காண்டே, ஷூட் ஆவுட் இன் லோக்கன்ட்வாலா, போன்ற படங்களின் இயக்குனர் சஞ்செய் குப்தாவின் இயக்கத்தில் 1982 மும்பையில் நடந்த அஃபீஷியல் என்கவுண்டரைப் பற்றிய படம்.
கதை என்றால் மனோகர் ஒர் சாதாரணன். நல்ல படிப்பாளி. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டு கங்கனாராவத்தை காதலித்துக் கொண்டிருப்பவர். அவர் செய்யாத குற்றத்திற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு வெளியே வரும் போது ரவுடியாய் வெளி வருகிறார். மான்யா பாய் ஆகி பெரிய தாதாவாக வலம் வர, வழக்கம் போல எதிர் க்ரூப் இம்தியாசிற்கும் இவர்களுக்கும் லடாய். போலீஸ் மான்யா க்ரூப்பை தூக்கும் ப்ளானில் இறங்கி மான்யாவை என்கவுண்டரில் தூக்குகிறது. எப்படி என்பதை நான்லீனியரில் சொல்லியிருக்கிறார்கள்.
வெகு வழக்கமான கதை. ஜான் ஆப்ரகாம் தான் ஹீரோ. என்றைக்கு இவர் நடிப்பார்?. மாசோ ரவுடியாய் வலம் வரும் போது ஓகே.. அதற்காக அந்த இறுகிப் போன முகத்தை சம்மர் கட் அடித்து, குங்குமப் பொட்டு வைத்து காலேஜ் பையனாக நடிப்பது எல்லாம் ஸ்ஸ்ஸ்சப்ப்ப்பா முடியலை. இவரின் காதலியாய் கங்கனா ராவத். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவர் அக்காலகட்ட உடையணிந்து வலம் வருகிறார். ஜான் ஆப்ரகாமிடம் உதட்டுக்கடி வாங்குகிறார். ஸ்டீமியான உடலுறவு காட்சிகளில் பங்கேற்கிறார். அனில்கபூர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர், மகேஷ் மஞ்ச்ரேகர் ஆகியோர் போலீஸின் பக்கக் கதையை அவர்களின் நியாயத்தோடு சொல்கிறார்கள். எதிர் க்ரூப் மனோஜ் பாஜ்பாய், சோனு சூட். வழக்கம் போல. அதுவும் சமீபத்தில் தான் கேங்க்ஸ் ஆப் வசேப்பூரில் பார்த்த இம்பாக்டில் இருப்பதால் நத்திங் ஸ்பெஷல். துஷார் கபூர் வேறு இருக்கிறார்.
நடுவில் ரெண்டு குத்து பாடல்கள், எக்கச்சக்க சத்தத்தோடு. ஒன்றில் சன்னிலியோனி தன் பெரும் தனங்களை வைத்து ஆட்டுகிறார். இன்னொன்றில் சோபியா சவுத்ரி. பிரியங்கா சோப்ரா வேறு ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போகிறார். இந்த படத்திற்கு எதுக்கு இத்தனை பாடல்கள் என்று தெரியவில்லை. அட்மாஸ் ஒலியமைப்பு வேறு சரியாய் மிக்ஸ் செய்யப்படாமல் பெரும் சத்தமாய் அமைந்தது. பாராட்டப்பட வேண்டிய முக்கியமானவர்களில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் சஞ்செய் குப்தாவும், ஆக்ஷன் கொரியொகிராபரும்தான். சும்மா பின்னி எடுத்திருக்கிறார்கள். சென்ற வார இந்தி பட வெளியீட்டில் முதல் மூன்று நாட்களில் பெரும் வசூலை குவித்திருக்கிறது இந்தப்படம். அம்பூட்டு நல்லாவா இருக்கு?
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
சன்னி லியோனுக்கு வந்த கூட்டமா இருக்கும் கேபிள்ஜி.
Post a Comment