Thottal Thodarum

May 1, 2013

சூது கவ்வும்

மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் வலம் வந்து கொண்டிருக்கும் சி.வி.குமாரின் மூன்றாவது படைப்பு.  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் படம். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நலன் குமரசாமியின் இயக்கத்தில் வெளிவரும் படம். ஸ்டூடியோ க்ரீனின் அபாரமான, பப்ளிசிட்டி வேறு எதிர்பார்புக்கு கேட்க வேண்டுமா? 


சாப்ட்வேர் நண்பனின் காசில் வேலைக்கு போகாமல் அலாரம் வைத்து எழுந்து   குளித்து முடித்து சரக்கடிப்பதை மட்டுமே வேலையாய் வைத்திருக்கும் ரமேஷ். ஊரில் நயந்தாராவுக்கு கோயில் கட்டியதால் ஊர் கடத்தப்பட்ட சிம்ஹா, சாப்ட்வேர் கம்பெனியில் ஃபீமேல் ஹராஸ்மெண்ட் என்ற குற்றச்சாட்டில் மாட்டி வேலை போன சாப்ட்வேர் இளைஞர் அசோக் இவர்கள் மூவரும் நொந்து நூடூல்ஸ் ஆகி சரக்கடிக்க போன இடத்தில் ஹலூசினேஷனில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் அமெச்சூர் கடத்தல்காரர் விஜய சேதுபதி. இவருடன் இந்த மூவர் கூட்டணி கூட்டு சேருகிறது. அதன் பிறகு நடக்கும் அதிரிபுதிரி, ரோலர் கோஸ்டர் நிகழ்வுகள் தான் படம்.
ரொம்ப நாளாகிவிட்டது முழுக்க முழுக்க ஒர் ப்ளாக் காமெடி வகை ஆக்‌ஷன் திரில்லர் படம் பார்த்து. ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் லெதார்ஜிக்காக இருந்தாலும் விஜய் சேதுபதியின் கேரக்டர் வந்தவுடன் படம் டேக் ஆப் ஆகிவிடுகிறது. அதிலும் அவரது Kednapping  செய்வதற்கான 5 ரூல்கள் அட்டகாசம். ஒவ்வொரு ரூல்களை சொல்லும் போதும் அவர் சொல்லும் அரைகுறை இங்கிலீஷ் டயலாக் மாடுலேஷன்  க்ளாஸ். அமைச்சர் மகனை கடத்திவிட்டு, நாளைக்கு ஞாயித்துக்கிழமை நாங்க ஒர்க் பண்ணமாட்டோம் அதுனால் திங்கட்கிழமை அன்னைக்கு வந்து பணத்தை எங்க வைக்கிறதுன்னு சொல்றோம்னு சீரியஸாய் சொல்லுமிடம் செம காமெடி. ஊர் பட்ட அவசரத்திலும் அழுது கொண்டே ஒரு பீர் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் சிம்ஹா. ஏன் வேலைக்கு போகலைன்னு கேட்டதற்காக அரை மணி நேரம் லெக்சர் அடிக்கும் ரமேஷ். அப்பாவிடமிருந்து பணத்தை கறக்க, தன்னையே கடத்தி கொண்டு போகச் சொல்லும் கிடைக்கிற இடத்தில் எல்லாம் காசை அடிக்கும் கருணா, அரூபமாய் விஜய் சேதுபதியுடன் குடும்பம் நடத்தும் சஞ்சிதா, பேசா டெரர் வில்லன், ரவுடி டாக்டர், நம்பிக்கை கண்ணன் என்கிற பெயரில் போட்டுக் கொடுக்கும் சிவகுமார், சில்லறை இல்லை என்று சொன்னதற்காக தன்னை பிச்சைக்காரன் என்று சொல்லியதாய் வெறிபிடித்தலையும் அந்த பாபா தலைமுடி ஆள் என சுவாரஸ்ய கேரக்டர்களின் அணிவகுப்பு நடத்தியிருக்கிறார்கள்.

தினேஷின் ஒளிப்பதிவு தெளிவு.  வழக்கம் போல லியோவின் எடிட்டிங் படத்திற்கு தேவையான அளவிற்கு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களை விட, பின்னணியிசையில் மனிதர் சின்னச் சின்ன ஸ்ட்ரிங்கில் கலக்குகிறார். பாடல்களில் ரீட்ரோவை பயன்படுத்துவது சமயங்களில் நன்றாக இருந்தாலும் படத்தின் சுறுசுறுப்பை குறைக்கிறது. கார் ஆக்ஸிடெண்ட் ஷாட்களில் சிஜி சரியில்லை.
எழுதி இயக்கியவர் நலன்குமரசாமி. இவரது குறும்படங்களை பார்த்தவர்களுக்கு இவரது ரைட்டிங் ஸ்டைல் புரியும். இவரது பலமே சர்காஸ்டிக்காக அடிக்கும் சின்னச் சின்ன வசனங்கள் தான். “நல்ல மாமாவுக்கு ஒரு சூடு” “வீரம் அறவே கூடாது” ” நீ சாப்பிடுறது இட்லின்னு சட்னி கூட நம்பாதுடா” “சென்னையில என்ன பண்ணப் போறேன்னு முடிவில்லாம வந்தவன் தான் ஜெயிச்சிருக்கான்”விஜய் சேதுபதி பேசும் ப்ரோக்கன் இங்கிலீஷ் வசனங்கள். என தன் பலத்தை வைத்து சிக்ஸர் அடிக்கிறார். கடத்தல் செய்யப்பட்ட அப்பாவிடம் அந்த பெண்ணை விட்டே பேசச் சொல்லி அவரை  அசுவாசப்படுத்துவது, அவரிடமிருந்து பணத்தை அவருடன் போனில் பேசிக் கொண்டே நேரில் வந்து வாங்கிக் கொண்டே போகும் ஸ்டைல்.அத்துனை போலீஸ் இருக்கும் போது பணத்தை தூக்க செய்த ஒர் அட்டகாசமான போன்ற  ஐடியாக்கள் பட்டாசு.  போன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை கடத்தியவுடன் கூட தன்னை கடத்தியதை உணராமல் போனில் பேசிக் கொண்டே வரும் பெண், கடத்தப்பட்ட குண்டு பையன் எனக்கென்னவோ நீங்க மாட்டிப்பீங்கன்னு தோணுது என்று சொல்லுமிடம், முதல்வர் சாப்ட்டுட்டிருக்காரு என்று சொல்லும் போது  உள்ளே டேபிளின் மேல் பீட்சாவை வைத்து சாப்பிடும் இடம். இப்படி சுவாரஸ்ய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் மெல்ல ஆரம்பிக்கும் திரைக்கதை மெல்ல சூடு பிடித்து இடைவேளை வரும் போது சூது நம்மை கவ்விக் கொண்டிருக்க வைத்து இருக்கிறார். 
குறையென்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கேரக்டரை வைத்து பில்டப் செய்தது கொஞ்சம் ஓவர் தான். முதல் பாதியில் இருக்கும் சம்பவங்களின் நெருக்கம் இடைவேளைக்கு பிறகு இல்லாமல் திருடனை பிடிக்க போலீஸ் செய்யும் அட்ராசிட்டியான நடவடிக்கைகள் நம்மை பயமுறுத்துகிற அளவிற்கு படத்தில் அவர்களால் பாதிக்கப்பட போகும் விஜய் சேதுபதி கும்பலுக்கு வரவேயில்லை என்பதும். அவர்கள் எப்படியும் மாட்ட மாட்டார்கள் என்பது முன்பே தெரிந்துவிடுவதால் பெப் குறைந்து விடுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் கேரக்டர் சுவாரஸ்யமாய் இருந்தாலும் அவரை ஒர் ஹலூசினேசன் கேரக்டராய் வலம் வர வைக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஹெலிக்காப்டர் ஐடியா நன்றாக இருந்தாலும், ஜி.பி.எஸ் எல்லாம் வைத்திருக்கும் பேக்கை ஏன் போலீஸ் கண்டு பிடிக்க முடியவில்லை?. இப்படி திடீரென இரண்டாம் பாதியில் கதை நடுவில் அலை பாய்ந்த திரைக்கதை சட்டென சூடு பிடித்து க்ளைமேக்ஸேயில்லாத க்ளைமேக்ஸை வைத்து முடித்திருப்பது செம. சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் அது பற்றிய எண்ணமே வராத வகையில் ப்ரொடக்‌ஷன் இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படம் நெடுக குட்டிக் குட்டியாய் சுவாரஸ்ய கணங்களை மிக நுணுக்கமாய் வைத்து சாதாரண இடங்களைக் கூட அசாதரணமான இடமாய் மாற்றியமைத்த நலனின் திரைக்கதைக்கும், வித்யாசமான படங்களை தெரிந்தெடுத்து அதனை சரியான பட்ஜெட்டில் தயாரித்து வெற்றி பெற உழைக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துகள்


Post a Comment

12 comments:

saravanan selvam said...

என்னங்க சார்! படம் நல்ல படமா இல்லையான்றத தெளிவா சொல்லவே இல்லையே!!!படம் பாக்கலாமா வேணமன்றதையும் தெளிக்க சொல்லவே இல்லையே!!!உங்க விமர்சனம் இந்த படத்துக்கு அந்த அளவுக்கு எடுபடலயே!!!!!விஜய் சேதுப்தி ஆக்டிங் பத்தியும் சொல்லவே இல்லை

sethu said...

Pizzavoda compare panna sumardhan

BRAVO 'Shiva' said...

only because of your review...I am going to see the movie today itself...thanks...

rajamelaiyur said...

செம ஜாலியான படம் ... விமர்சனம் அருமை

வாசு said...

Thanks for the review.

Unknown said...

இது போன்ற இயக்குனர்களுக்கு மேடை தந்த கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு நன்றி சொல்வது நம் கடமை

Dino LA said...

விமர்சனம் அருமை

mani sundaram said...

அதல்லாம் சரி நீர் எப்பொழுது படம் எடுக்க போறீர்... சொல்லிக்கொண்டே இருக்கிறீர்...... வெய்டிங் போர் கிழித்து தொங்கவிடுவதற்கு.... :)

Jana said...

மிக நீண்டநாட்களின் பின்னர்.
தங்கள் நலங்கள் எல்லாம் எப்படி?

மாதேவி said...

நன்றி.

Unknown said...

thanks for ur review

MMESAKKI said...

Super Cable Sankar sir