Chennai Express
இந்திய தொலைக்காட்சிகளில் எங்கும் பார்த்தாலும் ஒரு வாரமாய் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைப் பற்றி தான் ஏதாவது ஒரு நியூஸ் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஷாருக்கானுக்கு பேண்டுக்கு மேல் வேட்டிக் கட்டி விடும் தீபீகாவின் படம் போட்டு அதற்கு கேப்ஷன். ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று இங்கே அறிக்கை விடுவது. படத்தை ப்ரமோட் பண்ண என்னவெல்லாம் செய்யலாம் என்று மணடையை பிய்த்துக் கொண்டு யோசித்தவர்கள் கொஞ்சமாச்சும் கதை, திரைக்கதை, பற்றி யோசித்திருக்கலாம்.
கடந்த பத்திருபது வருடங்களில் நாம் பார்த்த தமிழ், தெலுங்கு, லேசாய் சில ஹிந்தி படங்களின் கதையெல்லாவற்றையும் சேர்த்து படு மொக்கையான கதை எழுதியாயிற்று. ஷாருக்கான் போன்ற திறம் படைத்த நடிகரின் கால்ஷீட் இருக்கு. மரப்பாச்சி மாரோடு வலம் வரும் கன்னங்குழியாள் தீபீகா இருக்கிறார். ஷூட்டிங் போக வேண்டியதுதானென்று கிளம்பிவிட்டார்கள்.
ஷாருக் படம் நெடுக காமெடியாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சின்னச் சின்ன வசன உட்டாலக்கடியில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். குண்டிலோக், எந்தானு ஜோலி, ஏஞ்சலினா ஜோலி, போ என்று வார்த்தை விளையாட்டுகளில் சுவாரஸ்யம். அப்புறம் நாம் ஏற்கனவே பார்த்த அலெக்ஸ் பாண்டியன் அருவாள், ஜீப் ஜம்ப் எல்லாம் இருக்கிறது.
தீபீகாவின் தொடை தெரிய ஆடும் லுங்கு டான்ஸ் சுவாரஸ்யமில்லாத திரைகதையில் முழிப்பை ஏற்படுத்தும் காட்சி. மொக்கை வில்லன், ரிச் ஜூனியர் ஆர்டிஸ்டாய் சத்யராஜ். அடுத்த காட்சியில் என்ன நடக்குமென்பதை சொல்லச் சொல்ல வருகிறது. பெண்டாட்டியை கோவில் படியில் தூக்கிச் செல்லும் காட்சி வழக்கமானது தான் என்றாலும் ஓகே, ராகுல்-டெரரிஸ்ட் மேட்டருக்காக இந்தப்படத்தையும் தலைவா ரேஞ்சுக்கு ஒடுக்கப்பட்ட இந்திய மாணவர் அணியிலிருந்து லெட்டர் போட்டிருக்கலாம். நடுவில் இலங்கை தமிழர்கள், டீசல் கடத்தல் போன்ற அதிமேதாவித்தனமான புரிதல் கொண்ட காட்சிகள் வேறு.. மொத்தத்தில் முடியலை.. முடியலை.. முடியலை..
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
அதுசரி...
http://chummakonjaneram.blogspot.com
http:\\chummakonjaneram.blogspot.com