Thottal Thodarum

May 29, 2013

Aurangazeb

அர்ஜுன் கபூர் இஷ்குஜாதேவின் வெற்றிக்கு பிறகு வரும் படம். அதிலும் ரெட்டை வேடப் படம். அண்ணனுக்கு பதிலாய் தம்பியை அனுப்பி அப்பாவை வீழ்த்த ப்ளான் போடும் போலீஸ். அப்பாவுடனேயே இருந்து கொண்டு ஆட்டையை கலைக்கப் பார்க்கும் அம்ரிதாசிங்.  தன் சாம்ராஜ்யத்தை காக்க பிரயத்தனப்படும் அப்பா ஜாக்கி ஷெராப். ஜாக்கி ஷெராப்பின் சாம்ராஜ்யத்தை ஆள் மாறாட்டம் செய்து அவரை கைது செய்யாமல் அவரின் தொழிலை ஆக்கிரமிக்க நினைக்கும் போலீஸ் கமிஷனர் ரிஷிகபூர். அவரின் உறவினரான நடுநிலை போலீஸ் பிரிதிவிராஜ்.  அர்ஜுன் கபூரின் அம்மாவிற்கு ஒர் குழப்பமான கதை. அவருக்கும் பிரிதிவிராஜின் அப்பா அனுபம் கெருக்குமான உறவு என ஏகப்பட்ட சப் ப்ளாட்டுகளை ஒருங்கிணைத்த திரைக்கதை தான் ஓளரங்கசிப்.


70களின் கதைக் களன். விதவை அம்மா, பாசம், செண்டிமெண்ட், சூது, அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட இடமாற்றத்தினால் இருவருக்கும் படையலாகும் காதலி. என்று கேரக்டர்களின் அணிவகுக்கிறது. அர்ஜுன் கபூருக்கு பாடி ஒத்துழைத்த அளவிற்கு கண்கள் ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால் நடிப்பு ரொம்ப தூரத்தில் கூட தெரியவில்லை. இம்மாதிரியான கதைகளை தன் தோளில் தாங்கி நடத்தி செல்லும் ஆளுமை வேண்டும். அது மிஸ்சிங். இம்ப்ரசிவான நடிப்பு என்றால் போலீஸ் கமிஷனர் ரிஷிகபூரைத்தான் சொல்ல வேண்டும். அவ்வளவு கேஷுவலான நடிப்பு. முழுக்க, முழுக்க கரப்ட் போலீஸாக இருந்தாலும், குடும்பம், அதன் பாதுகாப்பு என்றிருப்பவர், தன் ஆசைக்கு எதிராய் வரும் போது சொந்த மருமகனை கூட கொல்லத் தயங்காத கிரேஷேட் கேரக்டரைஷேஷனை மிக அருமையாய் கொண்டு வந்திருக்கிறார். இன்னொரு சப்மிசிவ் பர்பாமென்ஸ் பிருதிவிராஜுனுடயது. நிச்சயம் ஹிந்தி பட உலகில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது. அண்ணனின் காதலியுடன் தம்பி உடலுறவு கொள்ளும் காட்சியும், அதன் பின் அவர்கள் பேசும் வசனம் இண்ட்ரஸ்டிங். ஆனால் அதன் பின்னால் வரும் காதல், அப்பெண்ணின் சாவு எல்லாம் உட்டாலக்கடி.

டெக்னிக்கலாய் சொல்லப் போனால் பெரிதாய் ஏதுமில்லை. பாடல்களும் பின்னணியிசையும் ம்ம்ம்ஹும். ஒளிப்பதிவு படத்திற்கு உறுதுணையாயிருந்திருக்கிறது.  பட் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இம்மாதிரியான ஆக்‌ஷன் படங்களுக்கு கொஞ்சம் வேகம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  மொத்தத்தில் ஔரங்கசிப் பழைய கள்ளை புதிய பாட்டிலில் கூட தராமல் சின்ன சின்ன டம்ப்ளர்களில் கொடுத்திருக்கிறார்கள்.
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Anonymous said...

மொத்தத்தில் ஔரங்கசிப் பழைய கள்ளை புதிய பாட்டிலில் கூட தராமல் சின்ன சின்ன டம்ப்ளர்களில் கொடுத்திருக்கிறார்கள்.