நூறு கோடி வசூல். சூப்பர் ஹிட் என்றெல்லாம் செய்தி வந்தாலும் எப்படி இம்மாம் பெரிய படம் ஹிட்டானது என்று குழப்பமாகவே இருக்கிறது. வழக்கமான டெம்ப்ளேட் காதல் கதை. அதிலும் கரன் ஜோகர் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ஓடுகிறது.
வழக்கம் போல சிறு வயது முதலேயான நட்பு, ட்ரெடிஷனல் பெண், அவுட் ஸ்போக்கன் எக்ஸ்ட்ரோவர்ட் ஆண். இவர்களிடையே ஆன நட்பு, பின்பு மெல்ல காதலாவது. காதலை சொல்ல விழையும் நேரத்தில் எல்லாம் காதலனை புரிந்து கொள்ள முடியாமல் குழம்புவது. பின்பு அவனுக்காக விட்டுக் கொடுத்துவிட்டு, காதலில் உழல்வது. என்று மாற்றி மாற்றி காட்சிகள் ஓடுகிறது. இன்னொரு பக்கம் கல்கியின் கேரக்டர் மூலம் படு எக்ஸ்ட்ராவர்ட் கேரக்டர் பெண் பின் நாளில் ட்ரெடிஷனல் குடும்ப வாழ்க்கைக்கு மாற்றிக் கொண்டு பயணிப்பது. அவளின் காதலை புரிந்து கொள்ளாமல் உடனலையும் இன்னொரு ஆண். சரி.. அப்புறம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது வைடா ஒரு கல்யாணத்தை ஒரு முப்பது ரீல் ஓட்டி முடிக்கலாம் என்று ஆரம்பித்து இரண்டாம் பாதி பூராவும் கல்யாணத்திலேயே ஓட்டி நம்மையும் கல்யாணத்துக்கு சமைக்க வந்தவர்கள் போல உழல விட்டு விட்டார்கள். ட்ரெக்கிங் போகும் காட்சிகள், கல்யாணத்தில் குளத்தில் கால் வைத்துக் கொண்டு பேசும் காட்சிகள், ரானா, மற்றும் மாதுரி தீக்ஷித்தின் கேமியோ மற்றும் நடனங்கள். சுவாரஸ்யம்.
ரன்பீர்கபூருக்கு சரியாய் பொருந்தி வந்திருக்கிறது கேரக்டர். அதே போல தீபிகா படுகோனே. கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். ஹோம்லியாய் சுற்றும் போது கொஞ்சம் நடிக்கிறார். ரன்பீருடன் ரவுடிகளுடன் சண்டையிட்டு தப்பித்து ஓடும் காட்சிகளில் அவரின் துள்ளல் ரசிக்க வைக்கிறது. எல்லாக் காட்சிகளிலும் எல்லோரும் எல்லா நேரமும் அரை மணி நேரம் பேசுவது ஹிந்தி சினிமாவுக்கு ஆபத்தானது. பேசி பேசியே மாய்கிறார்கள். பாடல்களை விட பீரிதமின் பின்னணியிசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு நம்மூர் மணிகண்டன். சும்மா கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போன்ற ப்ரேம்கள். வேக்கப் சித் இயக்கிய அயன் முகர்ஜியின் படமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
not a word of condolence about manivannan till now in your blog??? disappointing..
Post a Comment