Thottal Thodarum

May 28, 2013

The Great Gatsby

 டிகாப்ரியோ, டோபி மெக்குயர், கேரி முல்லிகன், அமிதாப்பச்சன், பஸ் லுஹுர்மேனின் இயக்கம், 3டியில் படமாக்கப்பட்டது என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். F. Scott Fitzgerald 1925ஆம் ஆண்டில் இதே பெயரில் எழுதிய நாவல்தான் இப்படம். ஏற்கனவே பல முறை ப்ராட்வே நாடகங்களாகவும், 1926ல் மெளன படமாகவும், 1949, 74, 2000 என மூன்று முறை  திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வந்த கதைதான். நம்மூர் அம்பிகாபதி, அமராவதி, வசந்த மாளிகை, தேவதாஸ் போல திரும்பத் திரும்ப சொன்னாலும் உருக வைக்கும் காதல் கதை.



அதிலும் இன்னொருத்தன் பொண்டாட்டியை மாய்ந்து மாய்ந்து காதலிக்கும் ஷாருக்கான் டைப் கதை. டிகாப்ரியோவும், கேரியும் மாய்ந்து மாய்ந்து காதலிக்கிறார்கள். அவளின் ஸ்திரிலோலக் கணவனை விட்டு பிரிந்து வர அவளின் தயக்கம். இவர்களின் ஊடே டோபியின் மீடியேஷன் என்று உணர்ச்சிப் பிழம்பாய் கதை போகிறது. டிகாப்ரியோ நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது அநியாயமான வார்த்தை. மனுஷன் உருகி உருகி வழிகிறார். இன்னொரு பக்கம் கேரியும் அவருடன் இழைந்து இழைந்து காதலிக்கிறார். இந்த வீட்டைப் பார், உனக்காக உருவாக்கி வைத்திருக்கும் இந்த மாளிகையைப் பார், ட்ரைஸைப் பார் என்று வசந்தமாளிகையை நியாபகப்படுத்தும் காட்சிகள் நிறைய. நிரம்பவும் ரிச்சான காட்சிகள், அதிலும் 3டியில். சில பல ஷாட்களின் ப்யூட்டிக்கு நன்றாக இருந்தாலும், அதை வெறும் டியில் எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அருமையான காஸ்டிங், உடையலங்கார விஷயங்கள், செட், ஆர்ட் டைரக்‌ஷன், இயக்குனர் என்று இருந்தாலும், பேசிப் பேசி மாய்வதால் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. அதிலும் முதல் சீனில் பார்த்து அடுத்த சீனில் மேட்டர் செய்து காதலை வளர்க்கும் காலகட்டத்தில் ரொம்பத்தான் பண்ணுறாங்களோ என்று தோன்றத்தான் செய்கிறது.
The Great Gatsby - Hollywood Vasantha Maligai.
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: