75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.-கேபிள் சங்கர்
நண்பர் ஒருவர் சினிமாக்காரர். செட் வேலை போய்க் கொண்டிருந்தபடியால் ஜாலியாய் பேசிக் கொண்டிருந்தோம். டாஸ்மாக் பற்றியும் சமீபகாலமாய் நடந்து வரும் இரவு நேர டி.டி செக்கிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தெந்த ஏரியாவில் எங்கெங்கு செக்கிங் நிற்பார்கள்? போலீஸ்காரர்கள் பேசும் முறை பற்றியும் காமெடியாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை போத்தீஸ் அருகே காரில் செல்ல, வழக்கமாய் அங்கே செக்கிங்கிற்கு நிற்கும் போலீஸ் எல்லா வண்டியையும் மறித்து, பைக்குகளை ஒரு பக்கமாகவும், கார்களின் கதவுகளை இறக்கச் சொல்லி கிட்டே வந்து “எங்க போறீங்க?:” என்பது போன்ற அபசகுன கேள்விகளை கேட்டு குடித்திருக்கிறார்களா? இல்லையா? என்று செக் செய்வது வழக்கம். அன்றும் அதே ரொட்டீன் தான். நான் வேண்டுமென்றே காரில் சத்தமாய் பாட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்க, கிட்டே வந்த போலீஸ் காரர் கதவை இறக்கச் சொன்னார்.

நான் சத்தத்தை குறைத்துக் கொண்டே “என்ன” என்பது போல அவரை பார்த்தேன். “ரொட்டீன் டி.டி செக்கிங் தான் சார்.. என்று கிட்டே வர.. “ஏங்க எவனாவது தண்ணியடிச்சிட்டு வர்றவன் இந்த ரூட்டுல வருவானா? அதான் ஒன்போது மணிலேர்ந்து இங்கேயே இருக்கீங்களே?” என்றதும் அவர் முகத்தில் சிரிப்போடு “ஙே”.
இதை சொன்னதும் நண்பர் ஆரம்பித்தார். “ஒரு நா பார்ட்டி. இது நான் ஊருல இருக்கிறவனையெல்லாம் ட்ராப் பண்ண வேற ஒத்துக்கிட்டேன். ட்ராப் பண்ணிட்டு வர்றயில செக்கிங். கிட்ட வந்து அவன் கேக்குறதுக்கு முன்னாடியே நானே இறங்கி, ஆமா சார் நான் குடிச்சிருக்கேன். கிட்டே வந்து மோந்தெல்லாம் பாக்க வேணாம்னேன். உடனே அவர் சீரியஸாகி ஏன் சார் இவ்வளவு வயசாகுது தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு தெரியாதான்னாரு. நான் அவரை பார்த்தேன். உங்களூக்கு எவ்வளவு வய்சாகுதுன் கேட்டேன். அவருக்கு ஒண்ணியும் புரியலை. எதுக்குன்னாரு? இல்ல சொல்லுங்கன்னேன். ஐம்பதுன்னாரு. என்னைக்காவது உங்கம்மாவை வச்சிட்டு தண்ணியடிச்சிருக்கீங்களா?ன்னேன். ஒண்ணும் புரியாம இல்லைன்னு தலையாட்டினாரு. என் வீட்டுல என் அம்மா இருக்காங்க. தண்ணியடிச்சிட்டு வண்டியோட்ட கூடாதுன்னா வீட்டுல கொண்டு போய் அம்மா முன்னாடி அடிக்க முடியுமா?ன்னேன். அடக்க முடியாம சிரிச்சிட்டு, சரி.. இனிமே பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு அனுப்பிட்டாரு. அவரு அனுப்புனதிலேர்ந்து நான் வண்டியோட்டறத அவாய்ட் பண்ணிட்டேன். என்று சிரித்தார்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
2 comments:
This நடு நிசி கதைகள is brought you
by
TASMAC . .
a multicrore company
rommba delicate vivagaram. this type of approach willnot workout everywhere
Post a Comment