தொட்டால் தொடரும்
42 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் கதைக்கு முக்கியமான காட்சிகளையும், ஒரு பாடல் காட்சிகளையும் எடுத்துவிட்டால் எல்லாம் சுபம். இச்சமயத்தில் என் படத்தின் நாயகனைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். இரண்டாம் கட்ட பாண்டிச்சேரி படப்பிடிப்பின் போது ஒரு ஆக்ஷன் ப்ளாக்கிற்க்காக குதித்த போது அவருக்கு வலது கால் முட்டியில் லிகமெண்ட் டேர் ஆகிவிட்டது. கதையில் முக்கியமான நேரம் அது. வலியில் துடித்தார். தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் அன்றைக்குத்தான் சிங்கப்பூருக்கு கிளம்பியிருந்தார். விஷயம் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாய் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் என்று சொல்ல, தமன் சற்று நேரம் யோசித்து,.. இருக்கட்டுங்க.. “என் ஒருத்தனால ஷூட்டிங் பாதிக்கக் கூடாது என்று சொல்லி, அன்றைக்கு மட்டுமில்லாமல் இன்றைக்கு வரை அதற்கான பிஸியோ ட்ரீட்மெண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் டெடிக்கேஷனுக்கு என் நன்றிகள்.
சாப்பாட்டுக்கடை
என் பதிவுகளில் கொத்துபரோட்டாவுக்கு எவ்வளவு ரீச்சோ அதே அளவு ரீச் சாப்பாட்டுக்கடை பதிவுகளுக்கு உண்டு. அப்பதிவுகளைப் படித்துவிட்டு பிரபலங்களிலிருந்து, புதிய நண்பர்கள் வரை தினம் யாரேனும் ஒருத்தருக்காகவாவது நல்ல உணவகங்களை அடையாளம் காட்டிக் கொண்டுதானிருக்கிறேன். அநேரத்தில் தான் மதி நிலையத்திலிருந்து அழைத்தார்கள். உங்கள் சாப்பாட்டுக்கடை கட்டுரைகளை தொகுத்துத் தாருங்கள் புத்தகமாய் போடப் போகிறோம் என்று. புத்தகமாய் வந்தால் இன்னும் பெருவாரியான மக்களுக்கு இவ்வுணவகங்கள் சென்றடையும் என்று தோன்ற, படப்பிடிப்பின் நடுவே இப்புத்தகத்திற்கான வேலைகளையும் பார்த்து அனுப்பினேன். இதோ உங்கள் முன் சாப்பாட்டுக்கடை புத்தகம். இதற்கு முந்தைய லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா, கேபிளின் கதை ஆகிய ஏழு புத்தகங்களுக்கு கொடுத்த ஆதரவினை இப்புத்தகத்திற்கு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் முன்..ஆன்லைனில் வாங்க
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஈகோ
ஈகோ
கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களாகிவிட்டது படம் முடிந்து. வேந்தர் மூவீஸ் மூலமாய் வெளியிடவும் ஏற்பாடாகிவிட்ட நிலையில் பெரிய படங்களுக்கு நடுவே சரியான இடைவெளியில்லாததால் காத்திருந்து நல்ல கேப் பார்த்து வருகிற டிசம்பர் 6 முதல் நான் வசனமெழுதிய படமான “ஈ.கோ” வெளியாக உள்ளது. இதற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
டிசம்பரிலிருந்து பிப்ரவரிக்குள் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக தயாராக இருக்கிறது. பெரும்பாலான படங்கள் இரண்டு முதல் மூன்று கோடி வரையான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள். எல்லாருமே வெளியிடக் கூடிய தயாரிப்பு நிறுவன படங்கள்தான். ஒவ்வொரு படத்திற்கு இடையே ப்ரீத்திங் டைம் கூட இல்லாம அடுத்தடுத்து படங்கள் வெளியாவது குறித்து யாரேனும் யோசிக்க மாட்டார்களா? என்று நினைத்துக் கொண்டிருந்த போது திடீரென நேற்று மாலை பென்ஸ் பார்க் ஓட்டலில் அவசர அவசரமாய் சிறு முதலீட்டு படங்கள் வெளீயிட முடியாமையை போக்க என்ன செய்வது என்று யோசிக்க கூட்டம் கூட்டியிருக்கிறார்கள் இயக்குனர் சங்கத்தினர். இவ்வளவு அவசரமாய் கூட்டம் கூட்ட என்ன அவசரமென்று புரியவில்லை. இருந்தாலும் பாராட்டக் கூடிய சந்திப்புத்தான். பார்ப்போம் எவ்வளவு தீர்க்கமாய் முடிவெடுக்கிறார்களென..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
ஃபேம் தியேட்டரை ஐநாக்ஸ் வாங்கியதிலிருந்தாவது ஏதாவது சர்வீஸ் மாற்றம் இருக்கிறதா என்று பார்த்தால் வேலை பார்ப்பவர்கள் டீ ஷர்ட்டும், எல்லா தியேட்டர்களில் புதியதாய் 4 கே ப்ரொஜக்ஷனைத் தவிர வேறேதும் இல்லை என்கிறார்கள். மொத்த மாலிலும், ஃபுட் கோர்ட், பிக்பஜார், ஆகியோர் கடை காலி செய்துவிட்டார்கள் போல, எல்லா ப்ளோரிலும், பாண்டலூன் மட்டும் கடை விரித்திருக்கிறார்கள். மாடியில் மல்ட்டிப்ளெக்ஸ். தரைதளத்தில் பைரஸி வீடியோ டிவிடி விற்கிறார்கள். என்ன ஒரு ஐரணி. வழக்கம் போல தியேட்டர் லாபியில் ஏசி போடாமல் புழுங்கடிக்கிறார்கள். இண்டர்நெட் டிக்கெட் மெசேஜைக் காட்டினாலும் இரண்டாவது ப்ளோர் வாசலில் ஒரே ஒரு டிக்கெட் பிரிண்டிங் மிஷினில் போய் க்யூவில் நின்று ப்ரிண்ட் எடுத்து வந்தால்தான் ஆச்சு இல்லாட்டி விட மாட்டேன் என்று ஒரு நபும்சகன் வழி மறிக்க, மீண்டும் குரலெழுப்பி, மேனேஜரை அழைத்தால்.. அப்படியெல்லாம் ரூல்ஸே இல்லைங்க.. என்கிறார். வழக்கமான மூத்திர வாசனை இப்போது குறைந்திருக்கிறது. எல்லா ஸ்நாக்ஸ் கவுண்டரிலும் முன்பை விட பத்து ரூபாய் அதிகமாயிருக்கிறது. எனக்கென்னவோ வடபழனி ஃபோரம் மாலில் சத்யம் வந்துவிட்டால் இவர்கள் எல்லாம் டண்டணக்காத்தான் என்று தோன்றுகிறது. ஒரு ஓரத்தில் நல்ல குடிநீர் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதன் மேல் இலவச குடிநீர் என்று எழுதியிருப்ப்பதை பார்த்துவிட்டு அதைக் குடித்தால் மரியாதை குறைவு என்று நினைத்து 18 ரூபாய் பாட்டில் வாட்டரை 40 ரூபாய்க்கு வாங்கிச் செல்கிறார்கள். ம்ஹும் முதல்ல நாம திருந்தினாத்தான்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆட்டோவுக்கு பைனல் டேட் கொடுத்து நாளாகிவிட்டது. இன்னமும் எவனும் மீட்டர் போட்டு வண்டி ஓட்ட மாட்டேன்குறான். அப்படி போடாட்டா போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ண எவரும் முன் வருவதாய் தெரியவில்லை. என் கண் எதிரேவே ஒரு ஆட்டோ ஸ்டேண்டில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நின்றிருக்க, அவர் முன்னேயே சவாரியிடம் மீட்டர் போடாமல் பேரம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு ஆட்டோ ட்ரைவர். அவரை கூப்பிட்டு, பாருங்க சார்.. இதை தடுக்கத்தானே கவர்மெண்ட் சட்டம் போட்டிருக்காங்க அதை செயல்படுத்த வேண்டிய நீங்க இங்க இருக்கும் போதே இப்படி செய்தா கேட்கக்கூடாதா? என்றவனை ஏற இறங்க பார்த்தவர்.. உன் வேலையைப் பார்த்துட்டு போ என்றார். விளங்கிடும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என் ட்வீட்டிலிருந்து
ரசிகர்களின் ஆதரவினால் தான் எழுந்திருக்கிறேன் என்று அறிவித்ததன் பின்னணியில் ஏதேனும் குறியீடு இருக்கா? #டவுட்டு
ராத்தூக்கம் போச்சு.. அதுக்கு காரணம் காதலோ, காமமோன்னு நினைச்சா. சாரி.. நீங்க என் க்ரூப் கிடையாது.
- பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். ஹாரீஸின் பாடல்கள் வழக்கம் போல கேட்ட பாடல்களாய் அமைந்து ஹிட்டும் அடித்திருக்க, அனுஷ்கா, ஆர்யா, செல்வராகவன் கூட்டணி வேறு. அத்தனை எதிர்ப்பார்ப்பையும் தவிடு பொடியாக்கியிருக்கிறார் செல்வா. முதல் பாதியில் கூட ஒரளவுக்கு பரவாயில்லை. காதலை சொல்லி ஹீரோவிடம் அலையும் ஒருத்தியும், இன்னொரு உலகத்தில் பெண்ணிடம் காதல் சொல்லி அலையும் ஹீரோ.. இரண்டும் ஆர்யா, அனுஷ்கா. இரண்டு கதைகளையும் பேரலாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்படி ஒண்ணும் மோசமில்லைத்தான் என்ற தோன்றிய நினைப்பை சடுதியில் போட்டு மிதித்து, குழப்படித்து, இலக்கில்லாத திரைகக்தையால் எல்லார் உழைப்பும், பணமும் போனதுதான் மிச்சம். ஆங்காங்கே அருமையான VFXம், லட்டு லட்டாய் வாளிப்பான அனுஷ்கா, ஒரிரண்டு பாடல்களும், செல்வாவின் பலமான காமன் மேன் வசனங்களை இதில் காமன் விமன் வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தி கிளாப்ஸ் வாங்குமிடம், இதையெல்லாம் மீறி, மிக மோசமான பின்னணியிசை, பாயிண்ட் ஆஃப் வியூ இல்லாத திரைக்கதை, கதை நாயகன் நடிப்பு.. ம்ஹும்.. எப்ப நீங்க பேக் டூ ஃபார்ம் ஆவீங்க செல்வா?
- @@@@@@@@@@@@@@@@@@@@
- அடல்ட் கார்னர்
- Why is a man like a snowstorm? Because you don't know when he's coming, how many inches you'll get, or how long it'll stay.
Post a Comment
6 comments:
//உங்கள் சாப்பாட்டுக்கடை கட்டுரைகளை தொகுத்துத் தாருங்கள் புத்தகமாய் போடப் போகிறோம் என்று.//
உங்க பதிவுகள் படிக்க ஆரம்பிச்சப்போ உண்டான ஆசை இது. இப்போ நிறைவேறி இருக்கு. வாழ்த்துகள் ஜி
தொ.தொ, சாப்பாட்டுக்கடை, ஈ.கோ என்று உங்களுக்கு ஏறுமுகமாகவே இருக்கிறது போல... தொடர்ந்து அப்படி அமைய வாழ்த்துகள்...
முதல்ல நாம திருந்தினாத்தான் என்ற டேக்லைன் ஆட்டோ கட்டணங்களுக்கும் பொருந்தும் நிறைய பேர் ஏறுவதற்கு முன்பே எவ்வளவு என்று கேட்டுதான் ஏறுகிறார்கள்... அப்புறம் என்ன மீட்டர் மசுரு ?
Best of Luck for your EGO!. Best wishes for your TT.
கேபிள் சங்கர் திறந்திருக்கும் வெளியிட்டிருக்கும்) சாப்பாட்டு கடையில் அமோகமாக வியாபாரம் நடைபெற வாழ்த்துக்கள்
வசனம் எழுதிய ஈகோ படம் வெற்றியை நோக்கி போ(கோ)க வாழ்த்துக்கள்
Best of luck sir your all projekt 's
கொத்துப் பரோட்டா அருமை அண்ணா.
Post a Comment