ஷாமும், பூனமும் தங்கள் குழந்தையோடு பீச்சுக்கு போகிறார்கள். குழந்தை காணாமல் போகிறது. பெற்றவன் குழந்தையை கண்டுபிடித்தே தீருவேன் என்று அலைந்து திரிந்து தேடுகிறான். அப்படி அவன் தேடிப் போகும் போது நமக்கு தெரிவிக்கப்படும் விஷயங்கள் பிள்ளை பெற்றவர்களின் வயிற்றை கலக்கும்.
நெடு நாளைய தயாரிப்பு, பட்ஜெட், லாஜிக்கில்லா தேடுதல்கள், மீறல்கள், திரைக்கதை என்று சொல்ல முடியாத ஜம்ப்கள், சினிமாத்தனமான கிளிஷே ஹீரோத்தனம், கண்டின்யூட்டி மிஸ்ஸிங், சவசவ வசனங்கள், சுமாரான நடிப்பு, ஒளிப்பதிவு நாயகன் பட ரீரிக்கார்டிங் உட்டாலக்கடி, என குறையாய் சொல்ல ஆயிரம் இருந்தாலும், பிள்ளையை பற்றி தெரிந்த ஒரே ஆள் பிச்சைக்காரன் என்பதை அறிந்து அவன் காலில் வீழ்ந்து அண்ணே என் புள்ளை பத்தி சொல்லுங்கண்ணே என்று கதறுமிடம், பணம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என்ற நிலையில் அவர்கள் கடத்தி வந்த வேறொரு பெண்ணை காப்பாற்ற முடியாமல், அவள் அலறும் அலறை கேட்க பிடிக்காமல் சுயநலத்தின் உச்சமாய் தன்னையே குறுக்கிக் கொண்டு ஷாம் அழும் காட்சி, இந்த கும்பல்ல இருக்கிற பசங்கள்ல யார் உன் பையன்னு தேடி கண்டு பிடிச்சிக்க என்று ஒர் அறையில் விடப்பட, அங்கிருக்கும் அத்துனை குழந்தைகளை என்னை கூப்பிடு, என்னை கூப்பிடு என்று அவரவர் மொழிகளில் ஷாமின் கால்களை சுற்றிக் கொள்ள, பதறிப் போய் ஷாம் அழுது கொண்டே வரும் காட்சி போன்ற கண்டெண்ட் ஸ்ட்ராங்காய் இருப்பதாலும், அதற்கான உழைப்பினாலும், 6 மெழுகுவர்த்திகள் தனியே ஒளிர்கிறது.
Post a Comment
3 comments:
Copy of the English film "6 bullets"
தங்கள் வழியில தங்களை வணங்கி 6 மெழுகுவத்திகள் படத்திற்கு நான் விமா்சனம் எழுதியுள்ளேன் தாங்கள் படித்து விட்டு உங்கள் சிஷ்யனான என்னை வாழ்த்த வேண்டுகிறேன்.
ஷாம் மிகவும் வருந்தி நடித்திருக்கிறார் என்பதால் பார்க்கலாம்.
Post a Comment