ஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும் கிடைக்கவில்லை. அன்றைக்கு மட்டும் தமிழ்நாட்டில் 7000 காட்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். கிங் ஆப் ஓப்பனிங் என்பதை மீண்டும் மீண்டும் அஜித் நிருபித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் எஸ்கேப்பில் படம் பார்த்தேன். ஆர்யா - டாப்ஸியின் மொக்கை காதல் கதை படத்தின் ஓட்டத்திற்கு இடையூறு. அங்காங்கே விறுவிறுவென இருந்தாலும், ஆன்லைனில் ஒரு லட்சம் ட்ரான்ஸ்பர் செய்தாலும், ஒரு மில்லியன் ட்ரான்ஸ்பர் செய்தாலும் ஒரே நேரம் தான் ஆகும் என்பது கூட தெரியாமல் படமெடுப்பார்களா? போன்ற லாஜிக் கேள்விகளை கேட்காமல் பார்த்தால் நல்லது. அஜித் என்றொரு பிம்பம் மட்டுமில்லையென்றால்.. ஆரம்பம்.. முதலெழுத்து மிஸ் ஆகியிருக்கும்.
அழகுராஜா. ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ், சந்தானம், ஹிட்டுக்காக காத்திருக்கும் கார்த்தி காம்பினேஷன். அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்ததுவிட்டது. ம்ஹும். அடுத்த படத்தில் பார்ப்போம்.
பாண்டியநாடு. யாரும் எதிர்பாராமல் போட்டியில் குதித்த படம். ஆதலால் காதல் செய்வீரில் எழுந்த சுசீந்திரனின் படம். ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் விஷாலின் மார்கெட்டை நிலை நிறுத்துமா? என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் படம். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில், கேரக்டர்களை உருவாக்கிய விதத்தில், ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயினராய் கொண்டு வந்திருக்கிறார்கள். இமானின் இசையில் ரெண்டு பாடல்கள் கேட்கலாம். குறையாய் சில விஷயங்கள் இருந்தாலும், ஒர் சுவாரஸ்ய பொக்கேவாய் பாண்டிய நாடு அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள் சுசீந்திரன், விஷால்.
Post a Comment
6 comments:
Arrambam opening that too on working week day is very much appreciable ..
பாண்டியநாடுதான் Best
ஆனாலும் வசூலில் ஆரம்பம்தான் 1st
Thala than best...
அரம்பம் அருமை..
அழகுராஜா அம்போவா..
பாண்டிய நாடு பக்காவா...
முதல் நாள் நைட் ஷோ ஓசூர் மஞ்சுனாத் தியெட்டேறில் பார்த்தேன், பாதி ஸீட் தான் ஃபுல் ஆகி இருந்தது, 7000 தியெட்டெர் லயும் housefull னு சொல்றது கொஞ்சம் ஓவர் பாஸ் ....
Arrambam parkkalam.
Post a Comment