சாயிப் அலிகானின் தலை முடி, படத்தின் டிசைன் எல்லாம் பார்த்தால் பி கிரேட் ஹாலிவுட் படம் போல இருக்கிறதே என்ற எண்ணத்தில் தான் படம் பார்க்க போனோம். படம் ஆரம்பித்து அரை மணி நேரத்தில் வித்யாசமான கலாட்டா ஜோம்பி த்ரில்லர் என்று தெரிய வரும் போது சுறுசுறுப்பாகிவிடுகிறது.
மூன்று நண்பர்கள். ரெண்டு பேர் தண்ணி, தம், பெண்கள் என்று சுற்றுகிறவர்கள். இன்னொரு நண்பன் அப்பிராணி. கோவாவில் நடக்கவிருக்கும் அவனது ஆபீஸ் மீட்டிங்கிற்கு அவர்களும் கிளம்ப, அங்கே சந்திக்கும் பெண் கோவாவில் உள்ள தனித்தீவில் ரஷ்ய மாபியாக்கள் நடத்தும் ரேவ் பார்ட்டியிருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள இன்வைட் செய்கிறாள். பரபர துறுதுறு பார்ட்டிகள் இருவரும் அப்பிராணியையும் கூட்டிக் கொண்டு தீவுக்கு செல்கிறார்கள். இரவு மட்டையாகி காலையில் எழுந்து பார்த்தால் பார்ட்டிக்கு வந்தவர்கள் எல்லாம் ஜோம்பிக்களாகி, உயிருடன் சக மனிதனை கடித்து தின்ன ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடமிருந்து நண்பர்கள் குழுவும், உடன் வரும் பெண்ணும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடியாய் சொல்லியிருக்கிறார்கள்.
ரொம்பவும் சிம்பிளான கதை. ஜாலியாய் எடுத்திருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் வள வள பேச்சு லேசான சோர்வை தந்தாலும், ஆபீஸில் சக் ஊழியையுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள, ஆரம்பித்த இடத்தில் அப்படியே விட்டு விட்டு, மெடிக்கல் ஸ்டோரில் போய் “காண்டம் ஒண்ணு” என்று கேட்க, “காண்டம்னா?” “ அதான் செய்யுறதுக்கு?” “அதிலதான்.. “ என்று லைனாக வைரைட்டிக்களை லிஸ்டு போட்டு சொல்ல, தோழிக்கு என்ன பிடிக்கும் என்று புரியாமல் அவளுக்கே போன் போட்டு, “உனக்கு சாக்லேட் பிடிக்குமா?” என்று கேட்க, அவளோ எனக்கு பசிக்கலை என்று சொல்லுமிடத்தில் ஆரம்பித்து படம் நெடுக, ஆங்காங்கே வரும் ஒன்லைன் பஞ்சுகள் கலகலப்பூட்டுகிறது. “பார்லிமெண்டில் போய் தம்மடித்தால் பாரதிய ஜாயிண்ட் பார்ட்டியாயிரும்” “நம்மூர்ல ஏதுடா ஜோம்பி?” “குளோபளைசேஷன். எய்ட்ஸ் வரலை அது போலத்தான் வெஸ்ட்லேர்ந்து ஜோம்பிஸ்” என அடித்து தள்ளுகிறார்கள். மூன்று பேரில் குணால் துறுதுறு. ரஷ்ய மாபியா ஆளாக வரும் சாயிப் அலிகான் வழக்கம் போல். ஆரம்பக் காட்சியில் ரஷ்ய ஆக்செண்டில் பேசிவிட்டு, தொடர் கேள்வி இம்சை தாங்காமல் டெல்லி வாலா என்று ஒத்துக் கொள்ளும் இடம் சூப்பர். அந்த ஸ்லீக் பியூட்டி பூஜா பனியனை கழட்டும் போது சும்மா ஜிவ்வென காது நுனி எல்லாம் சிவக்கிறது. ம்ஹும். ஆவூவென்றால் இரண்டு நாயகர்களிடம் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை மேட்டருக்கெல்லாம் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்வது படம் பார்பப்வர்களுக்கு ஒர் உணர்வெழுச்சியை உண்டு பண்ணத்தான் என்றாலும், யாராச்சும் பண்ணா நல்லாருக்கும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிடுவது நாட்டிற்கு நல்லதல்ல.:)
ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. டெக்னிக்கலாய் கொஞ்சம் பிகிரேட் ஹாலிவுட் சினிமாப் போலத்தான் இருக்கிறது. எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்கள்.99, ஷோர் இன் த சிட்டி, ஆகிய படங்களை இயக்கியவர்கள். இம்முறை காமெடி ஜோம்பிக்களோடு வந்திருக்கிறார்கள். ஆரம்பக் காட்சியிலும், இடைவேளைக்கு பிறகு பூஜாவை நண்பர்கள் இருவரும் ட்ரை பண்ணும் காட்சிகள் கொஞ்சம் இழுவை. பட்.. வித்யாசமான கலக்கல் ஒன்லைனர்களுடனான காமெடி ஹாரர் பட விரும்பிகளுக்கு.
கேபிள் சங்கர்
Post a Comment
6 comments:
thotttaal thodarum... kalakkunga
Congrats for your next project 'தொட்டால் தொடரும்'!
Congrats for your new project 'தொட்டால் தொடரும்'!
சரி அண்ணே படத்தை பாத்துடுறேன்.. அப்புறம் புது படத்திற்கு வாழ்த்துக்கள். இப்போதான் தட்ஸ்தமிழில் படிச்சேன் - http://tamil.oneindia.in/movies/news/2013/05/new-movie-thottal-thodarum-175319.html
வாழ்த்துக்கள் தொட்டால் தொடரும்னு படம் பண்ணபோறதா ஓன் இந்தியா வேப்சைட்ல படித்தேன் .....
அருமையான பதிவு!
http://karuvooraan.blogspot.in/
ஆதரவு அளிக்கவும்! நன்றி.
Post a Comment