Thottal Thodarum

May 20, 2013

கொத்து பரோட்டா -20/05/13

70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்
இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்பதை வெளிக்காட்டும் நேரம் வந்திருக்கிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@



ஐ.பி.எல் மாலை மற்றும் இரவு நேர சினிமாவை கிட்டத்தட்ட காலியாக்கியிருக்கிறது. ஒரு சில மல்ட்டி ப்ளெக்ஸுகளைத் தவிர பெரும்பாலான தியேட்டர்கள் காலியாகவே இருக்கிறது. சென்ற வாரம் தேவி திரையரங்க வளாகத்திற்கு சென்ற போது அங்கிருந்த வண்டிகளின் எண்ணிக்கை மற்றும் வாக் இன் ரசிகர்கள் என்று கணக்குப் பார்த்தால் மொத்தமே நான்கு தியேட்டருக்கும் சேர்த்து 500லிருந்து 600 பேருக்குள் தான் இருப்பார்கள் போல. விசாரித்ததில் ஆமாம் என்றார்கள்.
#@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாட்டில் ஜாதி வெறி இன்னும் ஓயவில்லை என்பதை பற்றி நேற்றைய ட்ராவலில் நிறைய பேசிக் கொண்டிருந்தோம். கிராமங்களில் நுழைந்ததுமே பார்த்த அடுத்த சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்வி என்ன ஆளு? என்பதுதான்.  சொந்த அண்ணனே காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையையும், அவளது கணவன், மற்றும் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நேற்றைய சம்பவம். இன்னும் ஆணித்தரமாய் தமிழ் நாட்டில் ஜாதி வெறி ஓயவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ம்ஹும்
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
காதல் இல்லாத பெண்கள் பெரும்பாலும் சிங்கிளாகவே இருக்கிறார்கள். #Translation.

இன்றும் வழக்கம் போல் மின்வெட்டு இருந்தது மின் துறை அமைச்சருக்கு ஆரோ தப்பா தகவல் சொல்லிட்டாங்க போல

தான் காப்பியடிச்ச ஒரிஜினல் இங்கிலீஷ் படத்தோட பேரயே கேப்ஷனா போட்ட என் தலைவன் பவர் ஸ்டாரா ஏமாத்துனாரு? லத்திகா Butterfly on wheels

live is not at all live.. it defers

ரெண்டு மூணு கோடியில் எடுத்திருந்தா படம் ரீலீஸுக்கு முன்னாடியே சூப்பர் ஹிட் படமாயிருக்கும்.12 கோடியாம் #மூன்று பேர் மூன்று காதல்

என்னைக்காச்சும் டிவில பார்க்கும் போது நல்லாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு கேட்போம். # மூன்று பேர் மூன்று காதல்

இதுக்குத்தான் நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லை.

உன்னுள் என்ன நினைக்கிறாய் என்பதை உணரமுடியாமல் இருக்கும் நிலையை நான் வெறுக்கிறேன்.

துணையில்லாமல் இருப்பது வருத்தபடக்கூடிய விஷயமல்ல. யார் துணையில்லாமல் என்னால் தனியாய் இயங்க முடியுமென்ற வெளிப்பாடுதான் அது.

வலி உன்னை பலமாக்குகிறது.

வெற்றி என்பது நான் யார் என்று நிருபிப்பது இல்லை. நாம் விரும்புவதை திருப்தியுடன் செய்வதுதான்.

உடைந்ததை ஒட்ட வைக்க முயற்சிப்பது வேறொரு புதிய உருவத்திற்காக..

மோசமான உறவுகள் நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றி விடுகிறது. #அவதானிப்பூ

வாழ்கையிலேயே மோசமான விஷயம் நாம் விரும்பும் நபர் வேறொருவரை மாய்ந்து மாய்ந்து விரும்புவதுதான்.

தமிழ் தாய்க்கு மாடல் யாரு? எனி போட்டோகிராப்ஸ் ஃபார் தமிழ் தாய்

ஆயிரம் செலவு இருக்கு தமிழ் தாய்க்கு சிலை வைக்கலைன்னு யாரு அழுதா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சனியன்று துவாரில் தயாரிப்பாளரின் குலதெய்வக் கோயிலில் தொட்டால் தொடரும் படத்தின் பூஜை  நடந்தது. நாட்டார் வழக்கப்படியான பூஜை. எனக்கொரு வித்யாசமான அனுபவம். அதற்காக சனியன்று காலை கிளம்பி துவாருக்கு சென்றோம். முன்பெல்லாம் வெளியூர் சென்று திரும்பும் வழியில்தான் கும்பகோணம் டிகிரி காபி கடைகள் நிறைய இருக்கும். ஆனால் இப்போது போகும் வழியில் கூட கடை போட ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்காலத்தில் ஹைவே முழுவதும் டீக்கடைகளுக்கு பதிலாய் கும்பகோணம் டிகிரி காப்பி கடைகளாகவே மாறிவிடும் போலிருக்கிறது. ஏகப்பட்ட கடைகள் இருந்தாலும், எல்லா காப்பி கடைகளிலும் டிகிரி காப்பி டேஸ்ட் இருப்பதாய் தெரிய்வில்லை. பித்தளை டபரா டம்ளரில் கொடுப்பதெல்லாம் டிகிரி காப்பியில்லை என்பதை ஒரு சில கடைகள் நிருபிக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வரும் வழியில் ஒரு டோலில் நல்ல உயர்தர காரில் ஒரு குடும்பம் இருந்தது. வந்தவர் அவரது வண்டியிலிருந்து ஒரு பெரிய எஜுகேஷன் குழுமத்தின் அட்டையைக் காட்டி அறுபது ரூபாய் டோலுக்கு விலக்கு கேட்டார். டோல் டிக்கெட் கொடுப்பவர் விலக்கு அளிக்க மறுக்க, விடாமல் காரில் உட்கார்ந்து கொண்டு விவாதம் செய்ய ஆரம்பிக்க, பின்னால் நின்ற எங்களுக்கு செம எரிச்சல். சிறிது நேரம் கழித்து அங்கேயிருக்கும் இன்சார்ஜ் அதிகாரி ஒருவர் வந்து விலககு அளிக்க முடியாது என்று ஆணித்தரமாய் கூறியதற்கு பிறகு வேறு வழியில்லாமல் அக்குடும்பம் பணம் கொடுத்து டோல் டிக்கெட் வாங்கிக் கொண்டு போனது. இம்மாதிரியான பஞ்சாயத்துகள் நடக்கும் போது உடனடியாய் ஒரு அதிகாரியை வைத்து, அந்த வண்டியை மட்டும் தனியே கொண்டு போய் நிறுத்தி அவர்களுடய பிரச்சனைகளை சரிசெய்தால் பின்னால் நிற்கும் வண்டிகளின் க்யூ குறையும். அது மட்டுமில்லாமல் தேவையேயில்லாமல் இந்த சண்டை முடியும் வரை வண்டிகள் ஏசிக்காக, ஆன் செய்யப்பட்டு இருக்க, பெட்ரோல், டீசல் வெட்டியாய் காற்றில் கரைகிறது. பயன்பாட்டை குறைக்கச் சொல்லி கதறுவதை விட, தேவையில்லாத இம்மாதிரியான விரயங்களை தவிர்க்கலாமே?
@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று மாலை திருநெல்வேலி ஹலோ எப்.எம் வெங்கட்ராமின் முதல் புத்தக வெளியீட்டு விழா, கென்யா தமிழனின் காதலிகளுக்காக என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. வெங்கட்ராமின் புத்தகத்திற்கு நான் தான் வாழ்த்துரை எழுதியிருந்தேன். விழாவிற்கு, அஜயன் பாலா, பாடலாசிரியர் அண்ணாமலை, நேர்பட பேசு நிகழ்ச்சி தொகுப்பாளர் குணா, நடிகர் தாமு, நடிகர் அசோக், தயாரிப்பாளர் இயக்குனர் கஸாலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவிற்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் ஒருவரை ஒருவர் முதல் முறை சந்தித்துக் கொள்கிறார்கள். ஏன் நானே வெங்கட்ராமை தொலைபேசியிலும், இணையத்தின் மூலமாய் தான் நெருக்கமேத் தவிர நேரில் சந்திப்பது இதுதான் முதல் முறை. விழா நாயகன் ரேடியோ ஆர்.ஜே என்பதால் வந்திருந்த நட்பு வட்டங்கள் கூட பெரும்பாலும் ஆர்.ஜேக்களாய் இருந்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பின் போது தங்கு தடையில்லாமல் ரேடியோவில் பேசுவதைப் போல பேசிக் கொண்டேயிருந்தார்கள். மைக்ரோ என்கிரெவிங் எனும் திறமையில் சிறப்பு பெற்றிருக்கும் மதுரை பிரபு சந்திரனை வாழ்த்து வரவேற்றார்கள். அவருடய தந்தையின் பெருமிதத்தை பார்க்க மிக்க சந்தோஷமாய் இருந்தது. வெங்கட்ராமின் புத்தகத்தை வெளியிட்ட அஜயன்பாலா கைராசிக்காரர். என்னுடய முதல் புத்தகமான  லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்தை வெளியிட்டு விமர்சித்தவர். 2010ல் வெளியான அந்த புத்தகத்திற்கு இது வரை ஏழு புத்தகங்கள் வெளியாகியிருக்கிறது. எனவே அவரின் ராசி வெங்கட்ராமுக்கும் தொடரட்டும். வாழ்த்துக்கள் வெங்கட்ராம், கென்யா தமிழன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் ஆட்டத்தை விட சூடாக போய்க் கொண்டிருக்கிறது. பணம் அதிகம் புழங்கும் எந்த இடத்திலும்  மது, மாது, சூது கவ்வியே தீரும் என்பது விதி. அது தான் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் முன்னாலாயே தெரிஞ்சதினால்த்தான் நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லை. கிரிக்கெட் பாக்குறதுக்காக வேலையவே ரிசைன் செய்துட்டு மேட்ச் பார்த்தவன் நான். இப்போ இப்படியாயிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A guy asked a girl in a library; “Do you mind if I sit beside you”?

The girl answered with a loud voice; "I DON'T WANT TO SPEND THE NIGHT WITH YOU!!!”.

All the students in the library started staring at the guy and he was embarrassed. After a couple of minutes, the girl walked quietly to the guy's table and she told him “I study psychology and I know what a man is thinking, I guess you felt embarrassed right?"

The guy responded with a loud voice: "$200 JUST FOR ONE NIGHT!!!? THAT'S TOO MUCH!!!"

...and all the people in the library looked at the girl in shock and the guy whispered in her ears; “I study Law and I know how to make someone feel guilty"

கேபிள் சங்கர்

Post a Comment

40 comments:

pichaikaaran said...

ஏதாவது புது இடத்துக்கு போகும்போது , உங்களுக்கு போன் செய்து , எங்கு சாப்பிடலாம் என கேட்டு அப்படியே மொக்கை போடும் பொற்காலம் இனி வராது என்பது வருத்தம்தான் என்றாலும் , நல் வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள்..மகிழ்ச்சி....

Subha said...

Caste will be there until politics is there.
Check the criteria for the parties when alloting the seats for elections

Ba La said...

"வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது"

அன்பு + வாழ்த்துகள்.

vkbm42 said...

Wish you all the best for your first Movie...Thottachu..iny..ungalin payanam nallavithamaga Thodarum...Valthukkal...

IlayaDhasan said...

Congrats and BOL.

தருமி said...

புதிய டைரக்டருக்கு வாழ்த்துகள்.......

r.v.saravanan said...

மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள்.

கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க வாழ்த்துக்கள் சங்கர் சார்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என் ட்வீட்டிலிருந்து.... மிகவும் ரசித்தேன்....


வாழ்த்துக்கள்...

நேசமித்ரன். said...

ரொம்ப சந்தோஷம் தலைவரே ! மனமார்ந்த வாழ்த்துகள் ! காத்திருப்புக்கு அர்த்தம் உண்டு என்பதை காலம் நிரூபிக்கிறது. நிச்சயம் மிகப் பெரிய வெற்றி அடைவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.மீண்டும் வாழ்த்துகள் !

Uma Gandhi said...

சங்கர் சார் , சினிமாவில் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

ஜேகே said...

Excellent news Cable .. Congrats and wish you all the best.

R. Jagannathan said...

முதலில் வாழ்த்துகள்! தொட்டுவிட்டீர்கள், வெற்றி தொடரும், வானம் தொடுங்கள்!

தயாரிப்பாளர் உங்களுக்கு சர்வ சுதந்திரம் கொடுத்து, செலவை சுருக்காது ஒத்துழைக்க வேண்டுகிறேன். இப்போதைய ட்ரெண்டில் புதிய, இளம் இயக்குனர்கள் தமிழ் பட உலகை நல்ல திசைநோக்கி நகரச் செய்திருக்கிறார்கள், நீங்களும் அதே போல் வெற்றிபெற வாழ்த்துக்கள். முக்கியமாக முழுதும் தயாராகி, திட்டப்படி ஏற்பாடுகள் செய்து படத்தை சீக்கிரம் முடித்து வெளியிட வாழ்த்துக்கள்.

'துவார்' எங்கிருக்கிறது?

- ஜெகன்னாதன்.

R. Jagannathan said...

திருவள்ளுவருக்கு சிவாஜி மாடல்; தமிழ்த்'தாய்'க்கு தமிழ் 'அம்மா' தான் மாடல் ஆக இருக்கவேண்டும். சொக்கா.. நுறு கோடி ரூபாய் ஹ்ம்ம்ம்ம்... - ஜெ.

ராஜன் said...

Very happy to hear. Best of Luck.

saturn730 said...

//வந்தவர் அவரது வண்டியிலிருந்து ஒரு பெரிய எஜுகேஷன் குழுமத்தின் அட்டையைக் காட்டி அறுபது ரூபாய் டோலுக்கு விலக்கு கேட்டார்
...

//

உயர்தர காரில் வரும் இம்மாதிரி பிச்சைகாரர்கள் முதலில் திருந்த வேண்டும்.. 60 ரூ ஒரு பெரிய காசா அவர்களுக்கு? வெட்டி பந்தா தான் டோல் கொடுக்காமல் சென்றால் அதில் ஒரு அற்பத்தனமான சந்தோசம்...

ஆனால் அதே காரில் ஒரு கட்சி கொடி இருந்திருந்தால் சலாம் போட்டு போக சொல்லி இருப்பார்கள்

Anonymous said...

All the best.I am very eager to watch your film.

ரமேஷ் வைத்யா said...

All the best for a grand success dear friend!

Dwarak R said...

wish you the very best cable.

மாதேவி said...

வாழ்த்துகள்.

Valaipayan said...

All the very best

Unknown said...

வாழ்த்துக்கள் தல

தராசு said...

என்னது, கொத்து புரோட்டா எழுத மாட்டிங்களா, ஹலோ...... வேணாம் ஏதாவது சொல்லிறப் போறேன், அப்புறம் ரணகளமாயிரும்..... தெரிஞ்சுக்கங்க

பால கணேஷ் said...

உங்களின் முதல் படம் சரியான நேரத்தில் வெளியாகி, பிரம்மாண்டமான வெற்றியைக் குவிக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் டைரக்டர்(கேபிள்)ஜி!

reverienreality said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

என் விஸ்வரூப விமர்சனத்திற்கு http://reverienreality.blogspot.com/2013/01/blog-post_28.html அடுத்து இரண்டாவது விமர்சனமாய் அது அமையும்...

கண்டிப்பா ஜெயிப்பீங்க...

வாழ்த்துக்கள் மறுபடியும்...

வாசு said...

All the best and expecting a new trend setting movie from u.

Anonymous said...

வாழ்த்துக்கள் கேபிள்ஜி...

செங்கோவி said...

பதிவுலகில் இனிமேல் கொத்துப்புரோட்டா போடா விட்டாலும், சினிமாவில் கொத்துப்புரோட்டா போட்டு கலக்கப்போகும் அண்ணன் கேபிளாருக்கு வாழ்த்துகள்.

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

எங்களையும் எழுத்தாளர்களாக அங்கீகரித்து வந்து வாழ்த்தி ஊக்கப்படுத்தி உங்கள் மனதில் மட்டும் அல்லாமல் உலக புகழ் பெற்ற கொத்து புரோட்டாவிலும் இடம் கொடுத்த உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் இந்த தொடக்கம் இன்னும் பல இடங்களை தொடும் அப்பொழுதும் உங்கள் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையில் (பின்ன கேபிள் ஜி தொட்டால் தொடரும்ல)

Vadivelan said...

All the best. :)

சுட்டபழம் said...

vaalthukal....

MANO நாஞ்சில் மனோ said...

இணைய தளபதி.....இயக்குனர் தளபதி ஆனார்....வாழ்த்துக்கள் அண்ணே...!

அன்புடன் அருண் said...

இணையத்திலும், எங்கள் இதயங்களிலும் கண்ட வெற்றி போல...தங்கள் இயக்கத்திலும் வெற்றி காண உளமார்ந்த வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள்..விமர்சனத்துக்காக பதிவர்கள் உங்கள் படத்தை பார்த்து விடுவார்கள்.மினிமம் கேரண்டி தான்.
---------------------

Muthu Pandi said...

This is ur Golden chance.. Put ur all efforts ... U should win .... Congrats.... Mr.Cable... Muthupandi.B, Bangalore

arul said...

congrats sankar anna

Hari said...

Thalai super. Nichiyama nenga oru vetri padam than edupenga. Valthukkal.

maruthamkumaran said...

மனமார்ந்த வாழ்த்துகள் ! மிகப் பெரிய வெற்றி அடைவீர்கள்.

Unknown said...

வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது மட்டுமில்ல சார் அதை தைரியமாய் சொல்றதும் தான். தொட்டுட்டிங்க தொடரட்டும் வெற்றி.

Mohan said...

Congrats Sir

mohamed said...

hallo, cable, neenga oru thodar kadhai yeluthikkittu irunthingale... naan sharmi vairam ..... yenna aachu avvalavu thaanaa... ...