Thottal Thodarum

Dec 30, 2013

கொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானைக்கூட்டம், விழா, அடல்ட் கார்னர், கங்காரு

இணைய உலகில் 2006 முதல் இயங்கி வந்தாலும், வலைப்பதிவராய் தீவிரமாய் ஆரம்பித்தது 2008லிருந்துதான். அப்போதிலிருந்து என் வாழ்கையில் நோ லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களாகிய நீங்கள். இதில் 2010 ஆண்டு என் வாழ்க்கையில் ஒர் முக்கியமான வருடம் அவ்வருடத்தில் தான் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான  லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் வெளியானது. அதன் பிறகு  இந்த நான்கு வருடங்களில் சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள்,  கேபிளின் கதை, என அடுத்தடுத்து புத்தகங்கள் வெளியாயின. எல்லா புத்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு அபாரம். முதல் புத்தகமே போட்ட ஆயிரம் காப்பி விற்பது என்பது கனவான விஷயம். அக்கனவும் பலித்தது. அடுத்த வெளிவந்த சினிமா வியாபாரம் புத்தகம் என் வாழ்க்கையில் இன்னொரு கதவை திறந்துவிட்ட புத்தகம். கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, இரண்டாம் பதிப்பாய் மதி நிலையம் மூலம் வெளிவந்து இன்றும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்ற புத்தகம். இப்படி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற புத்தகங்களில் புதிய வெளியீடாக மதி நிலையம் “சாப்பாட்டுக்கடை” புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு கொடுத்த அதே ஆதரவை இப்புத்தகத்திற்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.. உங்கள் முன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


2013 என் வாழ்வில் மறக்க முடியாத வருடம். என் திரையுலக கனவுகளை அடைய வழிகாட்டிய வருடம். கலகலப்பில் வேலை செய்த பின் இயக்குனர் பத்ரியுடன் “தில்லு முல்லு” அதே வருடத்தில் வசனகர்த்தாவாக சக்திவேலின் “ஈகோ”  இதோ இப்போது இயக்குனராய் “தொட்டால் தொடரும்” உட்காரவைத்திருக்கும் வருடம். இதற்கு காரணம் வருடம் மட்டுமல்ல.. என்னை இந்நிலைக்கு உயர்த்தி அழகு பார்க்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பத்ரி, சக்திவேல், என் இனிய தயாரிப்பாளர் துவார். சந்திரசேகர் அவர்களின் அன்பு தான் முக்கிய காரணம். அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இந்நிலையில் இல்லை. என் முந்தைய முயற்சிகளுக்கு அளித்த ஆதரவை தொட்டால் தொடரும் படத்திற்கும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, வாய்ப்பளித்த அவர்களுக்கும் இறைவனுக்கும் என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுநிசிக்கதைகள் -4
எனக்கு இரவு நேர ரோந்து போலீஸ்காரர்களுக்கும் ஏதோ ஒர் உறவு இருக்கிறது போல. எல்லோரும் எந்த நிலையில் இருந்தாலும் என்னுடம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். நடுநிசிக்கதைகள் எழுதும் அளவிற்கு. சமீபத்தில் அப்படித்தான் வழக்கம் போல நானும், கே.ஆர்.பியும். ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் செக் செய்தவர் எங்களை அனுப்பி வைக்க மனசில்லாமல் பேச ஆரம்பித்தார். பேச்சு இன்றைய இளைஞர்களைப் பற்றியும், அரசைப் பற்றியும் போனது. தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னா.. பாரை பத்து மணி வரைக்கும் திறந்து வைக்கக்கூடாது என்றார்.  பெண் போலீஸைப் பற்றி பேச்சு வந்தது. சினிமாவுல விட அதிகமான அசிங்கம் எங்க டிபார்ட்மெண்டுலதான் நடக்குது என்றார். புதியதாய் வரும் பெண் போலீஸ்காரர்களின் வெற்றி, அவர்கள் துரிதத்தில் அடையும் பதவிகளுக்கு பொறாமை பட்டார். நானெல்லாம் இத்தனை வருஷ சர்வீஸுல எங்கயோ போக வேண்டியவன். என்ன நான் பொம்பளையில்லை என்று வருத்தப்பட்டார். எல்லா இடத்திலும் பெண்கள் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. திறமையால், உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்றேன். சிறிது நேரம் மெளனமாய் இருந்தார். பெண் போலீஸார்கள் காவலுக்கு ரோட்டில் நிற்கும் நேரங்களில் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, மாதவிடாய் கால நிலைகளை கடக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சொன்ன போது “33 சதவிகிதம்  கேட்கிறாங்க இல்லை. படட்டும்” என்றார். ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆம் ஆத்மி கட்சியின் துவக்கம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஊழல் என்று சொல்லி விலக்கிய காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சியமைப்பது பற்றி ப.ஜ.கவும் மற்ற கட்சிகளும், பொது மக்களில்  சிலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு விமர்சனங்களையும் தாண்டி அவர்களால் மக்களுக்காக மக்களின் தேவைக்கான ஆட்சியை கொடுக்க முயற்சிப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். அதை நம்புவோம். நம்பித்தானே  ஆகணும். நம்பிக்கைத்தான் வாழ்க்கை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்றைய செய்திகளில், சோஷியல் நெட்வொர்க்கில் பரபரப்பாக பேசப்பட்ட கடலூர் கற்பழிப்பு விவகாரம் குறித்து இன்றைய தந்தி, மற்றும் ஹிந்துவில் எந்த செய்தியும் வரவேயில்லை. ஆனால் டெல்லியில் கற்பழிப்பு சம்பவத்தில் இறந்த பெண்ணின் முதலாண்டு மறைவு தின கூட்டத்தைப் பற்றி செய்தி இருந்தது. கற்பழிச்சாக் கூட அகில இந்திய ரீதியில் கற்பழிப்பு நடந்தாத்தான் நியூஸ் போடுவாங்களா? இங்கே பொங்குனவங்க எல்லாம் எங்க போனாங்க..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கங்காரு
நண்பர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விழாவிற்கு அழைத்திருந்தார். சிறப்பு விருந்தினராய் என் பட தயாரிப்பாளர் துவார். சந்திரசேகரும் கலந்து கொள்ளவிருந்ததால் விழாவிற்கு ஆஜர். பாடகர் சீனிவாஸின் முழு முதலாக தமிழ் சினிமா இசையமைப்பாளராய் அறிமுகமாகிறார். ஏற்கனவே ஏய் நீ அழகா இருக்கே படத்தில் ஒர் பாடலுக்கு இசையமைப்பாளராகவும், The Train என்கிறா  மலையாள படத்தின் மூலம் இசையமைப்பாளராய் வலம் வந்துவிட்டாலும் தமிழில் இதுதான் முதல் முழு படம். இரண்டு பாடல்களையும், ட்ரைலரையும் ஒளிபரப்பினார்கள். சுவேதா மேனனின் குரலில் வந்த பாடலும், தத்துவார்த்த குத்து பாடல் ஒன்றும் ஒளிபரப்பினார்கள், பிபின் எனும் இளம் பாடகர் ஒருவரையும், சினிவாஸின்  மகளும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள். பிபின் என்னா குரலடா உனக்கு.. சீனிவாஸ் அவனைப் பற்றி சொல்லும் போது பிபினின் குரல் அப்படியே நேரடியாய் இதயத்தை சென்றடையும் என்றார். அவர் ஒழுக்கு நிலவே பாடலை பாடிய போது சுற்றியிருந்தவர்களுக்கு அப்படித்தான் தோன்றியது. சமீப காலங்களில் என் காரில் தொடர்ந்து கேட்கப்படும் பாடல்களை லிஸ்டிலிருந்து தூக்கிவிட்டு கங்காரு அதில் உட்கார்ந்திருக்கிறது. நல்ல மெலடியை ரசிப்பவர்களுக்கு கங்காருவின் பாடல்கள் ஹாண்டிங்தான். வாழ்த்துகள் சுரேஷ் காமாட்சி, ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு. ஸ்ரீனிவாஸின் மலையாள பட பாடல் அல்கா அஜித்தின் குரலில்.. வாவ்... வாவ்.. வாட் ஏ மெலடி. இப்பாடல் கங்காரு படத்தின் பாடலுக்கு ஒர் சேம்பிள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சுமார் 190 படங்கள் தமிழில் மட்டுமே வெளியாகியிருக்கின்றது இவ்வருடம். அதிகமான படங்கள் வெளியாவது ஒர் விதத்தில் சந்தோஷமாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் தியேட்டர்களின் எண்ணிக்கையும், படங்கள் ஓடும் காலம் குறைந்து கொண்டிருப்பதும் ஆபத்தான ஒர் விஷயம். ஒர் சூப்பர் ஹிட் பட வாழ்நாளே மூன்று வாரங்கள் என்றாகிவிட்டிருக்கின்ற நேரத்தில் சுமார் படம் என்ற ஒர் ஸ்லாட்டே இல்லாமல் போய் விட்ட அவல நிலையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது. அதுவும் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு படங்கள் வெளியாகி அடுத்த வெள்ளிக்குள் காணாமல் போய் கொண்டிருக்கிறது. எத்தனை படங்களின் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுத்தார்கள் என்று கேட்பீர்களானால் பதில் கிடைப்பது கடினம். ஏனென்றால் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களில் பலருக்கு திரையுலகின் வெளிச்சம் மட்டுமே கண்னுக்கு தெரிந்து உள்நுழைகிறார்கள். பின்னால் இருக்கும் இருண்ட பகுதி அவர்களுக்கு தெரிவதேயில்லை. படங்களின் வெளியீட்டை கொஞ்சம் வரைமுறை படுத்தாமல் போனால் நிச்சயம் எதிர்கால தமிழ் சினிமாவிற்கு கஷ்டம் தான் என்று தோன்றுகிறது. இந்த ஆண்டு என் பட வேலைகளால் நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான் என்றாலும் பார்த்ததில் எனக்கு பிடித்த படங்களின் வரிசை. சில படங்கள் இந்த வருடம் வெளியானதாகக் கூட இருக்கலாம். இன்னும் நிறைய படங்கள் சட்டென ஞாபகம் வரவில்லை. இதில் சில ஆங்கில படங்களை மீண்டும் பார்த்த வகையில் லிஸ்டில் வந்திருக்கும். உலகப் படங்களின் லிஸ்ட் பிற்பாடு தர முயற்சிக்கிறேன்.
தமிழில்:  1) விஸ்வரூபம் 2) சூது கவ்வும் 3) எதிர்நீச்சல் 4) சென்னையில் ஒர் நாள் 5) ஆதலால் காதல் செய்வீர் 6) ஓநாயும் ஆட்டுக்குட்டியும் 7) பாண்டியநாடு 8) மூடர் கூடம் 9) விடியும் முன் 10) என்றென்றும் புன்னகை 11) ஹரிதாஸ்
தெலுங்கில் : Seethamma vakutlo sirumalli poovu, Swami ra..ra, Gunde Jaari Gallanthayyinde,
ஹிந்தி : ஸ்பெஷல் 26, Kai po che, Go Goa Gone, Lootere, Bhaag Milka Bhaag, Ship of Thesus, Lunch Box, B.A.Pass,
ஆங்கிலம் : zero Dark City, Argo, Hangover3, Ankur Arora Murder case, Inglorious Basterds, Mad Money, Django Unchained, The Conjuring,
மலையாளம் : Amen, 22 female kottayam, Ustaad hotel, Shutter, Annaiyum Rasoolum,
வேற்று மொழி படங்கள் : 3 கன்யா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
டப்பிங்கிற்கான எடிட்டிங் முடிந்து நாளை முதல் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறேன். பாடலுக்கான லொக்கேஷன் தேடல் வேறு ஒரு பக்கம் ஆரம்பமாக இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மணிரத்னம் படைப்புக்கள்: ஒர் உரையாடல் பரத்வாஜ் ரங்கனின் ஆங்கில புத்தத்தின் தமிழ் வர்ஷன் படித்துக் கொண்டிருக்கிறேன். வாவ்.. இண்ட்ரஸ்டிங்.

குறும்படத்திற்கான கதையை வைத்துக் கொண்டு திரைப்படமாக்க முயற்சிப்பது எப்போது ஒர்கவுட் ஆகாது என்பதன் நிருபணம் விழா
  • தமிழில் மீண்டும் ஃபீல் குட் படங்களுக்கான காலம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது.
    • நாம் எடுக்கும் ஒர் சின்ன முடிவு வாழ்வின் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் - வில்ஸ்மித்
      • சூடான பொங்கல் - கத்திரிக்காய் கொத்ஸு.. ம்ம்ம்ம். டிவைன்.
        • மற்றவர்களை சந்தோஷப்படுத்த முயலும் பெரும்பாலானவர்கள் தனிமையில் தான் இருப்பார்கள். வில்ஸ்மித்
        • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
        • மும்பை காமாத்திபுரா விபச்சாரிகள் ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிய கட்டுரை. சமீபத்தில் படித்தது.. நீங்கள் படிக்க
        • @@@@@@@@@@@@@@@@@
        மதயானைக்கூட்டம்

      • பாண்டிய நாட்டிற்கு பிறகு மீண்டுமொரு மதுரை பேஸ்டு கம்மாலப் பொணச் சாவு வீட்டு சீனோடு தொடக்கம்.கள்ளப் பரம்பரை குடும்பத்தலைவர் ஒருவரின் இறப்பைப் பற்றி ஆடல் பாடல் குழுவினர் கதையாய் விவரிக்க சொல்லிய முறை ஆரம்பத்தில் அட போட வைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலாய் போய்விட்டது. லைவ்வான மேக்கிங். கள்ளப் பரம்பரை சாவூவீட்டு சாங்கியங்களின் டீடெயில், செய்முறை ப்ரச்சனைகள், விஜியின் அருமையான நடிப்பு போன்ற சுவாரஸ்யங்களை மீறி திருப்பங்கள் இல்லாத பார்த்து சலித்த பழிவாங்கல், ஜாதி வெறி, ஜாதி பெருமை, ஒட்டாத ஆங்கிலப்பட பின்னணியிசை, இரண்டாம் பாதியில் தொய்ந்துவிடும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து படத்தை டாக்குமெண்டரிதனமாக்கிவிட்டது  என்றே சொல்ல வேண்டும். 21 வருஷங்களுக்கு முன் தேவர்மகனில் கமல் தேவரூட்டு ஆளுகளையெல்லாம் அவரவர் வீட்டுப்  பிள்ளைகளை போய் படிக்க வையுங்கடா என்று சொன்னதை இன்னமும் செய்யாமல் வளர்ந்திருக்கும் கூட்டத்தைப் பற்றிய படம்.
      • @@@@@@@@@@@@@@@@@@@@
      • விழா

      • முந்தைய படம் வெளிவந்த இரண்டாவது நாளில் வெளியான இன்னொரு சாவூ வீட்டுப் படம். அப்படத்தில் சாவு வீட்டிலிருந்து ஆரம்பித்து சீரியசாய் போனது. இதில் சாவூவீட்டில் மேளமடிபவனுக்கும், அங்கே துக்க பாட்டு பாடும் கதாநாயகிக்குமான காதலைப் பற்றிய படம். முதல் இருபது நிமிடங்கள் சாவு வீட்டில் நடக்கும் அமளி துமளிகளை கொஞ்சம் சுவாரஸ்யமாய் சொல்லி நம்மை உட்கார வைத்த இயக்குனர் அதன் பின் காதலர்களுக்கோ, அல்லது அவர்களின் காதலுக்கோ பெரியதாய் ஏதும் பிரச்சனை என்று எதையும் வைக்காமல்  ஆங்காங்கே பழைய பாரதிராஜ படம் போல லாலாலா என்று பிஜிஎம்மில் ஹம்மிங்கோடு காதல் ஷாட்டுகளாய் வலம் வருகிறார். இடையில் வரும் வில்லிப் பாட்டியோட பேரன் காளி வந்ததும் லேசாய் சூடு பிடித்த கதையில் திருப்பங்களோ, அல்லது சுவாரஸ்ய அம்சமோ ஏதும் இல்லாததால் விழா என்று பெயர் வைத்திருந்தாலும் சவ சவவென ஆளில்லாத தனிககாட்டில் ந்டப்பது போல உள்ளது. க்ளைமாக்ஸில் வரும் சின்ன ட்விஸ்ட் படத்தை காப்பாற்றும் என்று எண்ணியிருந்தால்.. ம்ஹும்.. குறும்படத்திலிருந்து திரைப்படத்துக்கு வரும் போது இன்னும் கொஞ்சம் கண்டெண்டில் கவனம் செலுத்தியிருந்தால் விழா குதுகலமாய் இருந்திருக்கும்
      • @@@@@@@@@@@@@@@@@@
      • அடல்ட் கார்னர்

      • Q. What's the difference between a 'Spice Girls' video and a porn video? A. The porn video has better music!

        • கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Anonymous said...

thottal thodarum ennaiku release aaguthu cable anna.

www.writerkarthikeyan.blogspot.in

Unknown said...

//நேற்றைய செய்திகளில், சோஷியல் நெட்வொர்க்கில் பரபரப்பாக பேசப்பட்ட கடலூர் கற்பழிப்பு விவகாரம் குறித்து இன்றைய தந்தி, மற்றும் ஹிந்துவில் எந்த செய்தியும் வரவேயில்லை.//
கடலூர் கற்பழிப்பு???? நீங்கள் காரைக்கால் கற்பழிப்பு பற்றி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்
அது பற்றிய சுட்டிகள் கீழே
http://karikalan-karuthu.blogspot.com/2013/12/karaikal-gangrape.html

http://tamilnews24x7.info/?p=4274

http://arulgreen.blogspot.com/2013/12/Karaikal-double-gang-rape.html

http://www.rtl.fr/actualites/info/international/article/inde-une-jeune-femme-victime-d-un-double-viol-collectif-7768313443

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=73247

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/article5519419.ece?homepage=true

இந்த மட்டும் போதுமா ???

ஆனால் ஏனோ டில்லியில் நடக்கும் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் மக்கள் கூட, நம் தமிழர் ஒருவருக்கு அதே பிரச்சினை என்றால் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை

Shan said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...