Thottal Thodarum

Dec 16, 2013

கொத்து பரோட்டா -16/12/13

தொட்டால் தொடரும்
வெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்,  அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்”  டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு  https://www.facebook.com/ThottalThodarum , https://twitter.com/thottalthodarum 
@@@@@@@@@@@@@@@@@@@@@@


கே.ஆர்.பி. மெட்ராஸ் பவன் சிவகுமார், கிருஷ்ணப்பிரபு ஆகியோருடன் சேர்ந்து www.jillmore.com எனும் சினிமா இணைய தளத்தை துவக்கியிருக்கிறார், உங்கள் ஆதரவை வேண்டி..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் எழுதிய லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவும், மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள், கொத்து பரோட்டா, கேபிளின் கதை ஆகிய புத்தகங்களை மொத்தமாய் வாங்குகிறவர்களுக்கு இந்த இணைய தளம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் டெபிட் கார்டு மூலமா ஒரு நாளைக்கு 1.5 லட்சம்தான் செலவு பண்ணனும்னு ஆர்.பி.ஐ சொல்லியிருக்காம்.150 ரூபாய்க்கே வழியக்காணோம்.வந்துட்டானுங்க
  • ஒவ்வொரு பிலிம் பெஸ்டிவல் வரும் போதும், சுஜாதாவின் பிலிமோஸ்தவ் சிறுகதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

  • Kalyana samayal sadham Feel good and bold attempt Arun Vaidyanathan lekha washington, Vijay Kumar Abinesh Elangovan Prasanna Rs

  • Friends who don't know the limit of taking me granted are all irritating.
    • பார்ட்டிகளில் போதையில் கலாய்க்கும்/படும் போது அடிக்கும் ஜோக்குகளை மட்டும் யாராவது போதையில்லாமல் தொகுத்தால் நன்றாக இருக்கும்

    • எனக்கென்னவோ குமுதம் சிண்டு முடிந்துவிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. பாவம் ரஹ்மான்.
    • அவள் அப்படித்தானில் ரஜினியை விட்டால் அந்த கேரக்டரில் நடிக்க யாரையும் யோசிக்கமுடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி

    • நம்பிக்கையோடு சுதந்தரத்தை கொடுத்தவர்களின் மேல் உள்ள இரண்டும் போகாத வண்ணம் நடந்து கொள்வதுதான் நட்புக்கு அழகு.

    • என்னத்தைத்தான் சாப்பிடறது..? இந்த குமுதம் இரா.மணிகண்டன் தொல்லை தாங்கலைப்பா

      • நாம் வியந்து பார்ப்பவர்களை மிக அருகில் பார்க்காமல் இருப்பது நம் வியப்பிற்கு உசிதம் #அவதானிப்பூஊஊஊ
        • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
        • நேற்று அகஸ்மாத்தாய் சன் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ் பார்த்தேன் சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. பல சமயங்களில் நம் குழந்தைகளால் நாம் பல்பு வாங்குவோமே அதை ஞாபகப்படுத்தியது. அப்பாகிட்ட நிறைய காசு வச்சிருக்காரு.. என்று இமான் சொல்ல ஆரம்பித்ததும்.. இல்ல இருக்காது. அம்மாகிட்டத்தான் இருக்குமென்று சொல்லிவிட்டு, சம்பந்தமேயில்லாமல் அப்பா எப்ப பார்த்தாலும் அம்மாக்கிட்ட போய் படுத்துப்பாரு என்று போட்டுக் கொடுத்துவிட்டு விகல்பமில்லாமல் அந்த அழகு குழந்தை சிரிக்க, தம்பதியினர் இருவரும் வழிந்த வழி இருக்கிறதே அது செம க்யூட். 
        • @@@@@@@@@@@@@@@@@@@@
        • ஆட்டோக்களில் மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஏதாவது காலனி வாசலில் உட்கார்ந்து கொண்டு, வேறு ஆட்டோக்களை வர விடாமல் செய்யும் கும்பலைத் தவிர, போலீஸ் கெடுபிடியால் மீட்டர் போட்டு ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கிறது. 200ம் முன்னூறும் கொடுத்து போய்க் கொண்டிருந்த இடத்திற்கு எல்லாம் வெறும் 120ரூபாய் ஆகும் போது அதன் பலனை அடைந்து கொண்டிருப்பவர்கள் லோக்கல் காலனிக்காரர்களையும் புறக்கணித்து மீட்டர் போடச் சொல்லி கட்டாயப்படுத்தினால் நிச்சயம் அரசின் துணையோடு ஆட்டோ கொள்ளையை வெல்லலாம்.
        • @@@@@@@@@@@@@@@@@@@@@@@
        • அம்மா உணவகத்தில் சமீபத்தில் மீண்டும் சாப்பிட வேண்டியிருந்தது. இம்முறை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவக வளாகத்தில்.ஆரம்பித்த போது என்ன குவாலிட்டி, குவாண்டிட்டி இருந்தததோ அப்படியே இருந்தது.  ஆனால் க்யூ அநியாயம். டோக்கன் வாங்குவதிலிருந்து சாப்பாடு பெறும் வரை. டோக்கன் க்யூவில் நின்று வாங்கினால் சாப்பாடு வாங்க நிற்க முடியாமல் சாப்பாடு வாங்காமலேயே போகும் வயதானவர்கள் அதிகம். அது மட்டுமில்லாமல் ஆஸ்பத்திரியில் உள்ள கடை நிலை ஊழியர்களுக்கு க்யூ ஏதுமில்லாமல் நேரடியாய் உள்ளே போய் எடுத்துக் கொள்கிறார்கள் இதனால் வேலை இன்னும் நேரமாகிறது. இதை அரசின் கவனத்திற்கு எடுத்துப் போனால் நன்றாக இருக்கும்
        • @@@@@@@@@@@@@@@@@@@@
          சமீபத்தில் என் மாமனாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டின்  அருகில் உள்ள ஒர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். அது ஒரு தனியார் மருத்துவமனை. சிறப்பான சேவையைத்தான் அளித்தார்கள். ஆஞ்சியோ செய்யலாமா வேண்டாமா என்ற குழப்ப நிலையின் போது அவர்கள் மாமனாரை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அங்கே எல்லாவிதமான ட்ரீட்மெண்டுக்கும் வசதிகள் இருக்கிறது என்றார்கள். அரசு மருத்துவமனையிலா? என்று என் மனைவி யோசித்த போது எனக்கு ஏற்கனவே நண்பர் டாக்டர் புருனோ மூலமாய் அங்கே கிடைக்கும் வசதிகள் என்னன்ன என்று தெரிந்திருந்ததால் அங்கேயே போகலாமென்று சொன்னேன். அட்மிட் பண்ண நாளிலிருந்து பத்து நாட்களில் டாக்டர்களின் அன்பான கவனிப்பு, உடனடியாய் நோய்க்கு ஏற்ற சிகிச்சைகள் என சிறப்பாகவே நடந்தது. புல் பாடி செக்கப்பே செய்துவிட்டார்கள். என்ன உடன் கவனித்துக் கொள்பவர்களுக்கான தங்குமிடம், அவர்களின் பொருட்களின் பாதுகாப்பு, பின்பு வழக்கம் போல, பால், வாட்ச்மேன், மருந்து கொடுக்குமிடம், லிப்ட்மேன், ஆயாக்கள் ஆகியோரின் கட்டிங் போன்ற இம்சைகளை தவிர எல்லாம் சுகமே. மாமனார் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.
        • @@@@@@@@@@@@@@@@@@@@@@
        • அடல்ட் கார்னர்
        • Why are hurricanes normally named after women? When they come they're wild and wet, but when they go they take your house and car with them
  • கேபிள் சங்கர்

Post a Comment

12 comments:

Unknown said...



நீங்கள் தொட்டால் தொடர்வது மட்டுமல்ல, துலங்கும் என்பதே உண்மை! வெற்றி உறுதி! புலவன் வாக்கு பொய்யாகாது!

Unknown said...

கேபிள் சங்கர் அவர்களின் படம் வெற்றி பெற வலையுலகம் சார்பாக வாழ்த்துகிறோம்

rajamelaiyur said...

படம் கண்டிப்பாக வெற்றி அடையும் ... வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

படித்து பாருங்கள்



இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )

Mari Raja said...

best of luck...

Desingh said...

Congratulation sir... All the best... Don't fear..

Desingh said...

பயம் இல்லாம வேலை தொடருங்கள்.. ஒரு நல்ல கதைக்காக எதிர்பார்த்துகொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு ஒரு விருந்தாக இந்த படம் அமைய என் வாழ்த்துக்கள்...

ananthu said...

All the best ji ..

கார்த்திகேயன் said...

படம் வெற்றி அடைய வாழ்த்துகள்

www.writerkarthikeyan.blogspot.in

கார்த்திகேயன் said...

உங்கள் திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துகள்

புதிய பதிவர்
https://writerkarthikeyan.blogspot.in

'பரிவை' சே.குமார் said...

தொட்டால் தொடரும் -இல் ஆரம்பிக்கும் உங்கள் திரையுலக வாழ்க்கை வெற்றியுடன் தொடங்க வாழ்த்துக்கள் அண்ணா...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

சென்னை - வலைப்பதிவர் திருவிழாவின் போதே உங்கள் படத்தின் விளம்பரம் வந்திருந்ததைப் பார்த்தேன். இன்றைய தமிழ்-இந்து நாளிதழில் படித்தேன். உங்கள் திரை மற்றும் எழுத்து அனுபவமும், சரியான திட்டமிடலும் வெற்றியைத் தரும், வாழ்த்துகள். நேரமிரு்க்கும்போது எனது வலைப்பக்கம் வரவேற்கிறேன் -http://valarumkavithai.blogspot.in/