சில்க் ஸ்மிதாவின் நிஜமான வாழ்கையின் பின்னணியை, டர்ட்டி பிக்சரில் சொன்னது எல்லாம் ஜுஜுபி.. நாங்க தான் ஒரிஜினலாக சொல்கிறோம் என்றார்கள். சனாகான் வேறு ரெண்டு நாளைக்கு ஒரு முறை நான் அப்படி பீல் பண்ணேன் இப்படி பீல் பண்ணேன். என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். இவ்வளவு பில்டப்புக்கும் இது தகுமா? எனற கேள்வியோடுதான் படம் பார்த்தோம்.
சனாகானை வைத்து ஒரு பிட்டு படமாகவும் இல்லாமல், சில்க் ஸ்மிதாவின் கதையாகவும் இல்லாமல், நடிகையின் கதையாகவும் இல்லாமல், மொக்கையானது தான் மிச்சம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஒரு தாடிக்காரர் இருந்தார் என்றதை வைத்துக் கொண்டு குறுந்தாடி வைத்த ஒருவரிடம் தன்னை கொடுத்து அவருடனே லிவிங் டூகெதராய் இருந்தார் என்றும், ஸ்மிதாவின் பணத்தை எல்லாம் அவர் தான் சுவாஹா செய்தார் என்றும், தாடிக்காரரின் வயது வந்த மகன் ஸ்மிதாவின் மேல் காதல் கொண்டதால் தான் சில்க் ஸ்மிதா தாடிக்காரரால் கொலை செய்யப்பட்டார் என்று கதை சொல்கிறார்கள்.
எஸ்.கே
எஸ்.கே
Post a Comment
1 comment:
ரொம்ப எதிர் பார்த்து ஏமாந்தீடீங்க போல ?
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
Post a Comment