Thottal Thodarum

Jul 17, 2013

Shutter (Malayalam)

 
கத்தியின்றி, ரத்தமின்றி சீட்டு நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லரை சமீப காலத்தில் பார்த்ததாய் நினைவில்லை. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. தேடிப் பிடித்து டவுன்லோடிட்டு உடனடியாய் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சமீப கால மலையாள படங்கள் எல்லாம் கதை களங்களில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாப்பட்ட ஒரு கதைதான் இந்த ஷட்டர்.


லால் வளைகுடா சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவர். அவருக்கு வயது வந்த மகள் இருக்கிறாள். அவரின் வீட்டின் வாசலில் லைனாய் கடை கட்டி விட்டு அதன் வாடகையில் வருமானம் வேறு பார்த்து கொண்டிருக்கிறார். அந்த கடைகளில் ஒன்றை வாடகைக்கு விடாமல் தினமும் நண்பர்களுடன் பாதி ஷட்டரை மூடி வைத்துக் கொண்டு குடிப்பதுதான் பொழுது போக்கு.  அவருடய நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒருவன் ஆட்டோ ட்ரைவர். லால் வளைகுடாவில் வேலை பார்த்திருப்பதால் அவரின் இன்ப்ளூயன்ஸில் தனக்கு ஒரு வேலை கிடைக்குமென்று அல்லக்கையாய் அவரை சுற்றிக் கொண்டிருப்பவன். இன்னொருவன் லாரி ட்ரைவர். இன்னொரு நண்பரும், கடையை பார்த்துக் கொண்டு இருக்கும் வயதான பெரியவர். லாலுக்கு பக்கத்து கடைக்காரனுக்கும் தகராறு வேறு.  

ஒரு நாள் லாரி ட்ரைவர் தண்ணியடிக்கும் போது தான் ஹைவேயில் உற்வு கொண்ட பெண்களைப் பற்றி சொல்லிவிட்டு போக, லாலுக்கு சபலம் தட்டுகிறது அதற்கேற்ப வழியில் பஸ்ஸ்டாண்டில் ஒரு பெண்ணை பார்க்க அதை ஆட்டோ ட்ரைவரை விட்டு பேசி கூட்டிக் கொண்டு வந்து விடுகிறார். ஹோட்டல்களில் இடம் கிடைக்காத்தால் வேறு வழியில்லாமல் தன் கடைக்கு கூட்டி வந்து உள்ளே உட்கார்ந்து கொள்ள, ஆட்டோ ட்ரைவரிடம் சாப்பிடுவதற்கு பரோட்டா வாங்கி வரச் சொல்லி அனுப்புகிறார். ஆட்டோ ட்ரைவர் ஷட்டரை வெளியே பூட்டிவிட்டு போய்விடுகிறார். கிளைக்கதையாய் கதையின் ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் இயக்குனராய் சீனிவாசன் வருகிறார். அவர் ஆட்டோ ட்ரைவரின் வண்டியில் பயணப்பட்டுவிட்டு போகும் போது அவரது ஹேண்ட் பேக்கை விட்டு விடுகிறார். அந்த பேக்கை கடைக்குள் வைத்துவிட்டு வந்துவிடுகிறான். பரோட்டாக் கடையின் வாசலில் அந்த இயக்குனரை ஆட்டோ ட்ரைவர் பார்த்துவிட, அவரை தன்னுடன் வரச் சொல்லி பேக்கை கொடுத்துவிடுவதாய் கூப்பிடுகிறான். பேக் கிடைத்த சந்தோஷத்தை கொண்ட்டாடு என்று காரில் வைத்து தண்ணியடித்துக் கொண்டிருந்த சினீவாசனும், அவரது தயாரிப்பாளர் நண்பரும் ஆட்டோ ட்ரைவருக்கும் சரக்கை கொடுக்க, வேண்டாமென்று சொன்னாலும் அடித்துவிடுகிறான். போகிற வழியில் போலீஸிடம் ட்ரங்க் அண்ட் ட்ரைவில் மாட்டிக் கொள்கிறார்கள். இங்கேயே வெளியே போன ஆட்டோ ட்ரைவர் வரவில்லை. வீட்டின் வாசலிலேயே பிகரை வைத்துக் கொண்டு மேட்டர் பண்ண தயக்கம் ஒரு புறம், போனவன் வரவேயில்லை என்ற கவலை ஒருபுறமும் ஓட லால் தடுமாறுகிறார். விபசாரியோ நேரம் ஆகிறது என்று கத்த ஆரம்பிக்க பணம் கொடுத்து சமாளித்த லால் ஒரு கட்டத்தில அவளை கட்டி வாயை துணியால் கட்டி வைத்து உட்கார வைக்கிறார். ஆட்டோ ட்ரைவர் வந்தானா? இல்லையா? லாலின் வீட்டிற்கு தெரிந்ததா? என்பது போன்ற கேள்விக்கான பதிலை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தின் இயக்குனர் ஜான் மேத்யூ. இவரை சமீபத்தில் வந்த ஆமென் படத்தில் சர்ச் பாதர் கேரக்டரில் பார்த்திருப்பீர்கள். இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், எழுத்தாளர். துபாயில் ஒரு நாடகக் குழுவை வைத்து நடத்தியவர். இதில் நடித்த பல நடிகர்கள் நாடகத்தில் நடித்தவர்களும், துபாய் குழுவில் இருந்தவர்களும் தானாம். இவரின் முதல் படம் இது. இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம். 

படத்தில் நடித்த நடிகர்கள் அத்தனை பேருமே தங்கம். ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் லால் ஒரு கட்டத்தில் தன் குடிகார நண்பன் வீட்டின் ஜன்னல் வழியாய் தன் வீட்டினுள் எட்டிப் பார்க்கும் காட்சியை பார்த்து சத்தமில்லாமல் அழும் காட்சியிலும், ஒரு இரவில் ஆரம்பித்து அடுத்த நாள் இரவு வரை யாரிடமும் மாட்டிக் கொண்டு அவமானப்படக் கூடாதே என்ற பதைப்புடன் இருக்கும் நேரத்தில் அவரது நடிப்பு க்ளாஸ். விபசாரியாய் வரும் சஜிதா மாதிலின் நடிப்பும் வாவ்.. நடிப்பது போலவே தெரியவில்லை. கடைக்குள் கூட்டி வந்துவிட்டோமே என்ற பதைப்பில் லால் இருக்க, இவர் சாவதானமாய் அங்கே வைத்திருக்கும் சரக்கை எடுத்து ஊற்றி அடித்துவிட்டு, தன் பேக்கிலிருக்கும் துணிகளை காயப் போட்டு விட்டு, நீ வந்தா வா இல்லாட்டிப் போ என்று தூக்கம் போடுவதும். ஒரு கட்டத்தில் லாலினா கைகள் கட்டப்பட்டு, வாயடைக்கப்பட்டு மிரண்டுப் போய் இருக்கும் காட்சியாகட்டும், பின்பு அவருடன் சேர்ந்து கதவை உடைக்க முயலும் போது கையில் அடிபட்டு ரத்தம் வழிய நிற்க, லால் பதட்டத்தோடு தன் வேட்டியை கிழித்து அவருக்கு கட்டி விடும் போது அவர் கண்ணில் தெரியும் ரியாக்‌ஷன்கள் வாவ்.. வாவ்.. க்ளாஸ். வழக்கொழிந்து போன சீரியஸ் சினிமா இயக்குனராய் வரும் சீனிவாசனின் கேரக்டரும் மிக இயல்பு.  அநியாயமாய் லாலை பூட்டி வைத்துவிட்டு இக்கட்டில் மாட்டிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு ஒரு நாள் பூராவும் அலையும் ஆட்டோ ட்ரைவர் கேரக்டரில் நடித்தவரின் நடிப்பும் அருமை. 

நிறைய இடங்களில் வசனங்கள் படு இயல்பு. ஆட்டோ காரர் சீனிவாசனிடம் தற்கால மலையாள சினிமாவை பற்றி பேசும் காட்சிகளும், விபச்சாரிக்கும் லாலுக்குமிடையே ஆன வசனங்கள். க்ளைமாக்ஸில் லாலின் பெண் பேசும் வசனம் எல்லாமே நச்.

இப்படி எல்லாமே நல்லாயிருக்கு என்று சொன்னாலும் இரண்டரை மணி நேரப் படமாய் இதை ஆக்கியிருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் சுருக்கி க்ரிஸ்பாக்கியிருந்தால் ஆங்காங்கே தொய்ந்து விழாமல் படத்தை ரசித்திருக்கலாம். க்ளைமாக்ஸில் ஆட்டோ ட்ரைவர் வந்து திறக்கும் முன்னே கதவு திறக்கப்படுகிறது. அது யாரால் என்பது ஒரு ட்விஸ்ட் என்றால் பைனல் பாயிண்டில் சீனிவாசன் கேரக்டரின் காதலி மூலம் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் பாருங்கள் அங்கே இந்தப்படம் வேறு பல அற்புதமான உணர்வுகளைத் தருகிறது. விரைவில் நேரம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இந்தியில் ரீமேக்க இருக்கிறார்.
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

geethappriyan said...

ஆட்டோ ட்ரைவர் சூராவாக வந்த வினய் ஃபோர்ட் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நல்ல நடிகர்,புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நடிப்பு மாணவர்,இவர் நடித்து 2009ல் வெளிவந்த ரிது மற்றும் 2012ல் வந்த ப்ரபுவிண்டே மக்கள் படங்களிலும் மனிதர் மிக அருமையாக பங்களித்திருப்பார், கம்யூனிசம்,நாத்திகம்,ஆத்திகம்,யோகம்,தாந்த்ரிக் என்று அதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்த நல்ல வித்தியாசமான கதைக்களன் அது,அதில் ஒரு பறக்கும் ஆசனம் போடுவார்.வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்,அதிலும் இவரின் உழைப்பு புரியும்.

http://geethappriyan.blogspot.ae/2013/07/shutter-2012.html

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

குரங்குபெடல் said...

படம் பார்த்தேன்

நன்றாக இருந்தது . .


நம் ஊரிலும் இது போன்ற முயற்சிகள்

கொஞ்சம் கிளம்பினாலும்

அதை shutter போட்டு க்ளோஸ்

செய்யும் லிங்க சிங்கங்கள் இங்கு அதிகம்

Unknown said...

I saw this movie in theaters. So good. But you have saw this movie by downloading it.mmmmmmmmmm.......
Nirmal