Thottal Thodarum

Aug 8, 2013

சாப்பாட்டுக்கடை- ஹோட்டல் காமாட்சி


 எனது படத்தில் நிறைய ஆக்‌ஷன் ப்ளாக்குகள் இருப்பதால் ரோடு பர்மீஷன் போன்றவைகளுக்காக இங்கே அலைவதை விட பாண்டியில் ஈஸியாய் கிடைக்குமென்பதால் பாண்டிக்கு லொக்கேஷன் ஹண்டிங் கிளம்பினோம். காலையில் கிளம்பிய வண்டி மதியம் சரியாய் ரெண்டு மணி வாக்கில் லொக்கேஷன் எல்லாம் பார்த்து முடிந்து பசிக்க ஆரம்பித்தது. உடன் வந்த லொக்கேஷன் மேனேஜர் ரவியிடம் நல்ல சாப்பாட்டுக்கடைக்கு கொண்டு போய் விடச் சொன்னேன். பாண்டிக்கு யார் வந்தாலும் நான் வெஜ் என்றால் அவர்களை இங்கே அழைத்து வந்து சாப்பாடு வாங்கிக் கொடுக்காமல் அனுப்ப மாட்டேன் என்று ஹோட்டல் காமாட்சிக்கு அழைத்துச் சென்றார்.


முதலியார்பேட்டையில் இருக்கும் நூறடி ரோடில் இருக்கிறது இந்த உணவகம். உணவகத்தின் பிரபல்யம் வாசலில் நின்றிருந்த பைக்குகளை வைத்தே சொல்லக் கூடிய வகையில் இருக்க, கார் வைக்க இடமில்லாத்தால் சற்றே தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு சென்றோம். மாடியில் இருந்தது உணவகம். ஏகப்பட்ட கூட்டம் கூட. இடம் பிடித்து உட்கார்ந்த மாத்திரத்தில் வந்த சர்வர் என்ன வேண்டுமென்று நின்றார். நாங்கள் நான்கு பேர் சென்றிருந்தோம். பிரியாணியும், மீனும், மட்டன் சுக்காவும், நாட்டுக் கோழியும், சாப்பாடும் ஆர்டர் செய்தோம். பரபரவென வந்தது எல்லா அயிட்டங்களும். மட்டன் சுக்கா சற்றே பெரிய துண்டுகளாய் இருக்க, நல்ல ஸ்பைசியாகவும், ஜூஸியாகவும் இருந்தது. காரம் சரியாய் இருந்ததால் செம டேஸ்ட். நாட்டுக்கோழி மசாலாவில் சற்றே பெரிய பீஸுடன், நல்ல குழம்போடு மணத்துடன் இருந்தது. நாட்டுக்கோழி குழம்புக்கென்றே ஒரு வித மணம் வரும் அது வர, கபகபவென பசியெடுத்தது. உடன் சூடாய் பூப்போன்ற சாதம் போடப்பட, மட்டன், சிக்கன், மீன் குழம்பு வகைகள் மொத்தமாய் வைத்தார்கள். மட்டன் குழம்பில் காரம் குறைவாக, கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. சுவை கொஞ்சம் ஓகே தான். 
ஆனால் சிக்கன் கிரேவியும், மீன் குழம்பும் அபாரம். உடன் நடுவே சூடாய் ரசம் கொண்டு வரச் சொன்னோம். அட்டகாசமான ரசம். வழக்கமாய் இம்மாதிரியான நான் வெஜ் ஓட்டல்களில் ரசம் அவ்வளவு சிலாக்கியமாய் இருக்காது. சென்னை, மதுரை அருளானந்தாவை தவிர ரசம் சுகித்து சாப்பிட்டதில்லை. ஆனால் இவர்களது ரசம் வேறு மாதிரியிருந்தது. வழக்கமான சுவயாய் இல்லாமல் வித்யாசமான சுவையில் இருந்தது.  டிபிக்கல் வீட்டு உணவு போன்ற தயாரிப்பு. எந்த உணவுகளிலும் அதிகமான மசாலா இல்லை. கடைசே கடைசியாய் சிக்கன் ஆம்லெட் ஆர்டர் செய்தோம். சிக்கன் பீஸ்களையும், கொத்துமல்லி, புதினா வகைகளை முட்டையோடு ஒரு சின்ன ஊத்தப்பம் சைஸுக்கு ஆம்லெட்டாய் போட்டுக் கொடுத்தார்கள்.  வாவ்.. வாவ்.. அட்டகாசம். நம்ம வீட்டு சமையல் என்று வரவேற்பிலேயே போட்டிருந்தார்கள். அதை உறுதி செய்யும் விதமான உணவு.எனவே பாண்டிக்கு செல்கிறவர்கள் ஒரு முறை நிச்சயம் ட்ரை செய்ய வேண்டிய உணவக லிஸ்டில் ஹோட்டல் காமாட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். சாப்பிட்டு முடித்து கீழே உள்ள கடையில் ஒரு ஐஸ் போட்டுக் கொண்டால் இன்னும் உசிதம்.
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

குரங்குபெடல் said...

" நிறைய ஆக்‌ஷன் ப்ளாக்குகள் இருப்பதால"


"ஹண்டிங் கிளம்பினோம். "


இலையில எலும்புத்துண்டுகள் பட்ட பாட்டுலேயே

தெரியுது

Unknown said...

///நாட்டுக்கோழி குழம்புக்கென்றே ஒரு வித மணம் வரும்///


கோழி உயிரோட இப்ப இல்ல ... பாவம் அந்த நாட்டு கோழி கேட்டா எவ்ளோ சந்தோஷ பட்டிருக்கும்.... தல நீங்க ஒரு பெரிய ரசிகன்....

saravanan selvam said...

நீங்க எழுதினத படிக்றப்பவே நாக்குல எச்சில் ஊருது

Unknown said...

பாவம் நாட்டு கோழி கேட்டா எவ்ளோ சந்தோசப்படும். தல சூப்பர்...

Surf2njoy said...

Cable Ji,

Yerkanave neenga irukkura size la ippadi saaptute irudhenganna health sariyillama poga podhu..neenga neraiya movies edukkanum...adha naanga paathu rasikanum ji...

'பரிவை' சே.குமார் said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...

RNS said...

Cable ji, next time u will try in Salem Briyani which is located nearby Amudha surabi ? any auto driver knows the location.