குவாண்டின் இவரது பாதிப்பில்லாத இளைய தலைமுறை இயக்குனர்கள் இருப்பார்களா என்று சந்தேகமே. இவரின் படங்களை விரும்ப ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட போதைக்கு அடிமையானவர்களைப் போல. அவரிடமிருந்து விடுபட முடியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். பஃல்ப் பிக்ஷனை இன்றைக்கு ரிப்ரெஷ் செய்து கொள்ள பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதியதாய் ஒரு விஷயம் புலப்படும்.
1942 ஜுஸ் வேட்டையாளன் என்று பெயர் பெற்ற கர்னல் லண்டா, ஒரு ஏழை விவசாயின் வீட்டில் அனுதாபத்தின் காரணமாய் புகலிடம் கொடுக்கப்பட்டிருக்கும் ஜூஸ்களை கண்டுபிடிக்க விசாரணைக்கு வருகிறான். தன் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் வேறு வழியில்லாமல் அவன் காட்டிக் கொடுத்துவிட, துப்பாக்கியால் வீட்டின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் குடும்பத்தை சுடுகிறார்கள். சூசானா என்பவளைத் தவிர எல்லோரும் இறந்துவிட, சூசனா தப்பி ஓடுகிறாள்.
இன்னொரு பக்கம் 1944ல் பிராட்பிட்டின் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைத்து , குறைந்தது 100 நாஜிக்களில் தலையையாவது கொண்டு வராமல் ஓய்வது இல்லை என்று தீர்க்க முடிவெடுத்து ஒவ்வொரு நாஜிக்களையும் மடக்கி, அவர்களின் தலையை முடியோடு, சதையோடு, வெட்டி எடுத்து கொல்கிறார்கள். இவர்கள் ஒரு புறம் நாஜிக்களை பழி வாங்க காத்திருக்கிறார்கள்.
1944 லண்டாவிடமிருந்து தப்பிய சூசானா பாரீஸில் வேறு ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப் பட்டு, வேறொரு பெயரில் அவர்களுடய தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறாள். இந்நிலையில் பெடிரிக் ஷோலர் எனும் நாஜிப்படை வீரன் நூற்றுக்கணக்கான பேரை சுட்டு ஜூஸ்களை கொன்றதன் காரணமாய் நாட்டின் ஹீரோவாக கொண்டாடப்படுகிறவன். அவன் சூசானாவை பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறான். அக்காதலை வளர்க்க, அவனது வீரதீர பராக்கிரமத்தை திரைப்படமாக்கி அதன் ப்ரீமியரை சூசனாவின் தியேட்டரில் நடத்த ப்ளான் செய்கிறான்.
சூசன்னா இந்த ப்ரிமியரை வைத்து ஒரே நேரத்தில் நாஜிப்படைகளின் பெரும் தலைவர்கள் அனைவரையும் கொல்ல அவளது கருப்பு காதலனோடு ப்ளான் செய்கிறாள். இவள் ஒரு பக்கம் இருக்க, ப்ராட் பிட் தலைமையிலான குழு பிரிடிஷ் நடிகையின் கனெக்ஷனால் அந்த ப்ரீமியரில் போய் கலந்து கொண்டு அங்கே வெடி வைத்து கொல்ல ப்ளான் செய்கிறார்கள்.
இப்படி நாஜித் தலைவர்களை கொல்ல நடத்தப்படும் ப்ளான்களை காட்ட்டப்படும் போதே அந்த ப்ரீமீயரை கண்காணிக்க லண்டா வருகிறான். பின்பு என்ன ஆனது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
லண்டா அறிமுகம் ஆகும் காட்சியிலிருந்தே படம் சீட்டின் நுனிக்கு வர வைக்க ஆரம்பித்துவிட்டது. லண்டாவின் வரவை தூரத்தில் தெரியும் ராணுவ வண்டியைப் பார்த்த மாத்திரத்தில் வீட்டில் உள்ளவர்களை உள்ளே போகச் சொல்லிவிட்டு, முகத்தை கழுவிக் கொண்டு அந்த விவசாயி காத்திருக்க ஆரம்பிக்கும் போதே நம்முள் விர்ரென்று கரண்ட் ஏற, லண்டாவின் பாடிலேங்குவேஜ், விசாரிக்கும் முறை எல்லாம் இன்னும் பயமேற்ற, ஒரு ஷாட்டில் கேமரா அப்படியே அவர்கள் உட்கார்ந்திருக்கும் நிலைக்கு கீழே போக அங்கே ஒரு குடும்பமே வாய் பொத்தி உட்கார்ந்திருக்கும் காட்சியை காட்டும் போது அப்படியே தூக்கி வாரிப் போடும். அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் குவாண்டினின் கல்லாஸ்.நூறு நாஜியின் தலையையாவது எடுக்க துடித்துக் கொண்டிருக்கும் ப்ராட்பிட். நாஜிக்கள் கூடும் இடத்தைப் பற்றி அறிய இரண்டு நாஜி வீரர்களை பிடித்து விசாரிக்க, அதில் ஒருவன் உண்மை சொல்ல மறுத்ததால் பேட்டாலேயே மணடையை ஒடைத்து கொலை செய்யப்பட, அதை பார்த்த இன்னொரு வீரன் பயந்த் போய் உண்மையை சொல்லிவிட்டு தப்பித்ததாய் ஹிட்லரிடமே நேரடியாய் சொல்ல, எப்படி விட்டார்கள்? என்று ஹிட்லர் கேட்க, அவனது நெற்றியில் கத்தியால் ஸ்வெஸ்திக் சின்னம் வரைய பட்டதை காட்டுமிடம், சூசானாவும்,அ வளது கருப்பு காதலனும், நைட்ரேட் பிலிம்களை வைத்து மொத்த தியேட்டரையும், ஹிட்லரோடு கொளுத்த செய்யும் ப்ளான். ப்ராட் பிட் குழுவிற்கு உதவும் பிரிடிஷ் நடிகை, பாரில் குழந்தை பிறந்ததற்காக அவளோடு கொண்டாமிடும் நாஜி சோல்ஜர். அங்கே நடக்கும் களேபரங்கள், அந்த களேபரத்தை வைத்து, அதில் கிடைக்கும் லீடை வைத்து லண்டா நூல் பிடித்து சதியை கண்டு பிடிக்கும் முறை, லண்டா கொடுக்கும் தடாலடி க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்.. வாவ்.. இரண்டரை மணிநேரம் வாய் பிளந்து பார்க்க வைக்க என் தலை குவாண்டினால் மட்டுமே முடியும். வாவ்..வாவ்.. வாவ். ..
கேபிள் சங்கர்
Post a Comment
10 comments:
எப்ப வந்த படத்துக்கு ... எப்ப விமர்சனம் எழுதறீங்க ... :) ... Yeah Quentin Tarantino is one of my favorite director and script writer too ...
//இப்படி மும்முனையில் நாஜித் தலைவர்களை கொல்ல நடத்தப்படும் ப்ளான்களை//
எனக்கு தெரிந்து இரண்டு திட்டங்கள் தான் உண்டு... 1.திரையரங்கு நடத்துபவர்.. 2.கூலிப்படை...
correct vijay.. corrected
நான் படம் பார்த்தே லேட்டஸ்டாய்தான். எப்படியோ மிஸ் ஆயிருச்சுன்
Neenga edhula intha padam paathinga..? Your options are
A) z-studio channel(mundhaanaal oliparappu)
B) DVD(eppavo vaangi vachu, maranthu ponathu)
C)TORRENT(...)
pls watch and comment on Django unchained.. same combination.. tarantino / christopher waltz... villain here.. hero in Djnago Unchained.
யூதர்கள் என்று சொல்லி இருக்கலாமே...."ஜுஸ் வேட்டையாளன் "என்று படித்தவுடன் ஒரு கணம் குழம்பிவிட்டேன் :)
இங்கே இன்னொன்று...
See Django also from him.
இது நான் பார்த்த க்வெண்டினின் 2வது படம்.ஜாங்கோ முதலாவது.இதில் வரும் லன்டா விசாரணைக் காட்சி இசையும்,எலி ரோத்தின் அறிமுக இசையும் அபாரம்.வால்ட்ஸ்.....பா..என்ன நடிப்பு...அடுத்து ஹேட்புல் 8 பார்க்க நினைக்கிறேன்..
Post a Comment