இதுதான்டா க்ளைமாக்ஸ் -1
Dear Gentle ladies and Gentlemen,
The below post is highly recommended for the adults whose mental capacuty is absolutely equivalent to 14 years or less aged children. It is going to be a mind and stomach teasing journey. Hence you are depanetly requested to keep one andaa full of chilled drinks. Gulp it at regular intervals in order to avoid smoke bursting out of your ears/stomach etc. Here we go.....
அதிர்ஷ்ட ரேகையின் அனைத்து கோடுகளும் நடுமுதுகில் ஆழமாய்ப்பதிந்த சுபயோக தினமது. அம்மகோன்னத நாளின் நள்ளிரவில் சன் டி.வி.யில் துர்கா க்ளைமாக்ஸ். பராசக்தி, முள்ளும் மலரும், மௌனராகம் போன்ற ரசனையற்ற படங்களால் அக்மார்க் தமிழ் சினிமா ரசிகர்களை சீரழித்த ராகுகால யுகமொன்றில் இவ்வனைத்தையும் புறந்தள்ளி வந்தாரொரு மகராசன். அதன்பின் துர்கா மூலம் பட்டி தொட்டியெங்கும் நமது செல்லக்குட்டி ராமநாராயணனி ன் கும்தலக்கா சீசன். முழுப்படத்தை பற்றி சிலாகித்து எழுதினால் கலைஞர் வயதாகும் வரை தொடரலாம். Lets dip ourselves into the divine க்ளைமாக்ஸ் முமென்ட்ஸ் அலோன்!!
துரு துரு துர்காவை கடத்தி ஒரு பங்களாவில் கட்டிப்போடுகிறது வில்லன் கிட்டி(மனிதர்) கேங். அவளை காப்பாற்ற நிழல்கள் ரவி(மனிதர்) , ராமு(குரங்கு) , ராஜா(நாய்) முப்படை கும்மிருட்டில் குபீர் மிஷனுடன் ஸ்பாட்டடைகிறார்கள். நிமிர்ந்து நடந்தால் மாட்டிக்கொண்டு விடுவோம் என்பதால் ராஜா சற்று குனிந்தவாறு தவழ்ந்து நடக்க(செத்தான் ஸ்பீல்பெர்க்) அவன் முதுகை பற்றிக்கொண்டு ராமு வெகு மெளனமாக பாலோ செய்கிறான். எந்த அறையில் துர்கா இருப்பாள் என்று பங்களா வெளியே த்ரீ இடியட்சும் குழம்பும் நேரம் 'பாப்பா பாடும் பாட்டு. கேட்டு தலைய ஆட்டு' ஹிட் பாடலை மவுத் ஆர்கனில் மீட்டுகிறாள் துர்கா. இந்த சிக்னலை கூட புரிந்து கொள்ளாத சோப்ளாங்கி அடியாள் படை(மனிதர்கள்) மிலிட்டரி உடை தரித்து வாசலில் துப்பாக்கியுடன்(!!!) தேவுடு காக்கிறது.
பொறுக்கி எடுத்த தத்திகளாக அடியாட்கள் ஒரே திசை நோக்கி காவல் காக்க ராமுவும், ராஜாவும் அருகில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி அங்கிருந்து முதல் தளத்தின் ஜன்னலருகே ஜம்ப் அடிக்கிறார்கள். பம்மியவாறு இருவரும் துர்கா இருக்கும் ஜன்னலை நோக்கி செல்லும்போது பீர் பாட்டில் ஒன்றை தெரியாமல் தட்டி விடுகிறான் ராஜா. அது உருண்டு புரண்டு தரையில் விழப்போகும் நேரம் பார்த்து நம்ம ராமு சீட்டா பைட் தீப்பெட்டியை தூக்கிப்போட்டு தடுத்து நிறுத்துகிறான். வாரே வா. பிற்பாடு துர்காவை காப்பாற்றி நிழல்கள் ரவியிடம் ஒப்படைக்கிறார்கள் இரு வல்லவர்கள்.
'ஆமா தம்மாத்தூண்டு பொண்ணுக்கு எதுக்குடா மிலிட்டரி ரேஞ்சுக்கு இத்தனை பேர் காவல்?'...இப்படியெல்லாம் கேட்டா வாய்லயே அடிப்பேன். Because it is a Ramanarayanan's ரணகள ராஜபாட்டை. How dare you ask such silly kostins.. don't you have atleast some kind of basic கலைநோக்கு பார்வை?

துர்காவை கையில் ஏந்திக்கொண்டு குதிரையில் பறக்கிறார் ரவி. அவர்கள் பின்னே கோட்டை விட்ட அடிப்பொடிகள் குதிரைகளில் மிஷின் கன், வெடிகுண்டுகளுடன் துரத்த.....' நிறுத்து. அப்ப ராமு, ராஜா என்னடா ஆனாங்க?' என்று விண்ணதிர கதறி அழும் ரசிகர்களே..சொல்கிறேன். சொல்கிறேன். ஜேம்ஸ் பாண்டுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கார்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு 'செமையோ செம' வாகனத்தில் ராஜா தன் நண்பன் ராமுவை அமர வைத்து குதிரைகளை விட வேகமாக பறக்கிறான். சற்று நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் சட்டென சாலையின் ஓரம் பதுங்குகிறார்கள். அங்கிருந்து சடாலென ராஜா ஒரு அடியாள் மீது பாய்ந்து குதற ராமு மிஷின் கன்னை லபக்குகிறான்.
செங்காத்து வீசும் மலைப்பகுதியை அடைந்ததும் ஆங்காங்கே ராஜா பள்ளம் தோண்ட அதில் குண்டுகளை புதைக்கிறான் ராமு. அது மட்டுமா? அந்த குண்டை ஒரு இயந்திரத்தின் மூலம் இயக்கி வில்லன் படையை கதி கலங்க வைக்கிறான். அடுத்து ராமு கையில் எடுப்பதோ மிஷின் கன். மிஷன் நிறைவேறாமல் போகுமா என்ன?
ஒருபக்கம் கீழே ரவி சண்டை போட இன்னொரு பக்கம் துர்கா மலை உச்சியை நோக்கி நடக்கிறாள். அவளை கொல்ல ஒவ்வொரு பாறையின் உச்சியிலும் மிஷின் கன்னுடன் குட்டி வில்லன்கள்(எப்டி?). அனைவரையும் குறிவைத்து சுட்டு தள்ளுகிறான் ராமு.
விதி துர்காவை மிதிக்க முனைகிறது. ஒற்றைச்செடியை கெட்டியாக பற்றியவாறு 'அங்கிள்..அங்கிள்' என்று அழுதவாறு பாறை நுனியில் இருந்து பதறுகிறாள். மினி வஸ்தாதுகளோ ஈவு இரக்கமின்றி துர்காவை நோக்கி துப்பாக்கிய நீட்டி சாவு கிறக்கம் காட்டுகிறார்கள். விடுவானா ராமு? தொலைதூரத்தில் இருந்து அவர்களையும் சுட்டொழிக்கிறான். பாவம் துர்கா..கை வலி தாளாமல் கீழே 'அங்கிள்' என்று கதறியவாறு விழுகிறாள். ஆனால் அவளை டக்கராக கேட்ச் செய்து காப்பாற்றி விடுகிறார் ரவி மாமா.
பட் நோ யூஸ். ரவி,துர்கா இருவரின் முதுகிற்கு பின்னேயும் இரு அடிப்பொடிகள் துப்பாக்கியை நீட்டி 'ஹான்ட்ஸ் அப்' என்று சொல்ல சோகத்தில் ரசிகர்கள் அருகில் படம் பார்ப்பவரின் தோளில் இருக்கும் தோலை 2 இஞ்ச் ஆழத்திற்கு கடித்து விட...'யாமிருக்க பயமேன்' என்று மீண்டும் ராமு மிஷின் கன்னால் அந்த country fruit வில்லன்களை டுமீல் செய்கிறான்.
ராமுவின் அமேசிங் அட்வெஞ்சரை கண்டு ரவியும், துர்காவும் பூரித்து போகிறார்கள். ரவி சூட்டும் புகழாரம் இதோ: 'வெரி குட் ராமு'. அருமையான திட்டம் பாழாய்ப்போனதால் அன்லிமிட்டட் காண்டில் இருக்கும் மெயின் வில்லர் கிட்டியின் அடுத்த (ஸ்டன்ட்) மாஸ்டர் ப்ளான் என்ன? துர்காவும், அவளைப்போலவே இருக்கும் மல்லிகாவும் பிழைத்தார்களா? ராமு, ராஜா கதி என்ன?
துர்கா க்ளைமாக்ஸ் 2....விரைவில்.
அதுவரை ராமநாராயண நாமத்தை 5,000 தரம் உச்சரித்து அமைதி காப்பீர் உலகத்தீரே!!
Sivakumar
Comments
இந்த லாஜிக் ஏல்லாம் பாத்தா தமிழ்ழ படம் முடியாது சார்...
ஆடியன்ஸ் அக்சப்ட் பண்ணிடாங்க சார் படம் ஆல் ஏரியா ஹிட்டு சார்...
ஆடியன்ஸ் அக்சப்ட் பண்ணிடாங்க சார் படம் ஆல் ஏரியா ஹிட்டு சார் ...
//இதுதான்டா க்ளைமாக்ஸ் -1// அப்போ இது ஒரு கொலைவெறி தொடரா... ஓடுங்க அது நம்மை நோக்கி தான் வருது... :-)
உங்கள் எழுத்தில் உங்கள் நடையில் இதுதான்டா க்ளைமாக்ஸ் சூப்பர்
இந்த படத்துல தானே கொரங்குக்கும் , நாய்க்கும் ஒரு டூயட் வெச்சி (இளமனது பாடல்) ராசாவை அசிங்க படுத்தி இருப்பார் ராம்ஸ்??