மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் கதை என்று பெரிதாக இருக்காது. அவர்களின் மாஸ் ரீச்சை வைத்து எப்படி பில்டப் செய்து திரைக்கதையமைக்கிறோமோ அது தான் படத்திற்கு பலம். கதையென்று பார்த்தால் நாம் பார்த்துப் பழகிய ஹம், பாட்ஷா, கதைதான் என்றாலும் அதில் வேறு வேறு நடிகர்கள், அவர்களின் பில்டப்புகள் என்று வரும் போது வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கிறது. அதுவும் மாஸ் மசாலா இயக்குனர் சீனு வைட்லாவும், ஜூனியர் என்.டி.ஆரும் ஒன்று சேர்ந்தால்.. கேட்க வேண்டுமா? எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிருந்தது.
சாது பாய் என்கிற இண்டர்நேஷனல் டான் மக்காவிலிருந்து தன் நெட்வொர்க்கை ஆப்பரேட் செய்து கொண்டிருப்பவன். அவரின் நம்பிக்கையான இன்னொரு டான் ரஞ்சன். அவரின் மகன் தான் ஜூனியர் என்.டி.ஆர். பாட்ஷா. ஜூனியருக்கும் சாதுபாய்க்குமிடையே ப்ரச்சனை வந்து போட்டியாகிறது. அவனையும், அவனின் கூட்டத்தையும் ஒழிப்பேன் என்று கரம் வைத்து சபதமிட்டு அலைகிறார். முக்கியமாய் இந்தியாவில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க இருக்கும் ப்ளானை தடுப்பதே அவரின் குறி. அதை தடுத்தாரா? சாதுபாயிடம் உறவாடிக் கொண்டே ஏன் எதிராக செயல்பட வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் காட்சியிலிருந்து கடைசி வரை ஜுனியர் என்.டி.ஆர் தான் திரை முழுவதும். மேலும் மெலிந்த உடல், வித்யாசமான ஹேர்ஸ்டைல், பரபர டயலாக் டெலிவரி. தொடைகொட்டி பஞ்ச் டயலாக், ஸ்பீடான டான்ஸ் ஸ்டெப்புலுகள், நடுநடுவே கிச்சு கிச்சு மூட்டும் காமெடி, என்று ஒரு மாஸ் ஹீரோ தன் ரசிகர்களை எப்படியெல்லாம் திருப்தி படுத்த முடியுமோ அப்படியெல்லாம் முயன்றிருக்கிறார். முதல் பாதியில் காஜல் அகர்வாலுடன் அடிக்கும் லூட்டி ஒரு விதம் என்றால், இரண்டாவது பாதியில் பிரம்மானந்தத்தை வைத்து அடிக்கும் ரிப்பீட் என்றாலும் சுவாரஸ்யம்.
காஜல் அகர்வால் வழக்கம் போல பார்பி டால்தான். ஏன் இந்த மாதிரி பெரிய பட்ஜெட் படங்களில் வரும் டான் கேரக்டருக்கு எப்போது இந்த சப்பை மூஞ்சி கெல்லியையே போடுகிறார்கள் என்று புரியவில்லை. சித்தார்த் ஒரு சின்ன கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். சுஹாசினி, சந்திரமோகன், எம்.எஸ்.நாராயணா, நாசர், ப்ரகதி, ஆஷிஷ் வித்யார்த்தி, நவ்தீப் என்று ஏகப்பட்ட நடிகர்கள். பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு கே.விகுகன். செம ரிச்சான அவுட்புட். தமனின் வழக்கமான சிந்தசைஸ்டு வாய்ஸ் மாடுலேஷனில் வரும் பாடல்கள் எரிச்சலூட்டுகிறது. பின்னணியிசை சத்தம். கோனா வெங்கட்டின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முக்கியமாய் காமெடி காட்சிகளில்.
எழுதி இயக்கியவர் சீனு வைட்லா. தூக்குடு மாதிரி ஒரு பெரிய எனக்கு வேணும் என்று ஜூனியர் கேட்டிருப்பார் போல ஏன் அது மாதிரி அதையே திரும்ப எடுத்துருவோம்ன்னு ப்ளான் பண்ணிட்டார் போலிருக்கிறது. லவ் ட்ராக், காமெடி என்று எல்லாமே.. தூக்குடுவில் ப்ரம்மானந்தம் ரியாலிட்டி ஷோவில் ஒரு ஆள் என்று நம்ப வைத்து பக்ரா ஆக்கியிருப்பார்கள். இதில் இன்சப்ஷன் படம் போல ஒரு கதை சொல்லி ஆக்கியிருக்கிறார்கள். அதில் வெளிநாட்டில் காதல். இதிலும் அதே. அதில் ஹீரோயின் அப்பா போலீஸ் ஆபீசர். இதிலேயும் அதே. என பல அதேக்கள். பட் ஜூனியர் எண்டி.ஆரின் மாஸ், ஆக்ஷன் எலலவற்றையும் மீறி ப்ரம்மானந்தத்தின் காமெடி என்ற ஒன்று இல்லையென்றால் படம் நிச்சயம் தரை தட்டியிருக்கும். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி உட்சபட்ச காமெடி.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
விமர்சனம் நன்றாக இருக்கிறது. இந்தியாவில் இல்லாததினால் டவுன்லோட் செய்து இனிமேல் தான் பார்க்கவேண்டும்.
அது சரி மக்காவுலேர்ந்து குண்டு வைக்க பிளான் பண்றாரா ? இது அந்த மதத்தினரை புண்படுத்துவது போல் இல்லையா - கவனிக்க தவறி விட்டார்களா ? படம் ரிலீஸ் ஆகி விட்டதா ? ஓ இதுல கமல் நடிக்கலையா சரி சரி
சமீபகாலமாக நடுநிலையாளர்களை காண்பது அரிதாயிற்று
அன்பரே ராஜ் ?.....என் இந்த கொலைவெறி ?....கக்கூசுக்கு போனால் கழுவிட்டு மட்டும் வாங்க ?....சாப்பிடாதிங்க
விமர்சனம் அருமை....
Good Review
ப்ரம்மானந்தம் இல்லனா படம் மொக்க
Its MACAU(Hong kong), not makkah(saudi Arabia). I guess.........
Post a Comment