Thottal Thodarum

Apr 27, 2013

நான் ராஜாவாகப் போகிறேன்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர்  ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்ன காரணம்? யார் அந்த ராஜா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள்.


அதிரடியான ஆக்‌ஷன் காட்சிக்கு பிறகு, ஜிம்மி ஜிப்பில் ஹிமாச்சல பிரதேச நீர் மற்றும் தரை பரப்பை விஷுவலாய் வலம் வந்து ஜீவா நகுலை காட்டும் போது அட.. என்று நிமிர்ந்து உட்காரத்தான் வைக்கிறது.  அவரைப் போலவே ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவரை போலவே ஆர்வம் நமக்கும் வர ஆரம்பிக்கத்தான் செய்கிறது. சிம்ஹா சொன்ன விஷயங்களை வைத்து ராஜாவின் தோழியை கண்டுபிடிக்க, போன இடத்தில் அவளின் குடும்பமே இவரை திட்டித் தீர்க்கும் போது இன்னும் கொஞ்சம் க்ரிப்பாகத்தான் இருக்கிறது.  ஆனால் அதற்கு அப்புறம் வரும்  பொது நலச் சேவை, கொலை, எப்போது பார்த்தாலும் காரில் துரத்தும் வில்லன். ஆல்பட் தியேட்டரில் ந்டக்கும் ஆர்த்தி காமெடி பைட்.கிக் பாக்ஸிங், என்று மெல்ல சுருதியிழந்து சுவாரஸ்யமிழக்கிறது.
இப்படத்தின் கேரக்டருக்கு மிஸ்காஸ்டிங் நகுல். கேரக்டரின் பலத்தை இவரால் தாங்க முடியவில்லை. டயலாக் டெலிவரியில் இருக்கும் குழந்தைத்தனம் அவரின் கேரக்டரின் மேல் கொடுக்க வேண்டிய இம்பாக்டை கொடுக்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் நன்றாக உழைத்திருக்கிறார். சாந்தினி அழகாய் இருக்கிறார். இயல்பாகவே அவரது கண்களில் தெரியும் ஒர் மென்சோகம் கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது. ராஜா நகுலின் மேல் ஒரு தலை காதல் புரியும் அவனிமோடியின் கேரக்டர் க்யூட். அவரது நண்பராய் வரும் நிஷாந்தும்  சிறப்பாக செய்திருக்கிறார்.  சோஷியல் ஆக்டிவிஸ்டாய் வரும் மணிவண்ணனின் கேரக்டரும், அவரது வாய்ஸ் மாடுலேஷனும் பர்பெக்ட்.
ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் இசையில் கலாய்ப்போம் என்ற பாடலைத் தவிர பெரிதாய் ஏதும் ஈர்க்கவில்லை. பின்னணியிசையும் ம்ம்ம்ஹும். வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று போட்டிருக்கிறார்கள். ஆரம்பக்கட்ட காட்சிகளைத் தவிர இம்ப்ரசிவாய் இல்லை. என்னாச்சு சார்..? வசனம் வெற்றி மாறன். உதயம் NH4ல் வரும் “உன் கூட இருந்தா கான்பிடன்ஸா இருக்கு. ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்குது” என்பது போல பல டயலாக்குகள் கேட்டதே. பிடி விதைகளைப் பற்றி மணிவண்ணன் பேசும் வசனங்கள் அழுத்தம். ஆனால் அவைகளை வசனங்களில் சேர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை.

எழுதி இயக்கியவர் பிருதிவி ராஜ்குமார்.  சித்தாள் வேலை செய்து படிக்க வைக்கும்  தன் பெற்றோர்களின் நிலை உணர்ந்த பெண், ஷோஷியல் ஆக்டிவிட்டியில் ஆர்வமிருப்பவள். ஈ.சி.ஆர் விடிய விடிய குடித்துவிட்டு ஆட்டம் போடும் இடத்திற்கு ஏன் வர வேண்டும்?. நகுலின் அப்பாவை நடு ரோட்டில் கத்தியால் குத்தி கொன்றுவிட, அவரை மடியில் போட்டு அழும் வரை வில்லன் காத்திருப்பது. மண்டையில் அடிப்பட்டு கோமாவில் இருக்கும் நகுலை யாருக்கும் தெரியாமல் ஹாஸ்பிட்டலிருந்து சீதா வீல் சேரில் வைத்து தப்பித்து போகும் காட்சியில் ரிஷப்ஷனில் ஒரு பெண் வேலை பார்த்து கொண்டிருக்க, அவரை தாண்டி வரும் சீதா எதிரே வரும் டாக்டர்களைப் பார்த்ததும், வண்டியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் காட்சிகள் செம காமெடி.   செந்தூரப்பூவே படத்தில் விஜய்காந்திற்கு தலையில் ஒர் வலி வரும். படத்தின் முக்கிய காட்சிகளில் எல்லாம் அந்த தலை வலி வந்து நம்மை டென்ஷனாக்கும். அதே போல நகுலுக்கு இப்படத்தில் திடீர் திடீரென தூக்கம் வந்துவிடும் என்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் திடீரென தூக்கம் வந்து ஹீரோயின் குரல் கேட்டு எழுவது எல்லாம் ஸ்ஸுப்பா.. முடியலை.
பிடி விதைகளை பயன்படுத்துவதால் ஏற்படும்/படப் போகும் பிரச்சனைகள், ஈழப் பிரச்சனை, என்று சமூக நோக்கோடு வரும் காட்சிகள், கதாநாயகி சாந்தினியின் அப்பா அம்மா சித்தாள், மேஸ்திரியாய் இருந்து கொண்டு தன் பெண்ணை வக்கீலுக்கு படிக்க வைக்கும் விஷயம்,  சாந்தினியிடம் ராம் ஜெத்மலானியை சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு நாளும் ஒரு காபி ஷாப்பாய் அலைய வைத்து நகுல் தன் காதலை வளர்க்கும் காட்சிகள்.  என்று பல காட்சிகள் ஆங்காங்கே சுவாரஸ்ய முடிச்சாய் இருந்தாலும் மொத்த திரைக்கதையில் ஏகப்பட்ட ப்ளாஷ்பேக்குகளும், தேவையேயில்லாத குத்து பாடல், பிரச்சார வாடை போன்றவை ஏற்கனவே லெதார்ஜிக்காய் போய்க் கொண்டிருக்கும் திரைக்கதையை மேலும் நத்தையாக்குகிறது. நல்ல கதையிருந்தும் அதை சுவாரஸ்ய திரைக்கதையாக்க தவறியிருக்கிறார்.
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

rajasundararajan said...

ரெம்ப நீஈஈளம்! ஜூனியர்ஸோட வர்ற சண்டை என்னத்துக்கு? ராம் ஜெத்மலானி கூடக் கொட்டாவிதான். சீரியஸான விசயத்தை உறங்கிவிழுகிற விசயமாக்க நம்ம ஆட்களாலதான் முடியும்!

Unknown said...

ஆமாண்ணே இந்த கதைக்கு நம்ம விமர்சனம் எழுத குள்ள கை வலியே வந்துருது அவ்ளோ நீளம்