கற்றது தமிழ் ராமின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பு. நெடு நாளாய் ரிலீஸுக்கு டேட் சொல்லி தள்ளிக் கொண்டே போனதன் விளைவு. பார்த்த இயக்குனர்கள் எல்லோரும் அஹா ஓஹோ என்ற பாராட்டு போன்றவைகள் எல்லாம் இன்னும் ஹைப்பை கொடுத்திருக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்தேன்.
வழக்கமான பஞ்ச் டயலாக் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. அற்புதமான விஷுவல்கள். இனிமையான பாடல்கள், பின்னணியிசை.முத்துக் கோர்த்தார் போன்ற எடிட்டிங் என எல்லாவிதமான திறமைகளையும் ஒருங்கிணைத்து தந்தைக்கும் மகளுக்குமிடையே ஆன பாசக்கதைக்கு இப்படி ஒர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராமிற்கு வாழ்த்துகள்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் காட்சியில் அப்பா மகளின் உறவு நெகிழ வைக்கிற ஆரம்பமாய் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் நெருக்கத்தை ஒரு சில இடங்களில் கவிதையாய் சொல்ல முயற்சித்திருக்கிறார். தன் பெண்ணிற்கு Wவுக்கும் Mக்குமான வித்யாசத்தை குளக்கரையில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்கும் காட்சி. பூரிக்காக தான் சாகப் போவதை தள்ளி வைத்த சிறுமியின் நடிப்பு. மனைவியாய் வரும் ஷெல்லியின் அற்புதமான நடிப்பு. அவரின் பார்வையில் தெரியும் பாசம், காதல், குடும்ப பிரச்சனையை உணர்ந்து நடந்து கொள்ளும் விதம். பெண் ஸ்கூலில் போய் திருடுகிறாள் என்று அறிந்து வருத்தப்படும் போது தாத்தா சும்மா விளையாட்டுக்காய் திருடி என சொல்ல, அழுத்தமாய் அவளை அப்படி சொல்லாதீங்க என்று சொல்லுமிடம். பெண் ஸ்கூலில் ஒரு டீச்சரை மிகவும் பிடிக்கிறது என்று சொன்னதற்காக டீச்சரை இரவில் போய் பார்க்கப் போக, அவளது கணவனாய் அருள்தாஸ் இருக்க, அருள்தாஸுக்கும் அவருக்குமிடையே ஆன சந்தேக விஷயத்தை மிக நுணுக்கமான உணர்வுகளின் வெளிப்பாடுகளினால் கொண்டு வந்த விதம். உங்க பொண்ணுக்கு மட்டும்தான் கால் அமுக்கி விடுவீங்களா? என்று மனைவி கேட்க, பெண்ணுக்கும், மனைவிக்கும் கால் அமுக்கிவிடும் இடம். செல்லம்மா தன் பூரிப் பெண் தோழியிடம் தன்னை வேறு ஒரு பெண்ணாய் அவதானித்து கதை சொல்லுமிடம், ஏர்போர்ட்டில் தங்கையிடம் நாய் வாங்க காசு கேட்டு அவர் தரமாட்டேன் என்று சொல்லும் போது ராம் மனம் நொந்து ஒரு சாக்லெட்டை மருமகன் கையில் கொடுத்துவிட்டு, கிளம்ப, தன் மகனிடமிருந்து சாக்லெட்டை பிடுங்க எங்க அண்ணன் கொடுத்தது என நிறைய இடங்களில் நம்மை அட என ஆச்சர்யப்பட வைக்கிறார் இயக்குனர்.
ஆனால் இவ்வளவு காட்சிகளும் ஹீரோவின் கேரக்டரும், கதையின் நாயகியான செல்லம்மாவின் கேரக்டருக்கும் என்ன பிரச்சனை என்ற தெளிவு படுத்தாமல் இருப்பதால் ஒட்ட முடியவில்லை. அப்பாவும் பெண்ணும் படிப்பில் அடிப்படை அறிவில் கொஞ்சம் குறைந்தவர்களாய்தான் தெரிகிறார்கள். ஆரம்ப காட்சியில் ஏன் பீஸ் கட்ட கஷ்டபடவேண்டும் பக்கத்துவீட்டு பூரிப் பெண் ஸ்கூலில் ஹோம் ஒர்க் இல்லை, பீஸ் இல்லை என்று செலல்மமா சொல்லும் போது “இல்லம்மா நீ இங்க படிச்சாத்தான் நல்லா படிப்பு வரும் என்று சொல்லிவிட்டு, போகிற போக்கில் கவர்மெண்ட் ஸ்கூல் தான் பெஸ்ட் இவர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லுவதெல்லாம் கருத்தாய் நன்றாக இருந்தாலும் அதை கன்வின்சிங்காய் சொல்லவில்லை. பெண் நாய் கேட்டுவிட்டாள் என்றதும் அதை சம்பாதிக்க, ஏதோ ஒரு யாழை தேடி அலைவதும், அதை லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கும் வெள்ளைக்காரர்களை அருகில் தன் தாடி முகத்தோடு போய் பயமுறுத்திவிட்டு, அவர்களின் பின்னால் துறத்தி லேப்டாப்பை பறித்து, எல்லோரிடமும் அடிவாங்கும் காட்சி சிம்பதியை வரவழைப்பதற்கு பதிலாய் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. யாழைத் தேடியலையும் காட்சிகள் எல்லாம் அபத்த களஞ்சியம்.
எத்தனையோ அப்பாக்கள் தன் குடும்பம் குழந்தைக்காக ஊர் விட்டு ஊர் போய் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தன் மகள்/ன் மேல் பாசமில்லாமலா இருக்கிறார்கள்?. உனக்காக பீஸ் கட்டுறது என் கடமை உன் பொண்ணுக்கு கட்டறது எதுக்குன்னு ராமின் அப்பா கேட்குமிடத்தில் கோபித்துக் கொண்டு போகும் ராம் பின் பீஸ் கட்டுவதற்காக இத்து போன பித்தளை பாத்திரம் பாலீஷ் கடை ஓனரிடம் கேட்பதை தவிர ஒன்றும் செய்யாமல் ஸ்கூலில் அய்யர் பிரின்ஸிபல் மோசம், கிறிஸ்டியன் டீச்சர் நல்லவங்க, கார்பரேஷன் ஸ்கூல் தான் சிறந்தது என்றெல்லாம் மெசேஜ் சொல்லியிருப்பது ஒட்டவேயில்லை. ஏனென்றால் கதை அதைப் பற்றியது அல்ல. உன் பொண்ணுக்கு எவ்வளவு வயசு என ஒரு சடங்கு வீட்டில் செல்லமாவைப் பற்றிக் கேட்கப்பட, சீக்கிரம் வயசுக்கு வந்துரப் போறா என்று சொன்னதற்காக, சாப்பிடாமல் எழுந்து வருவது. வீட்டில் செல்லம்மா வயசுக்கு வருவது என்றால் என்ன? என்று கேட்டதற்கு அவளை போட்டு பேய் அடி அடிப்பது எல்லாம் பார்க்கும் போது அந்த வீட்டில் செல்லம்மாவை ஒழுங்காய் வளர்க்க, அப்பா, அம்மா ஆகிய இருவருமே தவறியவர்கள் என்றே தோன்றுகிறது. வாழ்க்கையின் யதார்த்தத்தை தானும் புரிந்து கொள்ளாமல் தன் பிள்ளைகளூக்கும் அதை கடத்தாமல் தன் இயலாமையை சமூக அவலமாய் கருதிக் கொண்டு, கருத்து சொல்லிக் கொண்டு, ஒரு குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். இவர் தன் குழந்தைக்காக படும் பாட்டை காட்டும் காட்சிகளில் எல்லாம் அய்யோ பாவம் என்று தோன்றாமல் எரிச்சல் வருவதற்கான காட்சிகளாய் மாறிப் போனதால் நான் உனக்கு ஏதுமே பண்ணலையே ஏன் இப்படி என் மேல பாசத்தை வைக்கிறே என்று ராம் ஓவென கதறி அழும் போது சரி போதும் ஓவராயிருக்கும்னு சொல்லத் தோன்றுகிறது. அதுவும் க்ளைமாக்ஸில் பக்கத்தில் இருக்கும் குளத்திற்கு ராத்திரி முழுவதும் சைக்கிள் மிதிக்குமிடமெல்லாம் செம பில்டப்.
யதார்த்தமில்லா வாழ்க்கை முறை கொண்டவனை நாயகனாய் வைத்து எடுக்கப்படும் கதைகள் மூலமாய் சொல்லப்படும் விஷயங்கள் எப்போதும் மக்கள் மனதில் நிற்பதில்லை. ஏஸ்தடிக்கான விஷுவல்கள், நெகிழ்ச்சியான காட்சிகள், இருந்தாலும். கற்றது தமிழில் எப்படி அற்புதமான ஒரு காதல் கதையை, இரண்டாம் பாதியில் தமிழ் படிச்சவனெல்லாம் உருப்படுவது கிடையாது. சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்யுறவன் மேலிருக்கும் காண்டை மட்டுமே முன்னிறுத்தியதோ, அதைப் போல இது படம் முழுக்கவே வாத்தியார் புள்ள மக்கு என்பதை நிறுபிப்பதைப் போல, வாழ்க்கையின் யதார்த்ததை உணர்த்தி வளர்க்கப்படாத ஒரு தகப்பனால் வளர்க்கப்படும் குழந்தையை காட்டி உணர்ச்சி பொங்க வைக்கும் அத்துனை முயற்சியும் ஒட்டாமல் போய்விடுகிறது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
16 comments:
Gud cable
நல்ல விமர்சனம்...
சில காட்சிகளில் மிகவும் போர் அடிக்கிறது
கதை அதுவல்லவே.. என்று சொன்ன நீங்கள் கதை என்ன என்பதை சற்றே சிந்தித்து எழுதி இருந்தால்.. கண்டிப்பாக நீங்கள் சொன்ன குறைகளுக்கு எல்லாம் அதிலேயே பதில் இருப்பதை அறிந்திருப்பீர்கள்... கேபிள்ஜி... தான் எப்போது வயதுக்கு வருவேன் என்று விபரமறியாமல் கேட்கும் சின்ன பெண்களை அடிப்பதுதான் இன்னும் பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது.. அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” நீங்களும் படித்திருப்பீர்களே... எதை வைத்து எதார்த்தமில்லா வாழ்க்கை முறை கொண்டவன் என்று சொன்னீர்களோ....! சத்தியமாய் உங்கள் விமர்சனம் ஒட்டவே இல்லை...
தந்தை மகளுக்கிடையேயான ஒரு உன்னதமான உறவு... மகளைப் பெற்றவறே அறிவர் இப் படத்தின் மேன்மையை...
Best review.Ram is a psycho.You can see that from Kattradhu tamizh."இரண்டாம் பாதியில் தமிழ் படிச்சவனெல்லாம் உருப்படுவது கிடையாது. சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்யுறவன் மேலிருக்கும் காண்டை மட்டுமே முன்னிறுத்தியதோ,"
Exactly what I thought about that movie.
Thanks for the honest review Mr.Cable.
நேர்முறையான எதிர்மறையான கருத்துகள் எல்லாம் தனிதனியாகச் சொல்லிப் பொறுப்போடு விமர்சித்து இருக்கிறீகள், பாராட்டுகிறேன்.
||குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்/ மிகநாடி மிக்க கொளல்|| என்பதின்படி இதில் மிகை, பொறுப்பின்மையும் அதைக் குயிற்குணம் என்று நியாப்படுத்துவதும் ஆகும். ஆக...?
master piece review -
தன் இயலாமையை சமூக அவலமாய் கருதிக் கொண்டு - you summed it up fantastically !!
நான் மடையன் போல, எனக்கு படம் பிடித்திருந்தது. உலகப்படம்லாம் இல்லதான் அதுக்காக இப்பிடி ஒரு விமர்சனத்தை வாங்குமளவு மோசமான படமாய் தோன்றவில்லை. ஒருவேளை என்னைப்போன்ற சாமான்யன்களுக்கு பிரித்து பேன் பார்க்கும் "பகுத்தறிவு" பத்தவில்லை போலும்.
waiting for THOTTAL THODARUM
pakkalam neenga oru kuraiyum illama 100 percent oru padam edukkureengalanu
கேபிள் ஜி!
உங்கள் விமர்சனம் எப்போதும் Common Man ன் கருத்தாக இருப்பதால், நான் எப்போதும் விரும்புவேன்!
வறட்டு பிடிவாதத்தோடு, slightly off-balance ஆக நிறைய படைப்பாளிகள் இருப்பதை பார்த்திருக்கிறேன். அதனாலேயே, அவர்களால் ராமின் protagonist உடன் ஒத்து போக முடிகிறது.
அவர்களின் இயலாமையை, சமூகத்தின் தவறாக காட்ட முனைகிறார்கள். யதார்த்ததை ஒத்துக்கொள்ளாமல் இவர்கள் பிடிவாதம் பிடித்துக்கொண்டு, நம்மை எல்லாம் அங்கே இழுக்க முயற்சி செய்வதாகவே எனக்கு படுகிறது!
your review is nailing right on the head!
sir neenga entha tamil film kum nalla review tharamateengala..iyalamai ethu sir athu thani manithanidathu sir.avangaloda kannotathula irunthuthan pakanum sir..vathiyar pulla makkunu solla varala sir inga vathiyar thannoda pullaya apdi valakala sir,, antha mathiri thanum iruka kudathunu antha ponna kalyani valrakaru sir...
அபியும் நானும் படத்திற்கு நீங்கள்
குறிப்பிட்ட இந்த விசயம்
"சாதாரணமாய் பார்த்தால் எல்லா பெண்ணை பெற்ற அப்பனுக்கு நடக்கும் நிகழ்வுதானே எதற்காக இவ்வளவு எக்ஸாசிரேஷன் என்று கேட்பவர்கள், ப்ளீஸ்.. நீங்கள் வேறு படத்திற்கு போகவும்.."
தங்க மீன்களுக்கும் படத்திற்கும் பொருந்துமா
இந்த மாதிரி படங்களுக்கு எப்பவும் தலை வணங்குகிறேன்.குவாட்டர் சரக்கு அடித்து விட்டு விமர்சனம் பண்ணும், அதி மேதாவிகளால்தான் தமிழ் சினிமா வில் வருடத்திற்கு 100 குப்பைகள் தோன்றி,ஒட்டு மொத்தமாக சாக்கடையாக உள்ளது.
i agree with u. ella padathayum orey mathiri pakurathu thapu.100 % percent mark vara mathiri oru film kudunga mr.sankar. yaralayum mudiyathu.ellorayum oru padatha la thirupthi padutha mudiyathu.mr.sankar.unga padathuku iruku..pakalam..marakama padinga.
unga padam varatum sankar.apuram na pesa vendiyatha solren
Post a Comment