இரண்டு பெண்களுடன் அதுவும் அல்லு அர்ஜுனோடு எனும் போது ஏற்படும் எதிர்பார்ப்பு ஒரு புறம் என்றால் பூரி ஜெகன்னாத்தின் இயக்கம் வேறு, டீசர்கள் வேறு பெரும் பில்டைப்பை கொடுத்திருக்க சென்னையிலேயே செம ஓப்பனிங்.
ஆகான்ஷா செண்ட்ரல் மினிஸ்டரின் மகள். மேல்படிப்புக்காக பாரீஸ் செல்கிறாள். அங்கே அவர் தங்கும் வீட்டில் ஒர் டயரியை கண்டெடுக்கிறார். அதில் அல்லு அர்ஜுனுக்கும், கோமலி என்கிற அமலாபாலுக்குமான காதல் கதை இருக்க, அல்லு அர்ஜுனை ஆகான்ஷா சந்திக்கிறாள். அல்லு பாரீஸில் ஒரு பேண்ட் வைத்துக் கொண்டு பிழைப்பை ஓட்டுகிறவர். கிடாரிஸ்ட் வேறு. அல்லு சிங்கிளாக இருக்க, அல்லுவிடம் கோமலிக்கு என்னவானது என்று கேட்கிறார். கதை விரிகிறது. கோமலிக்கு என்னவாயிற்று? அல்லு ஏன் சிங்கிளாய் திரிகிறார்? எதற்கு ரெண்டு சீனுக்கு ஒரு முறை யாரையாவது கத்தியாலோ, அல்லது துப்பாக்கியாலோ நட்ட நடு பகலில் சுடுகிறார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார்கள்.
எது எப்படியோ அல்லு அர்ஜுன் என்கிற ஒரு பயரான ஆளை திரையில் எப்படி காட்டினாலும் பற்றிக் கொள்ளும் பர்பாமென்ஸ். மனுஷன் துறு துறுவென அங்கும் இங்கும் ஓடியபடியே இருக்கிறார். ஓப்பனிங் சேசிங் சீனாகட்டும், ஸ்டைலான டான்சாகட்டும், க்ளைமாக்ஸுக்கு முன் ஆடும் குத்து டான்ஸாகட்டும், சடுதியில் ரியாக்ட் ஆகி அடிக்கும் ஒவ்வொரு அடியாகட்டும் மனுஷன் பர்பாமென்ஸ் படத்துக்கு படம் கூடிக் கொண்டேத்தானிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இடைவேளை ஆக்ஷன் சீன். வாவ்.. என்னா ஒரு ரிப்ளெக்ஸ். என்ன கதை கருமாந்திரத்தை மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்
அமலாபால் வழக்கம் போல அம்மாஞ்சிப் பெண்ணாய் வயலின் கற்றுக் கொள்ள பாரீஸ் வருகிறார். அதுவும் பிரம்மானந்தம் போன்றோரிடம். அய்யர் பெண் என்பதால் மிகவும் ஸ்ரேஷ்டமாய் பாவாடை தாவணியில் பாரீஸில் நடமாடுகிறார். அப்படியெல்லாம் காட்டப்படுவதால் அவரின் கேரக்டர் மீது சிம்பதி வரும் என்று இயக்குனர் நினைத்திருந்தால் ஸோ... சேட். ரெண்டு பாட்டுக்கு ஆட்டம் ஆடிவிட்டு, க்ளைமாக்ஸின் போது ட்விஸ்டு மேல் ட்விஸ்டு வைப்பத்ற்காக வருகிறார். அடக்க ஒடுக்கமாய் இவர் ஒரு புறம் என்றால் இன்னொரு பக்கம் முழுக்க, முழுக்க உரித்த கோழியாய் பெரும்பாலும் லெக் பீஸ் எக்ஸ்போஸோடு காத்தரீனா தெரஸா. இவருக்கு டப்பிங் கொடுத்தவரை பாராட்டியே தீர வேண்டும். பப்பிள் கம் போட்டு மென்ற மாதிரி வாயசைத்த இவரின் லிப் லேங்குவேஜுக்கும் மாய்ந்து மாய்ந்து டப் சிங் செய்திருக்கிறார். உண்மையிலேயயே நடிப்புக்கு பாராட்ட வேண்டும் என்றால் அவருக்கு டப்பிங் கொடுத்தவருரைத்தான் பாராட்ட வேண்டும்.ப்ரம்மானந்தம் ஆலியின் காமெடியும் ரொம்பவே சொதப்பல்.சுத்தமாய் எடுபடவில்லை.
அமோல் ராதோட்டின் ஒளிப்பதிவு க்ளாஸ். பாரீஸின் லொக்கேஷன்களையும் அருமையான விஷுவல்கள், சேஸிங் காட்சிகளில் மிக ரிச்சான படப்பதிவை அளித்திருக்கிறார். குறிப்பாக ஓப்பனிங் சேஸிங் காட்சியிலும், இடைவேளை சண்டைக் காட்சியிலும், இவரும் எடிட்டர் சேகரும் கலக்கியிருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரியிருந்தாலும் உட்கார வைக்கிறது. பின்னணியிசையில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்.
எழுதி இயக்கியவர் பூரி ஜெகன்னாத். வழக்கமான பழிவாங்கும் கதைதான். அதை கஜினி பாணியில் டைரி மேட்டரை வைத்து, இரண்டாம் பாகத்திற்கு ஆதியின் மொத்த குடும்ப அழிப்பையும் ஒன்றாக்கி மாவரைத்திருக்கிறார். ஆங்காங்கே வரும் மேல் டாமினெண்ட் வசனங்கள் ஆண்களிடம் கைதட்டு வாங்குகிறது. குறிப்பாய் காத்தரீன் தான் கற்பழிக்கப்பட்டுவிட்டதாய் அல்லுவிடம் நடிக்கும் காட்சியில் பேசும் வசனம் நச். இடைவேளை வரை ஓரளவுக்காகவது ஓகே என்றிருந்த படம் அதற்கு பிறகு வழக்கமான தெலுங்கு மசாலாவாக மாறி நெளிய வைத்துவிடுகிறது. ஸ்பெயின் அரசாங்கத்தில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கியிலோ, அல்லது கத்தியிலோ குத்திவிட்டு ரோட்டில் நடமாடலாம் போல.. கடைசி வரை போலீஸ் என்கிற வஸ்துவை கண்ணில் காட்டவேயில்லை. அதுவும் பத்து பதினைந்து நிஞ்சாக்கள் வேறு அந்தரத்திலிருந்து குதித்தது போல ஹாஸ்பிட்டலில் புகுந்து இருப்பவர்களை எல்லாம் வகுந்துவிட்டு போவது ரொம்பவே ஓவர். ம்ஹும். நல்லாருக்கும்னு நினைச்சித்தான் எல்லா படத்துக்கும் போறோம்.. அப்படியேவா இருந்திருது. அல்லு அர்ஜுனுக்காகவும், அந்த லெக் பீஸ் காத்ரீனுக்காகவும் ரஸ்க் சாப்பிட வ்ருப்பப்படுகிறவர்களுக்கு..
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
அல்லு பாரீஸில் ஒரு பேண்ட் வைத்துக் கொண்டு பிழைப்பை ஓட்டுகிறவர
ஸ்பெயின் அரசாங்கத்தில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கியிலோ, அல்லது கத்தியிலோ குத்திவிட்டு ரோட்டில் நடமாடலாம் போல..
அண்ணே . . .
நல்ல விமர்சனம் ...
Post a Comment