பக்கத்தூர்காரைங்க மேட்டு தெரு பொம்பளைகிட்ட வம்பு பண்ணான்னு சசிகுமார் அப்பாரு ஊடு பூகுந்து அவனை வெட்டுறாரு. வெட்டிட்டு தப்பிக்கையில மாட்டிகிறாரு. மாட்டினா முவம் தெரிஞ்சிரும்னு கூட வந்தவுக கிட்ட சொல்லி தலைய வெட்டி கொல்ல சொல்லி சாமியா ஊருக்குள்ள இருக்காரு. அப்பாரு மாரியே புள்ளையும் வளரக்கூடாதுன்னு வழக்கமா இந்த மேரி வேஷத்துக்குன்னே பொறப்பெடுத்திருக்கிற என்னைப் பெத்த தாயி சரண்யா நினைக்குது. பொறவு என்ன ஆவும்? அதும் மதுரை பக்கப் படம். வெட்டிக்கு சரக்கடிச்சிட்டு, லந்து பண்ணிட்டு திரிஞ்சிட்டு, ரவுடித்தனம் பண்ணாம அப்புறம் என்ன மதுரைப்படம். அதையேத்தேன் செய்யுறாரு நம்ம சசிகுமாரு. என்னதேன் ரெளடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சாலும் அவர் எம்.சி.ஆர் மாதிரி, நல்லதுக்குத்தேன் திருடுவாரு, பொம்பளைப்புள்ளைங்கள ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு. நியாயத்துக்குத்தான் அடிப்பாரு. அவருக்கு ஒரு கண்ணாலத்தை செஞ்சி பாத்திரமுன்னு ஆத்தாகாரி தலையால தண்ணி குடிக்கிறா மவன் வேணாங்குறான். என்னடான்னா.. நான் தெனம் ரவுடித்தனம் செஞ்சிட்டு திரியறவன் நாளை பின்ன எனக்கெதாவது ஒண்ணுன்னா என் ஆத்தாகாரி மாதிரி என் பொண்டாட்டி அழுவக் கூடாதுங்கிற நல்லெண்ணம்தேனு சொல்லுறான். பொறவு என்ன நடந்திச்சுங்கிறதுதான் கதைன்னு நினைக்கேன்.
ஏன் அப்படி நினைக்கேன்னு சொன்னேன்னா.. கதை ஆரம்பிச்சதிலேர்ந்து ஒரு எடத்திலேயும் நிக்காம அங்கிட்டும் இங்கிட்டும் தாறு மாறா எங்கிட்டும் நிக்காம அலைபாஞ்சிட்டேருக்கு. சசிகுமாருக்குன்னு ஒரு இமேஜ் மக்கள் மத்தியில இருக்கு. வழக்கமா ப்ரெண்டுங்க, லவ்வுனு வர சசிக்குமாரு இப்ப அம்மா பாசத்தை பிழிஞ்செடுக்க வந்திருக்காரு. அங்கொன்னும் இங்கொன்னுமா நாலைஞ்சி சீனு நல்லாருந்தாலும், சசிகுமாருக்கு லவ் வந்திருச்சிங்கிறத ரெண்டு பேரும் ஹைஸ்பீடுல நடந்து சலாம் போடுற சீனெல்லாம் ரொம்ப ஓல்ட். முடியலை. லஷ்மிமேனன் பொண்ணு கண்ணுக்கு லட்சணமா, அம்சமா, சும்மா தளதளன்னு, ஓங்குதாங்கா இருக்கு. பெருசா நடிக்கிறது ஏதுவும் இல்லாததினால ஓகே. அம்மா சரண்யாவுக்கு இந்த மேரி நடிப்பெல்லாம் தூக்கத்துல கூட செய்திரும். இதிலேயேயும் அதே. வேல்முருகன் மட்டும் ரெண்டொர் எடத்துல நல்லா செஞ்சிருக்கிறாரு. சரண்யாவோட கூடவே வர்ற ரமாபிரபாக்ளைமேக்ஸுல நல்லா செஞ்சிருக்காங்க.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு நல்லாருக்கு. முக்கியமா மொத சீனுல வர்ற டாப் ஆங்கிள் ஷாட் இருக்கு பாருங்க அது சூப்பரு. அதே போல சீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டுல நடக்குற பைட்டு.. அட்டகாசம். இசை ஜிப்ரான்.ரெண்டு பாட்டு பாட்டா கேக்குறப்ப நல்லாயிருந்திச்சு. பாக்கையில ம்ஹும். ஆர்.ஆர் ரொம்பவே ம்ஹும். கூடவே இளையராஜா பேரையும் போட்டிருக்கணும். இடைவேளைக்கு அப்புறம் மூணு பாட்டு ஆர்.ஆருக்கு பதிலா வருது. ரெண்டு நம்ம மொட்டையோடது. இன்னொன்னு சுரேஷ் பீட்டரோட அக்கா மக, அக்காமகங்கிற பாட்டு. அநேகமா சன் டிவீக்காரய்ங்க அவங்க வாங்குற படத்துல நட்ட நடுவுல ஒரு குத்து பாட்டை சேர்ப்பாய்ங்க.. அதான் இது போல..
கிராமத்துல ஒவ்வொரு வீட்டுலேயும் ஒரு குலசாமி இருக்கும். அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கும் அதை சொல்லுரோங்கிறது நல்ல விஷயம்தேன். ஆனா அதுக்கு கதைன்னு ஒண்ணை பிடிக்காத்தினால, தெரகக்தையும் அங்க இங்கன்னு தொங்கிட்டு நிக்குது. சசிகுமாரை கீரோ ஆக்கியே தீரணுங்கிற ஒரு பெரிய முடிவ எடுத்துட்டாக பொறவென்ன ஆக்கிர வேண்டியதுதான்னு பருத்தி வீரன் கணக்கா தப்படிக்கிற இடத்துல குத்து போடுறாரு. கம்பு சுத்துறாரு. சசிகுமாரோட அப்பாரு ஊருக்காக செத்ததினால சாமியாகி அவரு குடும்பத்துக்கு தலைவரி கிடையாதுன்னு சொல்லுதாக. பொறவு தலகட்டு வரி தரலைன்னு ஊர் திருவிழாவுக்கு சேதி சொல்லாம போறது எதுக்கு?. வில்லனை உருவாக்கணும்னே ஒரு லந்தைக் கூட்டி ஆரம்பிச்சா மேரி இருக்கு. இடைவேளை ப்ளாக்கு சூப்பர். அதும் ஹீரோயின் தன் லவ்வை சொன்ன அடுத்த செகண்ட் நடக்குற விஷயமிருக்கே சுமமா பொடனியில ஓங்கி ஒரு தட்டு தட்டுனா மாதிரி இருந்திச்சு.
என்ன தான் அம்மா பாசம், ஊரு செண்டிமெண்ட், அப்படி இப்படின்னு கத சொன்னாலும் எப்ப பார்த்தாலும் யாராச்சும் ஆரையாவது சங்கருக்குறாய்ங்க. ஆட்டை வெட்டுனா, மனுஷன வெட்டுனா, எதை வெட்டுனாலும் மொவத்துல அரை லிட்டர் ரத்தம் பீச்சியடிக்குது. ரெண்டு சீனுக்கு ஒருக்கா நெஞ்ச நக்குறா செண்டிமெண்ட்டு சீனு வேற. க்ளைமேக்ஸ் டிவிஸ்டை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறாய்ங்க போல. அம்மா செண்டிமெண்ட், வெட்டருவா, வேல்கம்பு, கழுத்தை துண்டா நறுக்குறது இதையெல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சுன்னா ஒருக்கா பாத்திட்டு வந்திருங்க..
கேபிள் சங்கர்
Post a Comment
17 comments:
Hey, your writing style is different today. What happened? I feel the way of writing is somewhat struggling to understand. Please continue your old style.
அண்ணே முடியல . .
எப்டின்னே இப்டி . . .
idhaium oruka parka soldrigale... neenga pata kastatha nagalaum padunama.... nalla ennam Mr.Cable...nalla ennam
என்ன ஆச்சு Cabel?
விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?
Boss
we are waiting for your movie also. Let us c
Anne thottaal thodarum tittle pkp vodathun solluraru. Title Mattum thaane.
Hi Cable....நாங்க உங்க ப்ளாக் read பண்றதே உங்க தரமான வார்த்தை உபயோகம் தான் காரணம். நீங்க பிஸினா ப்ரீய இருக்கும் போது எழுதுங்க எதோ சின்ன பையன் எழுதுறது ரும்ப மோசம் அக இருக்கு.
இருந்துட்டு போகடும்னே , மதுரைக் காராயீங்க என்னைக்கும் பாசத்துக்கு கட்டுப் பட்டவுய்ங்க தேன் ...நீங்க வேன்ன நல்லா எடுங்க நாங்க வேனான்ல , எங்களுக்கு தெரிஞ்சது அம்புட்டு தான்னு வச்சுக்கங்க இப்ப என்ன ஆயிபோச்சு..
ஈரான்காரன் இதையே அவன் மொழில எடுத்தா ஆகா சூபரு இத போல உண்டான்னுட்டு காப்பி அடிச்சு ப்ரோடுசர ஆட்டயப் போடுவீங்க அவளவு தான
மதுரை பாஷைனு திருநெல்வேலி பாஷை பேசுரீங்ளனே..விளங்கிடும்.
It's not ur review cableji
It's not ur review cableji
இது கேபிள் சங்கர் ஸ்டைல் இல்லியே...???? உங்க குழு தான் எழுதிருக்கும்ன்னு பார்த்தா, உங்க பேரு வேற இருக்கு....ஒரே குழப்பமா இருக்கு...
ஆனா, உங்க ஸ்டைல் இல்லாம நல்லா இல்ல
அது சீவில்லிபுத்தூர் இல்லண்ணே....சீலித்தூர்
Akkamaga song is from Malaysian album. By the Keys.
நன்றி.
Yenna sir, outsourcing koduthuteengala? Unga style madhriye illaye indha vimarsanam?
Hi
Post a Comment