கொத்து பரோட்டா -29/04/13

ஃபோரம் மால் வருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் ட்ராபிக் ப்ரச்சனை பற்றி அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே எதிர்புறத்தில் உள்ள கமலா தியேட்டர் படம் விடும் போதும் ஆரம்பிக்கும் போது ட்ராபிக் பின்னியெடுக்கும், இப்பொது அதற்கு நேர் எதிரே இந்த மால். அதிலும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அமையப் பெற்றிருக்கிறது. அனுமதிப்பதை வடபழனி வழியாகவும், வெளியேறுவதை நூறு அடி ரோடு பக்கமாய் விட்டால் நிச்சயம் பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. மக்களின் போக்குவரத்துப் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், இவர்கள் பாட்டிற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னால் என்ன செய்வது என்று முழி பிதுங்குவதற்கு பதிலாய் முன்னமே கொஞ்சம் யோசித்து அனுமதி அளிக்கலாம். இவ்வளவு யோசனையிலும் ஒர் கிளுகிளூப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒன்று மொக்கை கமலா தியேட்டருக்கு ஒர் போட்டி. இரண்டாவது நம்ம ஏரியா பக்கத்திலேயே ஒர் ஐ...