Thottal Thodarum

Mar 15, 2013

Sahib, Biwi Aur Gangster Returns

2011 ஆம் ஆண்டு சத்தமில்லாமல் வந்து ஹிட்டடிட்த படம். ரசிகர்கள், விமர்சகர்கள் என்று இரு தரப்பிலும் பெயர் வாங்கியது இதன் முதல் பாகம். அந்த வெற்றி கொடுத்த களிப்பை எக்ஸ்டெண்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.


சென்ற பாகத்தில் வந்த அதே சாஹிப் ஜெர்மி ஷெர்கில், சோட்டி ராணி மகி கில் தான். புதியதாய் சோஹா அலி கானுடன், இர்பான் கான் சேர்ந்திருக்கிறார். இர்பான் கானும், சோஹாவும் காதலர்கள். சோஹா பக்கத்து ஊர் ஜமீந்தாரினி. அவளை காதலிக்கும் ஏழை இர்பான். கால் செயலிழந்து வாழ்ந்தாலும், இன்றைக்கும் தன் அரசியல் காய்களை மனைவி மூலமாய் நகர்த்திக் கொண்டு, கட்ட பஞ்சாயத்து கொண்டு டெரராய் விளங்கும் ஜெர்மி ஷெர்கில். சாஹிப்பிற்கும், அவர் மனைவி சோட்டி ராணி மஹி கில்லுக்கும் ப்ரச்சனை. அதன் காரணமாய் சென்ற பாகத்தை விட முழு குடிகாரியாகவே ஆகியிருக்க..  சாஹிப் மூலம் ஒர் வாரிசு வேண்டுமென்று மாதாஜி கேட்கிறார். தன் மனைவி அதற்கு சரிப்பட்டு வரமாட்டாள் என்று சொன்னதும் சோஹாவின் படத்தைக் காட்டி சம்மதம் கேட்கிறாள். போட்டோவில் அவள் அழகை பார்த்து மயங்கிய சாஹிப் உடன் மனைவி இருந்தாலும் பரவாயில்ல என்று பெண் கேட்க சொல்கிறார். சோஹிலின் அப்பா மறுக்க, இங்கிருந்தபடியே துபாயில் இருக்கும் அவரின் பையன் மீது போதை மருந்து வழக்கு போட வைத்து மிரட்டுகிறான். அவரும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு அவனின் வீட்டிற்கு திருமணத்திற்கு முன்னால் அனுப்பும் போது. வீட்டு ஆளான இர்பானை அழைத்து உன் குடும்பத்தை பழி வாங்கிய குடும்பத்தை கொல்ல சரியான தருணம் என்று சொல்லி சாஹிப்பை கொல்ல அனுப்புகிறான். அவனைக் கொன்றால் தனக்கு சோஹிலை திருமணம் செய்து தர வேண்டும் என்று ஆஃபர் கேட்கிறார் இர்பான். சாஹிப்பின் மனைவியின் மூலமாய் நெருங்க சொல்லும் சோஹிலின் அப்பா ஒரு அவளிடம் பிசிக்கலாய் நெருங்கக் கூடாது என்று சொல்ல, சந்தர்ப்ப சூழநிலை அவர்களிடம் நெருக்கம் ஆரம்பமாகிறது. ஒரு பக்கம் தன் காதலியின் மீது காமம் கொண்டு அவளை அடைய நினைக்கும் சாஹிப். இன்னொரு பக்கம் சாஹிப்பின் இறுக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரப் பறவையாய் அலையத் துடிக்கும் பீவிக்கும் கேங்ஸ்டருக்குமான காமம். இந்த உறவுகளுக்கிடையே நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டங்கள். யார் ஜெயித்தார்கள் என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். 
ஜெர்மி ஷெர்கில் வழக்கம் போல் இந்த கேரக்டரில் நன்றாக பொருந்தியிருக்கிறார். முன்பு சொன்னது போலவே இன்னும் இவரை பயன்படுத்தும் படங்கள் வரவில்லை என்றே சொல்ல வேண்டும். மஹிகில் இப்படத்தில் மேலும் குடிகாரியாய் அலைகிறார். காமத்தில் தகிக்கிறார்.  இர்பான் கானிடம் ஒருவிதமான் அசட்டைத்தனம் படம் முழுவதும் தெரிகிறது. படத்தில் புதிய வரவு சோஹில் கான் தான். அழகாய் இருக்கிறார். ஒரே விஷயத்தில் இவரின் கேரக்டர் மாறிப் போய்விடுவதில் ஆரம்பித்து வசீகரம் இழந்துவிடுகிறார்.
எழுதி இயக்கியவர் திக்மன்ஷு துலியா. முதல் பகுதியில் காசுக்காக மஹாராணியிடம் நிற்பவராக இருப்பார் சாஹிப். ஆனால் இதில் எல்லாம் இவர் கண்ட்ரோலில் இருக்க, கால்கள் செயல் இல்லாமல் வீல் சேரில் அமர்ந்து கொண்டு எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார். மஹி கில் எம்.எல்.ஏவாக இருந்தாலும் பவர் இல்லாத ரப்பர் ஸ்டாம்பாய் இருக்க, சாஹிபிற்கு தன் மீதான ஆர்வம் போய் சோஹிலுடன் திருமணம் என்ற நிலை வரும் போது தன் காமத்திற்கும், அரசியல் வாழ்விற்கும் ஒர் மெண்டராக இர்பானை தேர்தெடுப்பதன் பிண்ணனியை இன்னும் கொஞ்சம் நம்பத் தகுந்ததாய் அமைத்திருக்கலாம். அதே போல இரண்டாம் பாதி முழுவதும் ஐயிட்டம் நம்பர், ப்ரெடிக்டபிள் அரசியல் ப்ரச்சனைகள், தெரிந்த நடிகர்கள் என்று வருகிற படியால் அவர்களுக்கான ஸ்கோப் கொடுக்கும் க்ளிஷே காட்சிகள் என்று நீர்த்து போய்விடுகிறது. எப்போது முதல் பாகம் போல இரண்டாம் பாகம் இல்லை என்று தான் சொல்வார்கள். அதற்கு காரணம் முதல் பாகத்தில் இருக்கும் கதை சொல்லல், அதில் இருக்கும் கண்டெண்டை விரிவாக்கியதால் வரும் வினை. முதல் பாகத்தில் இருந்த அதே துரோகம், காமம், அரசியல் என அதே கேரக்டர்களுக்கிடையே ஒரிரு புதிய கேரக்டர்களை வலம் வர செய்ததால் அதே படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்ற ஒர் எண்ணமும் வரத்தான் செய்கிறது. முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு இது இண்ட்ரஸ்டிங் படம் தான்.
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

rajamelaiyur said...

good review ... thanks..

i expect pardesy movie review