நெடு நாளைக்கு முன் அ.முத்துலிங்கம் ஒர் சிறுகதை எழுதியிருந்தார். இலங்கையில் இவருக்கு வழக்கமாய் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரும் சிங்களன் ஒருவன் ஒரு முறை வேறு ஒரு வீட்டின் சாப்பாட்டை கொண்டு வந்துவிட அது ரெகுலராகி, பின்னால் நடக்கும் விஷயங்களைப் பற்றிய கதை. படு சுவாரஸ்யமாய் இருக்கும். கிட்டத்தட்ட அதே கதைதான் இந்த லஞ்ச் பாக்ஸும்.
மனைவியை இழந்து ரிட்டையர் ஆக ஒரு மாதமே இருக்கும் பெர்னாண்டெஸ் தன் மதிய சாப்பாட்டை வீட்டின் பக்கத்தில் இருக்கும் ஒர் மெஸ்சிலிருந்து டப்பா வாலா மூலமாய் தருவித்து கொண்டிருக்கும் வேளையில், இலா எனும் குடும்பத்தலைவி அவள் கணவனுக்கு அனுப்பிய லஞ்ச் பாக்ஸ் மாறி வந்து விடுகிறது. அதுவே அவர்களுக்கிடையே ஒர் புதிய உறவை ஏற்படுத்துகிறது. அந்த உறவு என்ன ஆனது என்பதுதான் கதை.
இர்பான், நிர்மத் கவுர், நவாசூதீன் ஆகியோரின் சிறந்த நடிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு மிக சுவாரச்யமான ஒர் திரைக்கதையை கொடுத்திருக்கிறார்கள். குட்டிக் குட்டியாய் கவிதையாய் காட்சிகள் படம் நெடுக விரிந்திருக்கிறது. நவாசூதீன் கேரக்டர். இர்பானின் வீட்டின் முன் கிரிக்கெட் ஆடும் சிறுமி, டப்பா வாலா, டிபிக்கல் ஹவுஸ் ஒய்ப் நிர்மத். அவரது முகம் காட்டாமலேயே இறந்து போகும் அப்பா. வேறு ஒருத்தியுடன் உறவு வைத்திருக்கும் நிர்மத்தின் கணவன். நிர்மத்தின் மாடி வீட்டு குரல் மட்டுமே வரும் ஆண்ட்டி கேரக்டர். இதை நம்ம பாலசந்தர் இருமல்தாத்தாவாக என்றைக்கோ காட்டிவிட்டார். நீ ஏன் இன்னொரு குழந்தை பெற்று கொள்ளக் கூடாது என்று இர்பான் சொன்னதும், அதை செயல்படுத்த நிர்மத் செய்யும் முயற்சி எல்லாம் செம க்யூட்.
இர்பானின் பாடிலேங்குவேஜ், நிர்மத்தின் இயல்பான நடிப்பு, நவாசூதீனின் அலட்டலான பொய் பவ்யம் காட்டும் கேரக்டரைஷேஷன்.அருமையான லைட்டிங்கே தெரியாத ஒளிப்பதிவு. சிறந்த ஒலி, ஸ்லீக்கான க்ளாஸ் எடிட்டிங். மிக இயல்பான வசனங்கள். என டெக்னிக்கலாகவும் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. டப்பாவாலாக்கள் தவறே செய்ததில்லை. போன்ற லாஜிக் கேள்விகளை மட்டுமே வைத்துக் கொண்டு சத்தாய்ப்பதை விட்டுவிட்டு படம் பார்த்தால் ஒர் இனிய அனுபவம் காத்திருக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் எனக்கு ஏமாற்றமே.. பட் வேறு வழியில்லை..
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
இது கேபிள் சங்கர் விமர்சனம்தானா? நடையே வேறுமாதிரி இருக்கு...
லாஜிக் கேள்விகளை மட்டுமே வைத்துக் கொண்டு சத்தாய்ப்பதை விட்டுவிட்டு படம் பார்த்தால்....
I can understand you become a director..
I also felt the same regarding climax
கேபிள் சார்,
நேற்றுதான் படம் பார்த்தேன். இந்த ஆர்ட் பிலிம்களே எனக்குப் பிடிப்பதில்லை என்பது வேறு விஷயம். படம் எந்தக் கால கட்டத்தில் நடக்கிறது? இலாவின் வீட்டு டிவியைப் பார்த்தால் தற்காலம் என்றுதான் தோன்றுகிறது. அப்படியானால் படத்தில் ஏன் ஒருவரிடம் கூட செல்போன் இல்லை?! கவர்ன்மெண்ட் ஆபீசில் ஏன் ஒரு கம்ப்யூட்டர் கூட இல்லை?!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
Post a Comment