சமீபத்தில் நண்பர் ஒருவருடய மகனுக்கு கவுன்சிலிங்கில் ராஜலஷ்மி இன்ஜினியரிங் காலேஜில் மெக்கானிக்கல் செலக்ட் செய்திருக்கிறார். ஸ்ரீபெரும்பதூரில் இருக்கும் அந்த காலேஜுக்கு , மெயின் ரோடிலிருந்து காலேஜ் உள்ளே போக காரெல்லாம் வைத்து பெற்றோர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காலேஜுக்கு அழைத்து போனவர்கள். அவர்கள் காலேஜில் உள்ள அத்துனை வசதிகளையும் பெற்றோர்களை கூட்டிக் கொண்டு போய் காட்டியிருக்கிறார்கள். அங்கேயிருக்கும் காண்டீனில் மாணவர்களுக்கு சலுகை விலையில் சாப்பாடு போடுகிறோம். லேப் வசதி, மற்றும் பிற வசதிகளை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். கடைசியாய் பீஸ் கட்டும் வைபவம் வந்த போது 83 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கவுன்சிலிங்கில் வெறும் 43 ஆயிரம் தானே பீஸ் என்று கேள்வி கேட்க, வெறும் 43 ஆயிரத்தில் எப்படி நாங்கள் இவ்வளவு வசதிகளை மாணவர்களுக்கு செய்ய முடியும்? அரசுக்கு இதைச் சொன்னால் புரியாது. அத்தோடு நீங்கள் கூட கவுன்சிலிங்கில் இதே ஸ்ரீ பெரும்பதூரில் வேறு காலேஜ் இருந்தும் அங்கே போகாமல் ஏன் எங்கள் காலேஜை செலக்ட் செய்திருக்கிறீர்கள். நல்ல ரிசல்ட், மற்றும் வசதிகள் இருக்கின்றது என்பதால் தானே? எனவே 83 ஆயிரம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று ப்ரெஷர் போட்டிருக்கிறார். நண்பரிடமோ வெறும் ஐம்பதாயிரம்தான் இருக்கிறது. முன்பே இது போல சொல்லியிருந்தால் நாங்கள் தயாராக வந்திருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் கேட்ட தொகையை கொடுத்தால் பில் தருவீர்களா? என்று கேட்க, அதெல்லாம் தர மாட்டோம். வெறும் 43 ஆயிரத்துக்குத்தான் தருவோமென்று சொல்லியிருக்கிறார்கள்.கையில் காசில்லாமல், அதிக பணம் கட்ட மனசுமில்லாமல் நண்பர் மிச்ச பணத்தை கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே போல என் நண்பர் நடிகர் அவரின் பெண்ணிற்கு நல்ல பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்திருக்கிறது. அரசு நிர்ணையித்த தொகை தான் என்றாலும், அந்த பீசு, இந்த பீஸு என்று கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருகிறது என்று சொல்கிறார். அரசு நிர்ணையித்த தொகைவிட அதிகமாய் வாங்கக் கூடாது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் இன்னொரு பக்கம் கட்டிங்காய் பணம் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்து புகார் கொடுங்களேன் என்று சொன்னால் அப்புறம் புள்ளை படிப்பையில்லை கெடுத்திருவாங்க என்று பயப்படுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@