2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் நெகிழ்ந்து போயிருந்த எனக்கு மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்த நாள் காலையில் பிரபாகரின் யூஷுன் வீட்டின் கீழ் அவருடய காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் தான் ராஜ். ஒல்லியாய், நல்ல உசரமாய் அருமையான கொங்கு தமிழில் அன்பொழுக என்னை கட்டி அணைத்து வரவேற்றார்.
அன்றைக்கு முழுவதும் அவருடன் ஜுரோங் பார்க், பீச், செராங்கூனில் பிரியாணி, சிங்கை முழுவதும் காரிலேயே ஒரு ரவுண்ட் என இரவு வரை என்னுடனேயே இருந்தார். வழி முழுவது சுவாரஸ்யப் பேச்சுக்கள். பதிவுலகத்தைப் பற்றி, மற்ற பதிவர்களைப் பற்றி, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி என விஸ்தீரணமான பார்வை இருந்தது. சிங்கப்பூரைப் பற்றி, அதனுடய ப்ளஸ் மைனஸ் என்று தகவல்களாய் அள்ளி தெளித்துக் கொண்டிருந்தார். அவர் டன்ஹில் புகைக்கும் ஸ்டைல் எனக்கு பிடித்தது. கிட்டத்தட்ட ஆறாவது விரலாய் டன்ஹில் எப்போதும் அவருடன் இருந்தது. கிட்டத்தட்ட பதினாலு ஆண்டுகளுக்கு மேல் சிங்கையிலேயே செட்டிலாகிவிட்டவர். அன்று முழுவதும் வேலைக்கு விடுமுறை அளித்து என்னுடன் அவர் செலவிட்ட கணங்கள் முழுவதும் அன்பு தோய்ந்திருந்தது. ஊருக்கு கிளம்பும் வரை காலையில் வந்து என்னை பார்த்துவிட்டு, ஏர்போர்ட் வரை வழியனுப்பிவிட்டுத்தான் கிளம்பினார். அதன் பிற்கு பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
இந்த ஆண்டு மீண்டும் என் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக சிங்கப்பூர் பயணம். சிங்கை வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் உடனடியாய் போன் செய்துவிட்டார். ஊருக்கு வந்த ரெண்டு மூன்று நாட்கள் நான் தயாரிப்பாளருடன் பிஸியாய் இருந்ததால் நண்பர்களின் வசதிக்கு என்னை சந்திக்க முடியாமல் இருந்தது. தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் இருந்தார். ஒரு நாள் மாலை வழக்கம் போல ஜமா சேர்ந்துவிட்டோம். நான், துபாய் ராஜா, ராஜ், அவரது மலேசிய நண்பர் மற்றும் வேறு நண்பர்களுடன். அதே அன்பும் பாசத்தோடு, என்னை பற்றிய விசாரணைகள். அதே டன்ஹில். ஸ்டைல் மிக உற்சாகமாக போனது அந்த இரவு. என் தயாரிப்பாளருக்கும் எனக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு மீண்டும் சந்திப்பதாய் கிளம்பினார்.
பதிவர் நக்கீரனிடமிருந்து போன். பதிவர் பட்டாபட்டி ஹார்டட்டாக்கில் இறந்துவிட்டதாகவும், முக்கியமாய் உங்களிடம் தகவல் தெரிவிகக் சொன்னதாகவும் சொன்னார். பதிவர் ஒருவர் மரணமடைந்தது வருத்தமாக இருந்தாலும், அவரை எனக்கு தெரியாதே பின்பு ஏன் என்னிடம் சொல்லச் சொன்னார்கள் என்று புரியாமல் சரி என்றேன். அடுத்ததாய் ரோஸ்விக் சொன்னதும் தான் தெரிந்தது ராஜ் தான் பட்டாபட்டி என்று. கடைசிவரை சிங்கை பதிவர்களாகட்டும், பதிவுலகில் ஆகட்டும் தன் அடையாளத்தை காட்டாமல் இருக்க ஆசைப்பட்டதன் காரணமாய் என்னிடம் கூட சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். ஹார்ட் அட்டாக் என்றதும் எனக்கு அவரது ஆறாவது விரலான டன்ஹில்தான் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே அவரது அன்பான பேச்சு, அவரது மகள்களின் மேல் வைத்திருந்த அன்பு, குடும்பம் என நினைவுக்கு வந்து கண்கள் குளமாயின. ஒர் நல்ல எதிர்பார்பில்லா நட்பு என்னிடமிருந்து விலகிவிட்டது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். I Miss You A Lot Raj :((
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
அவர்பால் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நட்பு தொடர்பு இருந்திருக்கிறது என படிக்கும் போது... முகமறியா நட்பின் ஆழம் மிகுதியானது அளாதியானது என்பது புரிகிறது. இழப்பின் பின்னும் அவரின் ஆன்மாவுடன் பேச துடிக்கிறார்கள் நண்பர்கள் என்பது அவரின் தளத்தில் இடப்படும் கருத்துகளில் தெரிகிறது.
http://puthur-vns.blogspot.com/2013/05/blog-post_17.html
Congrast, Thottal Thodarum Vetriyadaya Vazthukkal
:-(
Post a Comment