சில திரைப்படங்களை பார்க்கும் போது அடடா எப்படி இந்தப் படத்தை மிஸ் செய்தோம் என்று வருத்தப்பட வைக்கும். அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் இந்த உஸ்தாத் ஓட்டல். ஒரு முறை பதிவர் சிவகுமார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சாப்பாட்டுக்கடை ஓனராகிய நான் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி நான் தேடி போவதற்குள் தியேட்டரை விட்டு போய்விட்டது.
நான்கு பெண்களுக்கு பிறகு பிறந்த ஃபைசிலுக்கு எல்லாமே அக்காக்கள்தான். பெண்களால் வளர்க்கப்பட்டவன். அதனால் சமையல் அவனுடனேயே வளர்கிறது. வளர்ந்து பெரியவனாகி பெரிய செஃப் ஆக வேண்டும் என்கிற கனவுடன் வாழ்கிறவன். அவனது அப்பாவிற்கோ பெரிய 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றை கட்டி அதை நிர்வகிக்க ஆசை. அப்பாவிடம் வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பதாய் பொய் சொல்லிவிட்டு கேட்டரிங் படிக்கிறான். வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த மாத்திரத்திலேயே சஹானாவை பெண் பார்க்க போக, அங்கே அவன் செஃப் ஆக இருக்கும் விஷயத்தை சொல்ல, திருமணம் தடை படுகிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை. அப்பா பிள்ளையின் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு, இது இருந்தால் தானே வெளிநாடு போவாய். என் காசு இருந்தால்தானே சுற்றித் திரிய முடியுமென்று முடக்குகிறார். வேறு வழியில்லாமல் தாத்தா நடத்தும் உஸ்தாத் ஓட்டலில் அடைக்கலமடைகிறான். அறுபது வருஷங்களுக்கும் மேலாய் நடந்து வரும் அந்த பாரம்பரியமிக்க உஸ்தாத் ஓட்டல் நடந்தாலும் வருமானத்தில் ஓட்டைதான். தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையே இருக்கும் நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுகி, ஓட்டல் தாத்தாவின் கையைவிட்டு போய்விடும் நேரம் வரும் போது மேலும் இறுக்கமாகி நிற்கிறது. போராடி ஓட்டலை மீட்டு நிமிர்ந்து நிற்க வைத்துவிட்டு, தான் பாரிஸுக்கு செஃபாக போக ஆர்டர் வந்திருக்கிறது என்று கிளம்பும் நேரத்தில் தாத்தாவுக்கு உடல் நிலை கராப் ஆகிவிட, ஒரு லெட்டரை கொடுத்து மதுரைக்கு அனுப்புகிறார். அந்த லெட்டரில் “இந்த கடித்தத்தை கொண்டு வருப்வன் என் பேரன். அவனுக்கு நான் சமைக்க கற்றுத் தந்திருக்கிறேன். ஆனால் எதற்காக சமைக்க வேண்டும் என்று அவனுக்கு சொல்லிக் கொடு” என்று எழுதி அனுப்ப, ஃபைசல் என்ன கற்றுக் கொண்டான் என்பதுதான் கதை.
துல்குயிர் சல்மானின் நடிப்பு மிக யதார்த்தம். அக்காக்களுடன் வளர்ந்தவனாகையால் உடல் மொழியில் இருக்கும் ஒரு சாப்ட்னெஸ். இளைஞர்களுக்கே உண்டான குழப்பங்கள். அவர்களுக்கே உண்டான குதூகலங்கள், தாத்தாவுடனான பாசம், அவர்களுக்கே உண்டான கனவுகள், நெகிழ்ச்சியூடே உண்டாகும் உறவுகள், நட்பினூடே உருவாகும் காதல் என எல்லாவிதமான உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நித்யா மேனன். சொக்கி வைக்க பார்க்கும் பார்வையில்லை, க்ளிவேஜ் எக்ஸ்போசர் இல்லை, ஆனாலும் நம்மை மயக்குகிறார். ஒவ்வொரு படத்திலும் மேலும் மேலும் மேலும் என நம்மை ஆகர்ஷிக்கிறார். துல்குயிர் அவரை பெண் பார்க்க வரும் போது வாசலில் தோழிகளுடன் நின்று பார்க்கும் பார்வையில் ஆகட்டும், நாங்க எல்லாம் ரொம்ப ஆர்தடாக்ஸ் பேமிலி என்று ஆரம்பித்து, பெண் பார்க்கும் படலத்தின் போது தனியே பேச அழைத்த துல்குயிரிடம் சொல்லும் போது கண்களில் தெரியும் குறும்பு, நண்பர்களுடனான ராக் பேண்டில் பாட்டு பாடிவிட்டு, லேட்டாகிப் போய் துல்குயிருடன் பயணப்படும் ஓட்டமும், சந்தோஷமும் குதூகலமுடனான உற்சாக வெளிப்பாடாகட்டும் வாவ் க்ளாஸ். இந்த பெண்ணின் கண்களில், முக அசைவில், சின்னச் சின்ன உணர்வு வெளிப்பாடுகளில் நம்மை அப்படியே கட்டிப் போடுகிறார்.
தாத்தாவாக திலகன். வாவ்.. வாட் எ பெர்பாமென்ஸ். பேரன் வந்தவுடன் கண்களில் தெரியும் சந்தோஷம். அதிகாலையில் கடற்கரையில் தேநீர் போட்டுக் குடித்தபடி பேசும் அநாயசம், பேரனின் மேலிருக்கும் அக்கறை. பேரனிடம் தன் காதல் கதையை சொல்லும் போது கண்களில் தெரியும் கனவுகள்.. வாவ்.. வி மிஸ்யூ திலகன். என்னா ஒரு நடிப்பு.. சும்மா அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று எழுதுவதை விட படம் பார்த்தால் தான் அதை உணர முடியும். அவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது துல்குயிர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு போகும் போது அவர் சொல்லும் வசனம் ஃபா..க்ளாஸ்.
படத்தின் ஓட்டத்தினைப் போல உறுத்தாத க்ளாஸான ஒளிப்பதிவு. கடற்கரை காட்சிகள், அங்கே நடனமாடும் சூஃபி நடன கலைஞர்கள், என்று உஸ்தாத் ஓட்டலை நம் வாழ்வினூடேயே பயணிக்க வைத்திருக்கிறார். கோபி சந்தரின் இசை இன்னொரு ப்ளஸ் பாயிண்ட். பாடல்களை விட முக்கியமாய் பின்னணியிசை. படம் பாருங்கள் புரியும்.
படத்திற்கு பெரிய பலம் கதை திரைக்கதை எழுதிய அஞ்சலி மேனனின் எழுத்தும் அன்வர் ரஷீத்தின் இயக்கமும். தெளிவான நீரோடை போன்ற கதை நகர்த்தல். முதல் காட்சியிலேயே நம்மை உட்கார வைத்துவிடுகிறார். தொடர்ந்து ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு நான்கு பெண்களுக்கு பிறகு பிறக்கும் ஆண் பிள்ளையை தொடர் எதிர்ப்பார்பு தோல்வியால் இருக்கும் இதுவும் பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைத்து எல்லோரும் அசமந்தமாய் இருக்கும் காட்சி, அக்காக்களுடனான காட்சிகளில் தம்பியுடனான நெருக்கம், அவன் பல பெண்களுடன் நட்பு வைத்திருப்பதைப் பற்றி ஒவ்வொரு அக்காக்களும் பேசிக் கொள்ளூம் காட்சி க்யூட். தாத்தா பேரனூடே இருக்கும் உறவின் நெகிழ்ச்சி. துல்குயிர், நித்யா மேனனுடன் தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, தாத்தாவிடன் அவரின் உதவியாளர் உன்னைப் போலவே உன் பேரனும். என்று சொல்ல என்ன என்பது போல திலகன் பார்க்க, இன்னொருத்தனுக்கு பிக்ஸான பெண்ணை லவ் பண்றதுல என்று சொல்லுமிடம் என்று சொல்லி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சொல்லிக் கொண்டே போகலாம். க்ளைமாக்சில் மதுரையில் ஜெயபிரகாஷிடம் கடிதம் கொடுத்துவிட்டு அதை திலகனின் வாய்சில் “இந்த கடிதம் கொண்டு வருபவன் என் பேரன். இவனுக்கு நான் நல்லா சமைக்க கத்துக் கொடுத்துருக்கேன். ஆனா எதுக்காக சமைக்கணும்னு நீ தான் அவனுக்கு சொல்லித் தரணும்” என்று சொல்லும் போது மளுக்கென கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை. இதையெல்லாம் மீறி குறை காண ஒரு சில விஷயங்கள் தெரிந்தாலும்.. உஸ்தாத் ஓட்டல் கொடுக்கும் மறக்க முடியாத நெகிழ்ச்சி கலந்த சினிமா அனுபவம் மறக்கடிக்கிறது. டோண்ட் மிஸ்.. உஸ்தாத் ஓட்டல்.
கேபிள் சங்கர்

Post a Comment
7 comments:
One of the best movie i ever had seen in Malayalam...
இன்னும் மனசுல அப்படியே இருக்கு... ஒவ்வொரு காட்சியும்
நான் பார்த்து நெகிழ்ந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.. நீங்க எப்படி மிஸ் பண்ணீங்க அப்படிங்கிறதுதான் ஆச்சர்யம். ரொம்ப க்ளாஸான மூவி.. ஜெயப்பிரகாஷ் வர்ற சீன் எல்லாம் கண் கலங்கிடும். ஹீரோ பர்தா போட்டுக்கொண்டு லிஃப்ட் கேட்டு வர்ற சீன் செம காமெடியா இருக்கும்.. படத்தின் ஜீவனே சுலைமானி அருந்தியபடி திலகன் பேசும் வசனங்கள்தான்..இந்தப்படம் தேசிய விருது வாங்கினதுல எந்த ஆட்சேபனையுமே இல்ல.. வொர்த் மூவி...வெகுநாள் ஆனாலும் அருமையான விமர்சனம் கேபிள் ஜீ...
Why நோ கொத்து திஸ் வீக்.
It's a good food movie :)
கலக்கல்.............
வாங்க கேபிள்... அக்கறையா அக்கரை சேர தேசத்து படங்கள் பத்தி சொன்னதுக்கு...நல்ல படம், அதை சிலாகிச்சு எழுதின விமர்சனமும் சூப்பர்....
சாப்பா குருஸ் பற்றி.. நவம்பர் மாசம் நான் கூட இட்லிவடையில இத பத்தி எழுதினேன்..
http://www.idlyvadai.blogspot.in/2012/11/blog-post_6774.html
ரசித்தேன்...
cable anna...
Aravindhan here..hope remember me. i spoke to you regarding the issue with Fame international theaters cycle parking..anyway..good to see you in watching malayalam movies also..It shows your versatality in watching the movies..If you have time just check my blog..for more movies in malayalam..just now started writing..may not be in your standards...
http://tourintalkies.blogspot.com
Share your frank comments so that will improve in what i am lagging..Once again cheers for your writing and passion about cinems...
Aravindhan
+91 8281790566
Post a Comment