ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட்டில் எல்லாம் இம்மாதிரியான படங்கள் வருதே நம்ம ஊருலே வரதேயில்லையே என்று ஆதங்கம் மட்டுமே படும் காலம் விரைவில் குறையுமென்ற நம்பிக்கை வர ஆரம்பித்துவிட்டது.
முகமுடிக்கு பின் மிஷ்கின் என்கிற இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படமென்றே சொல்ல வேண்டும். ஓநாயைப் போன்ற கிரிமினலுக்கும், ஆட்டுக்குட்டியாய் மருத்துவ கல்லூரி மாணவனுக்குமிடையே நடக்கும் கதை. பில்டப் கொடுத்து இதை மசாலா தடவி சொல்ல விழைந்திருந்தால் செய்திருக்கலாம். பட்.. அதை விதயாசமாய் சொன்ன விதத்தில் தான் மிஷ்கின் ஏன் மதிக்கப்பட வேண்டிய இயக்குனராய் இருக்கிறார் என்று புரியும்
முதல் காட்சியிலேயே ப்டத்தை ஆரம்பித்து விடுகிறார். அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சும்மா பரபர ரோலர் கோஸ்டர்தான். அவரின் வழக்கமான குத்து பாட்டு, காமெடி, போன்ற ஏதுமில்லாமல் ஒர் அற்புமான திரைக்கதையுடன் விறுவிறு த்ரில்லரை அளித்திருக்கிறார். கதை போகிறபோக்கில் மனித நேயம் எவ்வளவு மோசமாய் ஆகியிருக்கிறது என்று ஆரம்பித்து, போலீசின் மெத்தனம் ஒருபுறம், இன்னொரு புறம், மனசாட்சியுடைய சிபிசிஜடி அதிகாரி, கறுப்பு ஆடு இன்ஸ்பெக்டர், கிடைக்கிற கேப்பில் கேஸை நான் தான் பிடிச்சேன் என்று பிரகடனப்படுத்த ஆசைப்படும் எஸ்.ஐ, மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே இருக்கும் போதை மருந்து பழக்கம் என நிறைய விஷயங்கள் பளிச் பளிச்சென சொல்லிக் கொண்டே போகிறார்.
தான் காப்பாற்றியவனையே கொன்றால் தான் தனக்கும் தன் குடும்பத்துக்கு விடுதலை என்ற நிலையில் இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கும் கேரக்டரில் ஸ்ரீ. சின்னத்தலையில் பனங்காயா? என்று நினைத்தால் போகப் போக தன்னையும் தன் கேரக்டரையும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் உடல் மட்டுமே கொஞ்சம் ஓவர் சைசாய் இருந்தாலும் தன் பாடி லேங்குவேஜ் மற்றும் ஆக்ஷனின் மிரட்டுகிறார். இவரது ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் ரிப்ளெக்ஸ் அபாரம். க்ளைமேக்ஸில் அவர் தன் கதையை சொல்லுமிடத்தில் அவரது நடிப்பும், அதை திரையில் கொண்டு வந்தவிதம் நன்றாக உள்ளது.
படத்தின் பலம் இளையராஜா. எங்கே அமைதி காக்க வேண்டும், எங்கே இசை வேண்டுமென்று புரிந்து இசையமைக்கக் கூடியவர்களில் தான் தலைவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜா. ஒவ்வொரு காட்சியிலும் அவரும் ஒரு கேரக்டராகவே வலம் வருகிறார். ராஜா ராஜாதான். பாலாஜியின் ஒளிப்பதிவும் பாராட்டதக்கது.
மிஷ்கினின் கேரக்டர் ப்ளாக், கிரே, ஆர் வொயிட் என சொல்லாமல் க்ளைமாக்ஸில் அவர் சொல்லும் கதை மூலமாய் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று விட்டுவிடும் அளவிற்கு புத்திசாலித்தனமாய், க்ளிஷேக்களை உடைத்து வந்திருக்கும் இப்படத்தில் க்ளைமாக்ஸில் வரும் சமுராய் ஸ்டைல் சண்டைக்காட்சிகள் போல் ஆங்காங்கே சின்னச் சின்ன காம்பரமைஸ் இருந்தாலும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உலகத் தரமான படங்களில் ஒன்றாய்தான் சொல்வேன். Don't Miss
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
welcome back cable ....
முகமூடிக்கு பின் சிறிது தயக்கம் இருந்தது... உங்களது விமர்சனத்துக்காக காத்திருந்தேன்... இப்போ ரூட் கிளியர்....
நீங்களே சொல்லிட்டிங்க சங்கர் நல்ல படம் என்று... நம்பிக்கையும் பார்த்துவிடவேண்டியதுதான்
நல்லது, ஆர அமரப் பார்க்கிறேன். நல்ல செய்தி கேட்ட உவகையால் மகிழ்கிறேன்!
தல, முதல் முறையா நான் படம் பாத்துட்டு உங்க விமர்சனம் படிக்கிறேன்.. லாஸ்ட் பத்தி நான் மனசில நெனச்சத படிச்ச மாதிரி அச்சு பிசகாம பதிஞ்சிருக்கிங்க...
க்ளாஸ் மூவி!
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல படம்..
NICE REVIEW SIR...
அருமையான தகவல்....
http://www.thamizhmozhi.net
superb
No Songs
No Romance
No Comedy
No unwanted emotions
No punch lines
No length dialogs
No advice to the society.
No heroie
No smoking scenes
No Drinking scenes
wonder how to take the tamil movie without this.
even in the final name card after the movie Miskin scored.
The Movie on the track.
After a long time. Watched a movie sitting in the edge of the sit.
My Dear Music Directors,
Please go and watch this movie. Then say are you people doing anything called BGM in the movie.
This comment is for those who rely on Cable sankars review and think that movies he reviews "as Good" are really good.
It is not the case. For eg. Vishwaroopam is an average movie but it was rated high by cable.
However some of his reviews are good.
Go and watch movies without any expectation. As I love thrillers and Misken, I think I will love this film.
ஒரு பிரபல பதிவர் ஒரு சீனில் வருவாரே, ஏன் யாருமே [குறிப்பிட வில்லை., முக்கியமாக 2008 இல் உள்ளவர்களுக்கு அவரையும், அது குறித்தும் நன்கு தெரியுமே ! :-)
Post a Comment