Thottal Thodarum

Aug 11, 2013

கொத்து பரோட்டா -12/08/13

கேட்டால் கிடைக்கும்
சிட்டி செண்டரில் வழக்கம் போல ஃபுட்கோர்ட்டில் கார்டுக்கு பணம் வாங்கும் கொள்ளையில்லை என்றாலும், அவரவர்களுக்கு ஏற்ப கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். பிட்ஸா கார்னரில் பிட்சாவுக்கு சாஸ் பாக்கெட் கிடையாதாம். ஏனென்றால் அது வெறும் டெலிவரி செய்யும் இடம் மட்டுமே என்றார் பில் போட்டவர். அதெப்படி அதை நீங்கள் பில் போடும் முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். அல்லது இங்கே போர்டில் எழுதி வைத்திருக்க வேண்டும் அப்படி இல்லாமல் பில் போட்டவுடன் எப்படி நீங்கள் சொல்லலாம். என்று சட்டம் பேசியவுடன் இஞ்சார்ஜ் மேனேஜர் சொன்னது “சார்.. இது டேக் அவே கொடுக்குமிடம் மட்டுமே அதனால் இங்கே டைனிங்கிற்கு கொடுக்கப்படும் சாஸ் கிடையாது என்றார். அப்ப உங்க டோர் டெலிவரியில் பிட்சாவுக்கு சாஸ் கொடுப்பத்தில்லையா? என்று கேட்டதற்கு மழுப்பினார். அப்ப இங்க நான் ஆர்டர் பண்ண பிட்சாவை ஏன் பேப்பர் ப்ளேட்டில் வைத்து சாப்பிட தருகிறீர்கள்? டேக் அவே என்றால் அதற்கான பேக்கேஜ் செய்துதானே தர வேண்டும்? என்று கேட்டதும் மனிதர் உஷாராகி அடுத்து ஆர்டர் கொடுத்தவர்களுக்கு எல்லாம் அட்டைப் பெட்டியில் பிட்சாவை போட்டு கொடுக்க ஆரம்பித்தார். ஏற்கனவே இவர்கள் வாங்கும் விலையில் அட்டைப் பெட்டிக்கான காசும், சாஸேஜுகளூக்கான பணமும் சேர்த்துத்தான் வாங்குகிறார்கள். அதை கொடுக்காமல் இவர்கள் அடிக்கும் கொள்ளையிது. ஒரு சாஸ் பாக்கெட்டி என்ன பெருசா கொள்ளையடிச்சிர போராங்க, பேங்கேஜிங் மெட்டீரியல்ல என்ன வந்திரும்? என்று கேட்பவர்களுக்கு ஒரு ரூபா திருடினாலும் திருட்டு திருட்டுத்தான். ஏன் சாஸ் இல்லை, பாக்கேஜிங் இல்லைன்னு ஒரு பத்து ரூபா குறைத்து வாங்கிக் கொள்ள  வேண்டியதுதானே..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@



விஸ்வரூபத்திற்கு பிறகு தலைவா பட வெளியீடு தமிழ்நாட்டில் மட்டும் தள்ளி போனது அப்படத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமா உலகிற்கே கொஞ்சம் மோசமான விஷயம்தான். சின்னப் படங்கள் வெற்றி பெரும் போது கிடைக்காத பணப் புழக்கம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியிடும் போது தான் நடக்கும். அந்த பணப்புழக்கம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் நல்லது. பெரிய அளவில் பணம் செலவு செய்து தயாரிக்கப்படும் படங்களின் வசூலும் பெரிய அளவில் இருக்கும் போது அதனால் ஜெனரேட் ஆகும் பணப்புழக்கமும் அதிகமாகும். இப்படி எடுக்கும் படத்தையெல்லாம் எத்தையாவது சொல்லி தடை செய்து கொண்டிருந்தால் சினிமாவின் பொருளாதாரம் அதளபாதாலத்தில் போய்விடும். 
@@@@@@@@@@@@@@@@@@
ஆந்திராவை பிரிப்பதற்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்தியாவெங்கும் ஆளாளுக்கு எங்களையும் அத்துவிட்டுருங்க என்று ஊர்வலம் விட ஆரம்பித்துவிட்டார்கள். இது நடக்கும் என்று ஏற்கனவே நினைத்த ஒன்றுதான் என்றாலும் இன்னொரு பக்கம் ஆந்திராவிலேயே பிரிவினை கூடாது என்று பெரும் போராட்டம் நடக்க ஆரம்பித்திருப்பது முக்கியமான விஷயம். இவ்வளவு குழப்பங்களுக்கிடையே காங்கிரஸ் ஆந்திராவில் நசிந்து வரும் தன் கட்சி பலத்தை பெருக்க உபயோகப்படுத்துகிறதே தவிர வேறொன்றையும் நினைத்து இந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டதாய் தெரியவில்லை. ம்ஹும்.. இன்னும் எத்தன பார்க்க வேண்டியிருக்கோ ..
@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
சுண்டாட்டம், வெளுத்துக்கட்டு ஆகிய படங்களின் நாயகி அருந்ததி தொட்டால் தொடரும் பட நாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நான்கைந்து படங்களில் கதாநாயகியாய் நடித்தவராக இருந்தாலும், ஆடிஷனுக்கு வர வேண்டும் என்று சொன்னதும், அவ்வளவுதானே என்று ஆடிஷன் ஷூட்டுக்கு வந்து நடித்தவர். இவருடன் தமன், ஹலோ எப்.எம்.பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாதுன்னு சொன்னவங்க எதுக்கு எல்லா தியேட்டர்லேயும் நாப்பது போலீஸை நிக்க வச்சிருக்காங்க?

முடியலை.. முடியலை.. முடியலை ‪#‎ChennaiExpress

கமலுக்கு இருந்த சப்போர்ட் விஜய்க்கு ஏன் இல்லையென்று கேட்பவர்களுக்கு.. பதில் பழகிப் போச்சு.

கமல் படமென்று இல்லை.. யார் படமாக இருந்தாலும் ரிலீஸ் தடை செய்வது அநியாயம். ‪#‎ISupportThalaiva

கமலுக்கு கிடைச்ச அதே பேர், புகழ் ஏ.எல்.விஜய்க்கும் கிடைக்கப் போவுதுன்னு நினைச்சா எந்த மாதிரி சமூகத்தில நாம வாழறோம்னு கேள்வி வருது.

ம்ம்ம்ம்... தலைவாவையும் ஹிட்டாக்காம விட மாட்டாங்க போல என் ஜாய்...

it went of well with Taman Kumar Gnanamani Gunasekaran Karki Bava Suresh AvOur script reading session.. thank you team

Still lingering over and over again ‪#‎ship‬ of theasus

வாழ்க்கை நமக்கு சிரிப்பதற்கு மட்டுமில்லை அழவும் கற்று கொடுக்கிறது. காதலிப்பதன் மூலமாய்

Nothing new in premises, but the way they narrate the story is interesting and rarely spine chilling #‎TheConjuring

With boskee.velmurugan.dhinesh.velmurugan in sun news
  • good performance from @bharathhere and a neet first half impressive. and fails to sustain in second half #555
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சன் நியூசிலிருந்து கூப்பிட்டார்கள். குத்து பாடல்களைப் பற்றிய விவாத மேடைக்க்காக. மிக சுவாரஸ்யமாய் சென்றது விவாதம். வீடியோவில் வந்ததைவிட நிறைய பேசினோம். எடிட்டிடப்பட்டிருக்கிறது. :)
  • @@@@@@@@@@@@@@@@@@@@@
    Viswaroopam 2 teaser
    @@@@@@@@@@@@@@@@@@@@
    டீசர் அமர்களமாய் இருக்கிறது. இதை விட ப்ரேயர் சாங் என்று ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். துரோகம் செய்த காதலிக்காக.... செம்ம... 
    @@@@@@@@@@@@@@@@@@@@@
    மேலே உள்ள படத்தில் உள்ள நோட்டீஸ் பெல்ஸ் ரோடில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் ஒட்டப்பட்டிருந்தது. நிஜமாகவே இவர்கள் மாதம் இவ்வளவு ரூபாய் தான் கட்டுகிறார்கள் என்பது உண்மையா? ஏனென்றால் தினம் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் லீஸுக்கு வாங்கி பார் நடத்துபவர்கள் இருக்கும் பட்சத்தில் மாதத்திற்கு 90ஆயிரம் ரூபாய்க்கு எப்படி லீஸுக்கு விடுவார்கள். எல்லாம் சரி காவல் நிலையம் போன் நம்பர் போட்டு யாருக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள்?
    @@@@@@@@@@@@@@@@@@@@
    அடல்ட் கார்னர்
    நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.

    நண்பன் 2: ஹாஹா…! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?!


Post a Comment

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை...