நேற்று கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எக்மோர் சென்றிருந்தேன். அமிர்தம் சூர்யா, வளர்மதி, லதா சரவணன், எஸ்.சங்கர நாராயணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தி புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை சொன்னார்கள். எனக்கு அமிர்தம் சூர்யாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவரை அவர் கலந்து கொண்டு பேச வேண்டிய புத்தகத்தைப் பற்றி படிக்காமல் வந்து பேசியதேயில்லை. முழுக்க படித்து, அப்புத்தகத்தைப் பற்றிய மிக இயல்பான விமர்சனத்தோடு சுவாரஸ்யமான பேச்சை பேசுவார். நேற்றும் அப்படித்தான் ஒரிரு கவிதைகளை படித்துக் காட்டியவர் அக்கவிதைகளை வரி பிரித்து சொல்லும் போது நிறைய அர்த்தங்கள் புரிபட ஆரம்பித்தது. கவிதைகளை எப்படி படிக்க வேண்டும் என்று புரிய ஆரம்பித்தது. கவிதைக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்று நினைப்பில் கவனமில்லாம இருந்த என்னைப் போன்றவர்களுக்கு அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு இன்ஞ் முன்னேறியிருக்கிறது என தோன்றியது. நன்றி அமிர்தம் சூர்யா.
@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழகத்தில் பான் மசாலா மற்றும் குட்காவை தடை என்று அரசு அறிவித்திருக்கிறது. அறிவிப்பென்னவோ சரி தான். ஆனால் அதை நடைமுறைப் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எல்லா பெட்டிக் கடைகளிலும், சர்வ சாதாரணமாய் குட்கா பாக்கெட்டுகள் கிடைக்கிறது. என்ன முன்பு சரம் சரமாய் தொங்கவிட்டிருப்பார்கள். இப்போது கீழிருந்து எடுத்துக் கொடுக்கிறார்கள். எல்லா பாக்கெட்டுகளின் மீதும் ரெண்டு, மூன்று ரூபாய் அதிகம் வைத்து விற்கிறார்கள். இதுக்கு சட்டம் போடாமலயே இருந்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழகத்தில் பான் மசாலா மற்றும் குட்காவை தடை என்று அரசு அறிவித்திருக்கிறது. அறிவிப்பென்னவோ சரி தான். ஆனால் அதை நடைமுறைப் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எல்லா பெட்டிக் கடைகளிலும், சர்வ சாதாரணமாய் குட்கா பாக்கெட்டுகள் கிடைக்கிறது. என்ன முன்பு சரம் சரமாய் தொங்கவிட்டிருப்பார்கள். இப்போது கீழிருந்து எடுத்துக் கொடுக்கிறார்கள். எல்லா பாக்கெட்டுகளின் மீதும் ரெண்டு, மூன்று ரூபாய் அதிகம் வைத்து விற்கிறார்கள். இதுக்கு சட்டம் போடாமலயே இருந்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@
ரெண்டு மூன்று வாரங்களுக்கு முன் வழிப்பறி கொள்ளைக்காரர்கள் கணவனை மனைவியின் கண் முன்னே கொன்று அவளது நகைகளை கொள்ளையடித்து சென்றார்கள் என்ற செய்தியை பார்த்திருப்பீர்கள். எனக்குள் நிச்சயம் இதில் எதோ காதல் விவகாரம் இருக்கிறது என்று தோன்றியது. கடைசியில் கல்யாணத்திற்கு முன் வேறு ஒருவருடன் காதல். ஜாதிப் பிரச்சனை காரணமாய் விருப்பமில்லாமல் வேறொருவனுடன் கல்யாணம். பின்பு பழைய காதலனை வைத்து புதுப் புருஷனை போட்டுத் தள்ளிவிடுவது என்பது சர்வ சாதாரணமாய் போய்விட்டது. இவளுங்க காதலுக்கு அநியாயமாய் ஒருத்தன் செலவு செஞ்சி கல்யாணம் பண்ணிட்டு உசிர வேற கொடுக்க வேண்டியிருக்கு. பெண்ணை பெத்த புண்ணியவான்களே.. பொண்ணு பெருசாவும் போதே லவ் பண்ணா நம்ம ஜாதிக்கார பயலா பாத்து லவ் பண்ணுன்னு சொல்லு வளருங்க.. இல்லாவிட்டால் இனி வரும் காலங்களில் பெண்ணை வளர்த்து ஆளாக்கும் செலவோடு, பின்னாளில் பொண்ணு கொலை செய்துட்டு வரும் போது அதுக்கு கோர்ட்டு, கேஸு செலவும் செய்ய வேண்டியிருக்கும். இம்மாதிரியான பெண்களை கல்யாணம் செய்து கொள்ளும் ஆண்களே.. சரியாயில்லைன்னு தெரிஞ்சிச்சுன்னா டைவர்ஸ் பண்ணிட்டு போய்ட்டேயிருங்க.. இவளுங்கள திருத்த ட்ரை பண்ணி உசிர கொடுக்காதீங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரெண்டு வாரங்களுக்கு முன் கொஞ்சம் முன்னதாய் தியேட்டருக்கு போனால் தமிழ அரசின் இரண்டாண்டு சாதனைகளை பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷனில் படு மொக்கை மியூசிக் போட்டு ஒரு பத்து நிமிஷத்துக்கு நம்மை அலற விட்டார்கள். இதை பார்த்து எல்லா சமூக வலை தளங்களிலும் புலம்பியதன் காரணமாய் வேறொரு விளம்பரம் மாற்றினார்கள். அதே கான்செப்ட் பின்னணியில் பாடலோடு, ஆனால் அதே பத்து நிமிஷம். முடியலை என்று நினைத்துக் கொண்டிருந்த போது, நடிகர் விவேக்கை வைத்து ஒரு விளம்பரப் படம் எடுத்திருக்கிறார்கள். இம்மாதிரியான படங்களை குட்டிக் குட்டியாய் எடுத்து போட்டால் நன்றாக இருக்கும். நேற்று தியேட்டரில் அம்மா உணவகம் பற்றி விவேக் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று சொல்லிக் கொண்டிருக்க, “அப்படியே அம்மா கிட்ட சொல்லி சத்யம் தியேட்டர் மீடியம் பாப்கார்ன் ரேட்டை குறைக்க சொல்லுங்க” என்ற குரல் வந்தது. சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. வேற என்ன பண்றது இம்மாதிரியான நேரங்களில் நகைச்சுவை உணர்ச்சிதான் நம்மை காப்பாற்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
இயக்குனர் மணிவண்ணனின் மறைவு குறித்து கேட்டவுடன் அதிர்ச்சியாய் இருந்தது. சமீபத்தில் அவரது ஐம்பதாவது படமான அமைதிப்படை2 ஆடியோ ரிலீஸின் போது கொஞ்சம் தள்ளாமையாய் இருந்தாலும் மனதளவில் உற்சாகமாய்த்தான் இருந்தார். அடுத்தடுத்து படங்கள் செய்வேன் என்றார். அவரது அமைதிப்படை2 சரியாக போகவிட்டாலும், அவர் நமக்கு அளித்த சிறப்பான படங்கள் பல. எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு காமெடியும், வில்லத்தனமும் கலந்து, சர்காஸ்டிக்கான அரசியல் நையாண்டிகளை விட்டு அதிர வைக்கக்கூடிய நடிகர் வேறொருவர் இன்னும் வரவில்லை. நடிகர், இயக்குனர், என்பதை மீறி அரசியலிலும் ஆர்வமுள்ளவராய் இருந்தார். ஒரு மனிதன் தான் சாகப் போகும் முன் அதற்கான அறிகுறிகள் தெரிந்து பேசுவான். அது அவன் வாழ்கிற காலத்தில் சாதாரணமாய் தெரிந்தாலும், பின்னாளில் அவனின் இறப்புக்கு பிறகு அர்த்தமானதாகிவிடும். அது போலத்தான் மணிவண்ணன் அவர்களின் சமீப கால மேடைப் பேச்சுக்களில் அவரது மரணத்தைப் பற்றிய பேச்சில்லாமல் இருக்காது. அவர் மறைந்தாலும், அவரது படைப்புகள் என்றென்றும் வாழும்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
டாய்.. டாய்ய்ய்ய்ய்..டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய்ய்ய்#சங்கூ
என் ட்வீட்டிலிருந்து
நடு ராத்திரி ஒரு மணிக்கு ரெண்டு வாட்டி கார் லைட் அணைச்சு சிக்னல் கொடுத்து இன்வைட் செய்ததில் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. :)
டாய்.. டாய்ய்ய்ய்ய்..டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
Post a Comment
2 comments:
எல்லா பாக்கெட்டுகளின் மீதும் ரெண்டு, மூன்று ரூபாய் அதிகம் வைத்து விற்கிறார்கள். இதுக்கு சட்டம் போடாமலயே இருந்திருக்கலாம்.
- atleast people might know that we doing something illegal. Very hard to stop this. atleast this type of control will reduce it usage
Thalai
"வாழ்வின் மோசமான நிலைகளில் உன்னோடு இல்லாதவனுக்கு, உன்னுடய சந்தோஷ காலங்களில் சிறிது நேரம் கூட இருக்க தகுதியற்றவன்"
Yen intha oravanganai , Pengal ithil serthi illaya
Post a Comment