9/11 தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க நடத்திய மிகப் பெரிய தேடுதல் வேட்டை அல்கொய்தா தீவிரவாதத் குழுவின் தலைவன் ஓசாமா பின்லேடனுக்காக நடத்திய தேடுதல் வேட்டைதான். அந்தத் தேடல் எப்படி நடந்தது. எப்படியெல்லாம் அதன் விசாரணை நடந்தது என்பதை அடிப்படையாய் கொண்டு, ஓசாமாவை கொன்றதை க்ளைமாக்ஸாக வைத்து லைவாக சொல்லியிருக்கும் ப்டம் தான் இந்த ஜீரோ டார்க் தர்ட்டி.
மாயா என்கிற பெண் சி.ஐ.ஏ ஆபீசரின் பார்வையில் படம் போகிறது. 2003ல் பாகிஸ்தானில் உள்ள யு.எஸ். எப்பஸியில் வேலைக்கு சேருகிறாள். டான் எனும் ஆபீஸ்ருடன் அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவனை பிடிப்பதற்காக சவுதி தீவிரவாதியான அமரை ஒர் மறைவிடத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டு தகவல்களை பெற்றுக் கொண்டிருக்கிறான். இவன் மூலமாய் கிடைக்கும் தகவல்களை வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி எப்படி அல்கொய்தா தலைவன் கொல்லபடுகிறான் என்பதை கிட்டத்தட்ட ஒர் டாக்குமெண்டரி தனத்தோடு சொல்லியிருக்கிறார்கள்.
முதல் முதலில் டான் டார்சர் செய்யும் இடங்களில் எல்லாம் கொஞ்சம் அசூசை படும் மாயா கொஞ்சம் கொஞ்சமாய் அவளும் அதே நிலைக்கு உருவாவதும், இஸ்லாமாபாத் மாரியட் ஹோட்டல் குண்டு வெடிப்பில் தப்பித்ததும், வீட்டிலிருந்து கிளம்பும் போது துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்தும், பல அரசியல் மாற்றங்கள், விசாரிக்கும் முறைகளால் ஒதுக்கப்பட்டும், உடன் வேலை செய்யும் தோழி ஜெஸ்சிகா 2009 கேம்ப் சேப்மென் அட்டாக்கில் இறப்பதும் என்று பல போராட்டங்களுக்கிடையே ஒசாமா என்கிற தீவிரவாத தலைவனை அழித்த கதையை மிகுந்த அமெரிக்கத்தனமான செண்டிமெண்டோடு சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸில் ஒசாமாவை கொன்ற பின் மாயா இத்தனை நாள் வைத்திருந்த கோபத்தை, அழுகையாய் வெளிப்படுத்தியதோடு படத்தை முடித்திருந்த விதம் அமெரிக்க பேட்டிரியாடிஸம் தெரிகிறது.
எப்படி தீவிரவாதிகள், அதுவும் அல்கொய்தா என்று அதன் பின்னணி பற்றிய விசாரணைகள் என்று வந்தாலே சர்ச்சைகள் வரும் போல. அதனால் இப்படத்திற்கு பல சர்ச்சைகள் வந்ததிருக்கிறது. முக்கியமாய் சவுதி தீவிரவாதியை கொடூரமாய் டார்சர் செய்து விசாரணைக்கு உட்படுத்தும் விதம் குறித்த விஷயம். அதன் பிறகு ஒரிஜினல் ப்ளைட் அட்டெண்டண்டின் விடியோகிளிப்பிங்கை அவர் அனுமதி இல்லாமல் எடுத்துவிட்டதாய் கிளம்பிய பிரச்சனை என்று சர்ச்சைக்கு குறைவில்லாமல் இருந்தது.

ஜெஸ்சிக்கா சாஸ்டைனின் நடிப்பு சிறப்பு. அஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டதில் ஆச்சர்யமில்லை. இதற்கு முன் ஹர்ட் லாக்கரில் நம்மை அசத்திய கேத்தரின் பிக்கிலோவின் அடுத்த படம். இவரது முன்னாள் கணவர் ஜேம்ஸ் கேமரூனின் அவதாருக்கு போட்டியாய் சின்ன பட்ஜெட்டில் வந்து வெற்றிப் பெற்றவர். இம்முறையும் காண்டர்வர்ஸியான கதைக் களனை எடுத்துக் கொண்டு வென்றிருக்கிறார். இம்மாதிரியான தொடர்ச்சியான விசாரணைகள் சமயங்களில் படத்தின் போக்கில் ஒர் சுணக்கத்தை கொடுக்கும் ஆனால் இத்திரைகக்தையில் அப்படியில்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில் பல ப்ரச்சனைகளை சரியான விகிதத்தில் கலந்து சுவாரஸ்யமாக்கி, கிட்டத்தட்ட பேப்பர்களில் வீடியோக்களில் நாம் ஏற்கனவே பார்த்து படித்த பின்லேடனை சுட்டுக் கொன்ற காட்சிகளை மீண்டும் அப்படியே உருவாக்கியிருக்கிறார். பின்லேடனை முழுவதுமாய் காட்டாமலேயே அவரை சுட்டுக் கொன்றதாய் காட்டும் விதம் கொஞ்சம் உறுத்தலே. என்ன தான் இருந்தாலும் இது ஒர் அமெரிக்க வர்ஷன் படம் தான். நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கள் வரத்தான் செய்யும். எனக்கென்னவோ இந்தப் படத்தை விட ஆர்கோதான் பெட்டர் படமாய் தோன்றுகிறது.
கேபிள் சங்கர்
Post a Comment
3 comments:
I saw the movie. Some how விமர்சனம் எழுத வேண்டும் என்று கை வரவேயில்லை. என்னை இம்பாக்ட் செய்யவில்லை. அப்படியே என் என்னங்களை பிரதிபலித்து எழுதியுள்ளீர்கள்!
amas32
waiting for the review for ARGo... please
இது டாகுமெண்டரி படம் மாதிரி இருந்தாலும் நம்மை படத்தோட ஒன்ற வைத்து விடுகிறது படம்.என்னை பொறுத்த வரையில் இந்த படம் மிக நல்ல படம்.Jessica Chastain படத்தில் அந்த CIA ஆபீசர் ஐ கண் முன்னே கொண்டு வாந்தி இருக்கார்.
Post a Comment