Thottal Thodarum

Jul 2, 2013

Mad Money

ஒரு கருப்பினப் பெண் கட்டுக்கட்டாய் பணத்தை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு  தம்பதியினர் அவர்களது கக்கூஸ் கம்மோட்டில் பேப்பர் ஷெட்ட்ரை வைத்து பணத்தை தூள் தூளாக வெட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருத்தியோ, அவளின் காதல் கணவனின் உதவியோடு, மொபைல் கேரவன் வீட்டில் பணத்தை Rube goldberg machine ஐடியாவை வைத்து  வெடி வைத்து தகர்த்து எரிக்கிறாள். இவர்களின் வயதான தம்பதியினரில் பெண்ணைத் தவிர மற்றவர்களை போலீஸ் கைது செய்கிறது. ஏன்? எதற்கு? என்பது தான் கதை.


அவ்வளவு பணத்தை இப்படி தொம்சமாய் அழித்துக் கொண்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் வராமலா போய்விடும்.பிரிஜெட்டுக்கு பண முடை. பல வருடங்களாய் கணவனுக்கு வேலையில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் ஒரு வங்கியில் ஹவூஸ் கீப்பிங்கில் வேலை கிடைக்கிறது. அங்கே அழுக்கான நோட்டுக்களை தினமும் லட்சக்கணக்கில் ஷெரெட்டிங் மிஷினில் போட்டு கிழிக்கிறார்கள். குப்பையில் போகும் பணத்தை ஏன் நாம் திருடக் கூடாது என்று போடுகிறாள். அவளுக்கு துணையாய் அந்த மிஷினை ஆப்பரேட் செய்யும் கருப்பின பெண்ணையும், இரண்டு ஏரியாவிலும் க்ளீனிங் செய்யும் ஜாக்கி என்கிற பெண்ணையும் கரெக்ட் செய்து யாருக்கும் தெரியாமல் கொள்ளையடிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளையடித்த பணம் வருமானம் வர, வர, பிரிஜெட் தாம் தூமென செலவு செய்கிறாள். இதனால் அவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று விசாரணை ரகசியமாய் நடைபெறுகிறது. அதில் தான் மூவரும் மாட்டிக் கொள்ள, பின்பு பிரிஜெட் எப்படி அதிகாரிகளிடமிருந்து தப்பித்தாள் என்பதை சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள். 

க்ரைமில் ஈடுபடும் மூவருமே பெண்கள் எனும் போது இயல்பாகவே சீரியஸ் தனம் குறைந்துவிடுகிறது. கூடவே அவர்கள் இப்படி ஈடுபடக் காரணம் இயல்பான குடும்ப ப்ரச்சனை, மற்றும், பணம் என்று வந்தவுடன் ஏற்படும் பேராசை. டயானா கீட்டனின் நடிப்பும்,  லதீபாவின் நடிப்பும் சிறப்பு. லத்தீபா மட்டும் கொஞ்சம் சென்சிபிளாய் பேசுகிறவர். மற்ற இருவரும் தடாலடி பார்ட்டிகள். இவர்களின் தடாலடித்தனத்தினால்தான் பேங்க்காரர்களுக்கு சந்தேகம் வருகிறது. முழுவதும் பலந்த பாதுகாப்பு உள்ள இடத்தில் இம்மாதிரியான கொள்ளைக்கான ஐடியா நன்றாகவே இருக்கிறது. எல்லா ஐடியாக்களிலும் ஒரு சின்ன லூப் ஹோல் இருக்கத்தான் செய்யும்  அதை பயன் படுத்தி பணத்தை அடிக்கும் காட்சிகள் விறுவிறு. என்ன முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே இருப்பதால் இவர்களுடய பேச்சு, நடவடிக்கைகள் எல்லாமே வள வள, சலசலவென சுவாரஸ்யமிருந்தாலும் கேர்ளி டாக்ஸாக இருப்பதால் காமெடியாகத்தான் இருக்கிறது. ஆனால் இம்மாதிரிபடங்களில் கிடைக்கும் பரபர திரில் குறைந்து போய்விடுகிறது என்பது ஒரு மைனஸ் தான்.
கேபிள் சங்கர்

Post a Comment