காலேஜ் மாணவர்களின் காதல் இதில் என்ன புதுசாய் இருந்து விடப் போகிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ரொம்பவும் ஈஸியாய் ஹீரோயின் குடும்பத்தையும், ஹீரோ குடும்பத்தையும் அறிமுகப்படுத்தி, இன்றைய இளைஞர்களின் ஆட்டிட்டியூடை மிக அழகாய் நம் கண் முன்னே வைக்கிறார். தோழியைப் போல பழகும் அம்மா. அன்பை பொழியும் அப்பா. அவர்களின் கண்ணுக்கு கண்ணான பெண் சுவேதா. ஸ்ட்ரிக்டான அப்பா. அன்பைப் பொழியும் அம்மா என சந்தோஷின் பேமிலி.இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த இருவரின் நட்பு எப்படி காதலாய் மாறி அவர்கள் வாழ்கையையே புரட்டிப் போடுகிறது என்பது தான் கதை.
நாயகனாய் புது முகம் சந்தோஷ். இயல்பாய் இருக்கிறார். நடிப்பு இன்னும் கொஞ்சம் நாளாகும் போல. பட்.. வழக்கமாய் சூப்பர் பிகர்கள் எல்லாம் மொக்கை பையனோடத்தான் சுத்தும் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர்கள் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சுவேதாவாய் மனிஷா. வழக்கு எண் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்கிறார்ப் போல படம். காதல் வயப்படும் காட்சிகளை விட சுமந்தலையும் காட்சிகளிலும், அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அழும் காட்சியிலும் மனதில் நிற்கிறார். ஜெயபிரகாஷும் அவரது மனைவியாய் வருகிறவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். முக்கியமாய் மகளைப் பற்றி கேவலமாய் நான்கு பேர் ரூம் போட்டு பேசுமிடத்தில் விதியே என்று தலைகுனிந்து அழ ஆரம்பிக்கும் காட்சியில் மனுஷன் பின்னியெடுத்துவிட்டார். அதே போல அவரது மனைவியாய் நடித்தவரின் நடிப்பு படு இயல்பு. மகளின் நட்பு, அவர்களை காதலிப்பதாய் அலையும் மாணவர்களைப் பற்றி பேசுமிடம், என ஆரம்பித்து, மகள் வாழ்கையை பணையம் வைத்துவிட்டாள் என்று தெரியும் போது அவர் முகத்தில் காட்டும் வலி இருக்கிறதே... சூப்பர்.. அதே போல.. ஹீரோ, ஹீரோயின் நண்பனாய் வரும் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் வரும் குண்டுப் பையனின் நடிப்பும், மாடுலேஷனும் அருமை.”தம்பி உங்கக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு நீ மாமாவாயிட்டே” “அப்படியா அவன் அப்பாவே ஆயிருவான்” என்று சொல்லுமிடம் ஒர் உதாரணம். அவர் தான் ஆங்காங்கே முதல் பாதியை சுவாரஸ்யமாக்குகிறார். மனிஷாவுடன் வரும் கொஞ்சம் டாமினெட் தோழியாய் வரும் பெண்ணின் நடிப்பு, சந்தோஷின் அப்பாவாக வரும் ஒளிப்பதிவாளர். அம்மா பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம்.
யுவனின் இசையில் ஆதலால் பாடலை விட, நெஞ்சை அடைக்கும் ஆராரிரோ பாடல் நெகிழ்ச்சி. பின்னணியிசையில் ஆங்காங்கே ராஜாவின் சாயலில் அவர் போட்ட மெட்டுக்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். பட் எபெக்டிவ். ஒளிப்பதிவாளர் சூர்யாவுக்கு சுற்றிப் போடுங்கள். அவ்வளவு இயல்பான ஒர்க். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல நல்ல கலர்புல்லான விஷுவல். ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
உடன் எழுதி இயக்கியவர் சுசீந்திரன். இவ்வளவு நல்ல இயக்குனர் ஏன் கமர்ஷியல் மொக்கை ராஜபாட்டை போன்ற படத்தை எடுத்தார் என்று புரியவேயில்லை. கதையை விட திரைக்கதை தான் இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். அவ்வளவு இயல்பு. அம்மாவுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்ட காட்சியை படமாக்கிய விதம் வாவ். முதல் பாதியை விட இரண்டாம் பாதி நம்மை அப்படி பாதிக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸ்.. ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி நிற்க வைக்கிறது. நாம் தினம் தினம் செய்தித் தாள்களிலும், புத்தகங்களிலும் படிக்கும் விஷ்யம்தான் என்றாலும். நிஜத்தை கண் முன்னே உலவ விடும் போது வலிக்கத்தான் செய்கிறது. மைனஸ் என்று சொல்ல விஷயங்கள் இருந்தும் குறையாய் சொல்ல பொருந்தாத டைட்டிலைத் தவிர வேறேதுமில்லை என்றே சொல்ல வேண்டும். பாராட்ட நிறைய விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அது ஸ்பாய்லராய் மாறிவிடுமென்பதால் சொல்லவில்லை. நிச்சயம் இன்றைய இளைஞர்கள் முதல் பெற்றோர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டிய படம். Interesting, Educating, and Top of this Entertaining Also. Don't MIss.

Post a Comment
10 comments:
"பைக் ஓட்டத்தெரியுமா?", படுக்க வச்சே ஓட்டுவோம்"
நீங்க சூப்பர் படம்ன்னு சொன்னா கண்டிப்பா பார்க்கணும் .
ஒளிப்பதிவாளர் இளையராஜாவுக்கு சுற்றிப் போடுங்கள் . . .
if any cocktail party at spl show break . . .?
படம் அருமையின்னு பதிவுலகமே சொல்லுது... கண்டிப்பா பார்க்க வேண்டும்...
//மைனஸ் என்று சொல்ல விஷயங்கள் இருந்தும் குறையாய் சொல்ல பொருந்தாத டைட்டிலைத் தவிர வேறேதுமில்லை என்றே சொல்ல வேண்டும்.//
படத்தின் மையக்கருவை எள்ளி நகையாடும்படி எதிர்மறையாக தலைப்பு வைத்த இயக்குநர் சுசீந்திரனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆதலால் காதல் செய்வீர்
என்ன பொசுக்குனு டைட்டில் பொருந்தலன்னு சொல்லிட்டிங்க ....ஆதலால் "காதல்" செய்வீர்...இப்போ பொருந்துதா பாருங்க .....
ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல படம்
"வழக்கமாய் சூப்பர் பிகர்கள் எல்லாம் மொக்கை பையனோடத்தான் சுத்தும் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர்கள் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்"
inda madiri mokkai pasangal ellam hero aganumna avanga appa peria producer ah irukanum !
மைனஸ் என்று சொல்ல விஷயங்கள் இருந்தும் குறையாய் சொல்ல பொருந்தாத டைட்டிலைத் தவிர வேறேதுமில்லை
Ithu neenkal sonnathu thavaru... yosithu paarungal intha Title thaan sariyanathu....
movie is blockbuster hit
Post a Comment