப்படி உள்ளே நுழைவது புரியாமல் வாசலுக்கே வராமல் பி.பி.ஓவுக்கு வேலைக்கு போன்வர்கள் நிறைய பேர். ஆனால் இவர் கொடுக்க இருக்கும் வாய்பினால் நேரடியாய் கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்படுவதால் தாங்கள் விரும்பை துறையில் சிறப்புற வாய்ப்பு நேரடியாய் கிடைக்கிறது. இதோ இன்றைக்கு இன்ஜினியர் மாணவர்களை மிகப் பெரிய கம்பெனிகள் தங்கள் நிறுவனங்களுக்கு படிக்கும் போதே தெரிவு செய்து அவர்களின் திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை வழங்குவதைப் போல சினிமாவிலும் செய்ய முடியும் என்கிறார் ரவிந்தர். இவரது முயற்சி வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
6 comments:
Good move
good news
Very good initiative. Congrats :)
great initiative. thanks for sharing this shankar.
பஞ்சாலை போல் அல்லாமல் இம்முயற்சி வெற்றியடையட்டும் .
Dear Sankar,
Small correction.
பாலாஜி மோகன் குறும்படம் மட்டுமே எடுத்து டைரக்டர் ஆனவர் அல்ல. அவர் துரோகி என்ற படத்தில் Assistant Director ஆக வேலை செய்தவர்.
Post a Comment