மஹாராஷ்ட்ரிய எம்.எல்.ஏக்கள் இருவர் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் சரணடைந்து பின்பு ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். ஓவர் ஸ்பீடில் போனதற்காக அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து கேஸ்போட்டு பைன் போட்டிருக்கிறார் அதனால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள் பட்டப் பகலில். இந்த ப்ரச்சனையை மீடியா கையிலெடுத்தப் பின் அவர்களிடம் பேட்டி எடுத்த டிவி நிருபர் கடுப்பாகிவிட்டார். “என்ன நீ அடிச்சியா? என்ற ரீதியில் நிருபர் கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் பேசி குழப்பினார். அரசியல்வாதிகள் நினைத்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இம்மாதிரியான சமயங்களில் மீடியாக்கள் கையில் எடுத்துக் கொண்டு வெளிக் கொண்டு வருவதை நான் ஆதரிக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஏற்கனவே பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை சேனலுக்கு மேலும் பெரிய அளவில் டி.ஆர்.பியை கொடுக்கக்கூடிய நிகழ்ச்சியை கொடுத்திருக்கிறார். சிபிஐ அனுப்புவேன்.விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி அவர் திட்டிக் கொண்டு கிளம்பும் காட்சியை திரும்பத் திரும்ப போட்டுக் காட்டி புதியதலைமுறை தன் நிலையை உயர்த்திக் கொண்டது. பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்களுக்கு பதில் சொல்வது என்பது எப்படி என்பதை எங்கள் தாத்தா கலைஞரிடம் க்ளாஸ் எடுப்பது நல்லது.இத்தனை வருஷம் கூட இருந்தும் கத்துக்கலைன்னா.. எப்பூடி?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று பூராவும் செம பிஸி.சமீபத்தில் திருமணமான என் மாமன் மகளின் ட்ரீட். ராஜ்தானியில். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட உறவினர்களுடன். அங்கே சர்வீஸ் செய்து கொண்டிருந்த அத்துனை பேரிடமும் அவரவர்களுக்கு தெரிந்த இந்தியில் அவர்களுக்கு வேண்டியதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியாய் ஊறுகாய் வேண்டும் என்று கேட்க, என்ன என்று என் பக்கத்திலிருந்த உறவுக்காரப் பெண் கேட்க, தமிழ்நாட்டுல வந்து வியாபாரம் செய்யுறாங்க அட்லீஸ்ட் ஊறுகாய்க்காவது தமிழ்ல தெரியுதா பார்ப்போம் என்று ஊறுகாய் என்று கேட்க, அவன் விழித்தான். அவனிடம் இந்தியில் ஊறுகாயை கேட்டதும் கொடுத்தான். உங்களுக்காக நாங்கள் இந்தியெல்லாம் கத்துட்டு வந்து சாப்பிடறோம். அட்லீஸ்ட் ஊறுகாய்க்காகவாவது தமிழ் கத்துக்கலாமில்லை? என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் கடுப்பேற்றியது. இங்கே இந்தியாவில இந்திதான் முக்கியம். நீங்க அதை கத்துக்கங்க என்றான். என்ன திமிர்?. நான் சத்தமாய் இந்தி ஒழிக என்றேன். என் மனைவி என்னை முறைத்தாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மாலையில் இயக்குனர் மணிவண்ணனின் 50வது படமும், சத்யராஜின் 200வது படமும், மணி- சத்யராஜ் இணையும் 25வது படமுமான நாகராஜசோழன்.எம்.ஏ.எம்.எல்.ஏ பட ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர், நடிகரின் படம். அதுவும் தமிழநாட்டையே கலக்கியெடுத்த படத்தின் அடுத்த பாகம் எனும் போது பத்திரிக்கையாளர்களிடமும் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது என்பதை க்ரீன்பார்க் ஓட்டலின் இருந்த ஹால் எல்லாம் நிரம்பி வழிந்து வெளியே வரை நின்ற போதே தெரிந்தது. முதல் பட விழா என்பதால் ஊரையெல்லாம் கூட்டியிருப்பது தெரிந்தது. அழைப்பிதழிலேயே கிட்டத்தட்ட இருபது பேருக்கும் மேல் போட்டிருந்தது. என் நண்பர் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் அவர்களும் சிறப்பு அழைப்பாளரில் ஒருவர். எனவே விழா ஆரம்பம் முதலே அங்கேயிருந்தோம். விழாவுக்கு வந்த அத்துனை நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர்களை மேடையேற்றியிருந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விழா நடந்தது. இம்மாதிரியான விழாவை சத்யம் போன்ற அரங்களில் நடத்துவதுதான் சாலச் சிறந்தது. சரியான ஒளி, ஒலி அமைப்பு இல்லாமல் படு ஜாரிங்காக பாடல்களும் டீசர்களும் ஒளிபரப்பப் பட்டன. அவர் இவரென யாரையும் விட்டு விடாமல் கலாய்த்திருக்கிறார்கள் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது. காம்பியரிங் செய்த ஜோடிகள் இருவர் சன் டிவியில் காலை நிகழ்ச்சியில் வருகிறவர்கள் முடியலை. க்ளைமாக்ஸாய் பேசிய மணிவண்ணன், சத்யராஜ், சீமான் அவர்களுடய பேச்சு கிட்டத்தட்ட நாம் தமிழர் இயக்க பொதுக்கூட்டம் போலவே ஆகிவிட்டது. இருந்தாலும் மிக நெகிழ்வான, கிண்டலும் கேலியுமாய் அமைந்தது மணிவண்ணனின் பேச்சு. இளைஞன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கலைஞர் அவரிடம் பேசியதையும், இவர் பதில் சொன்னதையும் அவரைப் போலவே பேசிக் காட்டினார். அவர் நடந்து நட்ந்து பார்த்த செட்டை படத்தில் காட்டவேயில்லை என்றார். இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தேறியது. மணிவண்ணன் ஒரு விஷயத்தை முக்கியமாய் இன்றைய, புதிய, இளம் இயக்குனர்களுக்கு சொன்னார். அதுவும் அமீரைப் பார்த்து. “ஒரு படமெடுக்க 50 நாளே போதுமானது. நம்மை நம்பி படமெடுத்த தயாரிப்பாளரும் நல்லாருக்கணும் நாமும் நல்லாருக்கணும் அதுதான் சினிமா” என்று அறிவுரை சொன்னார். இப்படத்தை50 நாட்களுக்கு முடித்திருக்கிறார். இம்மாதிரியான விழாவையெல்லாம் வேற எங்கயாவது பெரிய தியேட்டர்ல வையுங்க சார். வேர்த்துக் கொட்டிக் கொண்டு எத்தனை நேரம் தான் உட்காருவது?.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீப காலமாய் டிவி சேனல் உரிமை என்பதில் நல்ல போட்டியிருக்க ஆரம்பித்திருக்கிறது. ஜெயா இருக்கிற பெரிய படங்களையெல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்க, வேறு வழியேயில்லாமல் சன் திரைப்பட உரிமைகளைப் பொறுத்தவரையில் தன் இடத்தை இழக்க விரும்பாததால் படம் பூஜை போடுவதற்கு முன்பே பெரிய படங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு போட்டியாய் விஜய்யும், ஜீ தமிழும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஜீ தமிழ் சமீபத்தில் வாங்கிய படங்கள் சூது கவ்வும், நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ. இன்னும் வெளியிடப்படாத இரண்டு பெரிய படங்களுக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சேட்டிலைட் சேனல்களைப் பொறுத்தவரையில் சினிமா என்பது ஒர் மிகப்பெரிய டி.ஆர்.பியை கொடுக்கும் விஷயம். சினிமாதான் அவரவர்களுடய சேனல் நிகழ்ச்சிகளில் முதன்மையாய் இருக்கக்கூடிய விஷயமாய் இருப்பதாலும். ஒர் படத்தை வாங்கி விட்டால் அதற்கான ப்ரொமோஷன் என்கிற பெயரில் ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ் என்கிற பெயரில் நடக்கும் விழாக்களைஎல்லாம் தொகுத்தும், பின்பு படம் வெளியாகும் முன் டெக்னீஷியன்கள், நடிகர்,நடிகைகள் பேட்டி என்று நிகழ்ச்சிகளை தயாரிக்க ஏதுவாகவும் இருக்கிறது. எது எப்படியோ தமிழ் சினிமாவின் ரைட்ஸ் மோனோபாலியை இந்நிறுவனங்களினால் உடைக்க ஆரம்பித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமாய் சின்ன பட்ஜெட் சினிமாவிற்கு மிகவும் நல்லது. ஏற்கனவே சொன்னது படி தயாராகும் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் சுமார் 70-60 சதவிகிதபடங்களின் சாட்டிலைட் உரிமை விற்கப்படுவதேயில்லை என்கிற நிலை தான் இன்றும் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சன் நியூஸ் தொலைக்காட்சியில் ரெண்டு வாரங்களுக்கு முன் தமிழ் சினிமா தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படுகிறதா? என்கிற தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சியில் பேச அழைத்திருந்தார்கள். அதன் பதிவு இதோ.
வலி மாற்றத்தை உண்டு செய்யும் வலிமையுடையது. அது நல்லதாகவும் இருக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொடர்ந்து பார்க்கப்படும் நிகழ்ச்சிகள், ப்டிக்கும் தொடர்கள், எழுத்துகள் எல்லாமே எப்போதும் கூடவே இருக்கும் மனைவி போல. வேற நல்ல பிகர்களை பார்க்கும் நம்ம கூடயும் ஒண்ணு இருக்குதேன்னு தோணும். அதே ஒரு பத்து நாள் பொண்டாட்டி இல்லாம இருந்து பாருங்க அப்ப தெரியும் அவ அருமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்துவலி மாற்றத்தை உண்டு செய்யும் வலிமையுடையது. அது நல்லதாகவும் இருக்கலாம்.
ட்வீட்டர்கள் தொடர்ந்து மகாபாரதம் பாக்குறாங்கங்கிறது அவங்க ட்வீட்டிலேர்ந்தே தெரியுது.
டீசர்..டீசர்ன்னு சொல்வாய்ங்க மரியான் டீசர் தான் நெஜம் டீசர்.. படத்துல நடிக்கிற தனுஷுக்கே என்னான்னு தெரியாம பார்க்குறாரு..
Post a Comment
3 comments:
"நம்மை விரும்புகிறவர்களை விட வெறுப்பவர்கள்தான் நம்மை ஆழமாய் நேசிக்கிறார்கள். பின்னூட்ட அவதானிப்பூ "
அண்ணே பரோட்டா சாப்பிடுறது
கெடுதலாம் . . .
நேத்து தந்தியில படிச்சேன்
சன் நியுஸில் அந்த ஷோவை ஒளிபரப்பிட்டார்களா
நண்பரே...
அடல்ட் கார்னர் பகுதியில் பெயர்களை தவிற்கவும்.
Post a Comment