Thottal Thodarum

Jan 20, 2014

கொத்து பரோட்டா - 20/01/14 -நடு நிசிக் கதைகள், Lucia, Dedh Ishqiya, புத்தக கண்காட்சி.

நடு நிசிக் கதைகள் -5
கட்டங்கடைசியாய் நானும் என் ஹீரோ தமனும் படம் பற்றி பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். வழக்கம் போல உதயம் தியேட்டர் அருகில் போலீஸ் செக்கிங். இளைஞரான போலீஸ் ஒருவர் அமைதியாய் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பேப்பர்களையும், லைசென்சையும் கேட்டார். கொடுத்தேன். தண்ணியடித்திருக்கிறோமா இல்லையா? என்பதை கண்டுபிடிக்க மரியாதையாய் குனிந்து பேசுவதைப் போல  வாடை பிடித்தபடி பேசினார். லைசென்சையும் வண்டி ஆர்.சியையும்  விளக்குக்கு அருகில் கொண்டு போய் ஒர் நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். திரும்ப பேப்பரை கொடுக்க வந்த போது “என்ன நோட் பண்றீங்க?” என்று கேட்டேன். உங்க வண்டி நம்பர், அட்ரஸ், எல்லாம் என்றபடி உங்க செல் நம்பர் சொல்லுங்க என்றார். நான் எதுக்கு? என்றேன். :”இல்ல வாங்க சொல்லியிருக்காங்க” “அதாங்க எதுக்கு கொடுக்கணும்?. நீங்க பேப்பர் கேட்டீங்க கொடுத்திட்டேன். அட்ரஸ் நோட் பண்ணிட்டீங்க அது கூட ஓகே..  லைசென்ஸ் ஓகே.. ஆனா போன் நம்பர்ங்கிறது அதுவும் செல் நம்பர்ங்கிறது ப்ரைவசியான ஒரு விஷயம். அதை எப்படி நீங்க எல்லா பேப்பரும் சரியா இருக்கிற ஆளுகிட்ட கேட்பீங்க. நான் என் செல் நம்பரை தரமாட்டேன். அதோட நானும் பொதுவெளியில் இயங்கும் ஒர் எழுத்தாளன். சினிமாக்காரன். காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. எஸ்.ஐ. வந்தார். “என்ன ப்ரச்சனை என்பதைப் போல பார்த்தார்” இளம் அதிகாரி விஷயத்தை சொல்ல, “சார்.. எங்க உயரதிகாரி வாங்க சொல்லியிருக்காங்க. வாங்குறோம்.” என்றார். அதெப்படி சார்.. என்று ஆரம்பித்து இளம் அதிகாரியிடம் கேட்டதையே கேட்க, நம்பர் கொடுக்கிறதினால என்னா நடந்திரப் போவுது?” என்றார். இந்த ரிஜிஸ்தர்ல இருக்கிற போன் நம்பரை யாரும் மிஸ் யூஸ் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? “அதெப்படி சார்.. நடக்கும்? “நம்மூர்ல ப்ரைவஸிக்கு என்ன அர்த்தம்னே தெரியாது சார்..நாளைக்கு உங்க ஸ்டேஷன்லேர்ந்தே யாராவது எடுத்து டேட்டாவா வித்துருவாங்க” என்றதும். சார்.. உங்களுக்கு கொடுக்க இஷ்டமில்லைன்னா விடுங்க...என்ன நாளைக்கு அதிகாரிங்க வந்து கேட்கும் போது ரெண்டு ஸ்டார் போட்டிருக்கிறியே உன்னால ஒரு போன் நம்பர் வாங்க முடியலையான்னு கேட்பாங்க. ஆனால் நீங்க நினைக்கிறா மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. என்றவர். நீங்க கேட்குற கேள்வி கரெக்ட் தான். பத்திரிக்கையில எழுதுறேன்னு சொல்லுறீங்க.. இதைப் பத்தி எழுதி ப்ரஸ் மீட்டும் போது கேளுங்க. என்றார்.  கடைசியாய் கிளம்பும் போது இளம் அதிகாரி “எங்கேயிருந்து வர்றீங்க? என்ன விஷயமாய் போனீங்க? ” என்றார் விடாப்பிடியாய். “காலையில வடபழனி போனேன் என்று கடுப்பாய் ஆரம்பித்தேன். “இல்லை சார்.. இப்ப எங்கிருந்து வர்றீங்க அத சொன்னாப் போதும்” என்றார் பொறுமையாய். சொன்னேன். நிச்சயம் நம்பர் கேட்கும் விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று தளத்தின் முகவரியை சொல்லிவிட்டு கிளம்பினேன். இத்தனை கேள்விகளுக்கும் மிக மரியாதையாய், பொறுமையாய் பதில் அளித்த போலீஸ் அதிகாரிகளுக்கு என் வந்தனங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@



ராயல்டி
இணையமெங்கும் எங்கு பார்த்தாலும் எழுத்தாளர்கள் தங்களுக்கு கிடைக்காத ராயல்டியைப் பற்றிய புலம்பல்களும், அதற்கு சரியாக பதில் சொல்லாத பதிப்பாளர்களை பற்றியும் தாறுமாறாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நான் அவன் கட்சி, நீ இவன் கட்சியென சம்பந்தப்படாதவர்களின் சண்டை வேறு. புத்தக கண்காட்சி வரை பரபரப்பாக இருக்கும். நானும் எட்டு புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் என்கிற முறையில் ராயல்டியைப் பற்றி சொல்லாவிட்டால் நம்மை ரவுடியாய் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் இந்த பத்தி. என் முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை வெளியிட்ட குகனின் நாகரத்னா பதிப்பகம் இது வரை அவர் விற்ற புத்தகங்களின் கணக்கு கொடுத்து எனக்கான ராயல்டியை சரியாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே போல கேபிளின் கதைக்கும். முதலில் கிழக்கின் மூலமாய் வெளிவந்த சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு கிழக்கிலிருந்தும், பின்பு அதே புத்தகத்தை மதி நிலையம் மூலமாய் வெளியிடப்பட்டு இன்று வரை தொடர்ந்து ராயல்டியை வழங்கித்தான் வருகிறார்கள். ஒரு பக்கம் ராயல்டி கொடுக்காத பதிப்பகத்தார் இருக்க, என் வரையில் அதை சரியாய் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
Lucia
சென்னையில் படம் வெளியான போது தொட்டால் தொடரும் ஷூட்டிங். அப்புறம் அங்கே தேடி இங்கே தேடி ஒரு வழியாய் பார்த்துவிட்டேன். ரிவிட்டிங் ஸ்கிரிப்ட். கன்னட சினிமாவில் வெளிவந்திருக்கும் க்ரவுட் பண்டிங் படம். சுமார் ஆயிரம் பேர்களுக்கு மேல் பணம் ஸ்பான்ஸர் செய்து வந்திருக்கும் படம். ஆனால் படத்தின் குவாலிட்டி அட்டகாசம். ஹலூசினேசன், லூசிட் இல்யூசன், போன்ற குழப்பமான கதைக் களன் தான். ஆனால் அதனுள் அருமையான ரெண்டு காதல் கதைகளை அமைத்து, கொஞ்சம் விக்ரமன், கொஞ்சம் நோலன் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். சொல்லப் போனால் பர்பெக்ட் மிக்ஸிங்கில் திரைக்கதை அமைந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி என்ன சொன்னாலும் அதன் சுவாரஸ்யத்தை கெடுக்குமென்பதால் தயவு செய்து நீங்களே படம் பார்த்து சந்தோஷப்பட்டுக்கங்க... ஒரு வேளை தமிழே எனக்கு தகராறு இதில கன்னடம் வேறயா? என்றும், சப்டைட்டிலை பார்த்தா படம் பார்க்க முடியலை, படம் பார்த்தா சப்டைட்டிலை பார்க்க முடியலைன்னு புலம்புற ஆளா? அப்ப ஒண்ணு பண்ணுங்க.. இந்த படம் தமிழ்லேயும், தெலுங்குலேயும் விரைவில் ரீமேக் செய்ய போறாரு நண்பர் சி.வி.குமார். சொல்ப  வெயிட் மாடி.
@@@@@@@@@@@@@@@@@@@@
Dedh Ishqiya
2010ல் இஷ்க்கியாவில் நம் மனதை கொள்ளையடித்த கல்லுஜானும், பப்பனுடன் மீண்டும். இம்முறை ஒரு கற்பனை மெகமூதாபாத் எனும் நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒர் ஊர். அதில் ஒர் பேகம். கவிதைப் போட்டி நடத்தி, அதன் மூலம் தன் கணவரையும் மெகமூதாபாத்தின் நிஜாமாக தேர்ந்தெடுக்க  முடிவு  செய்யும் பேகம் அதிரடி அழகி மாதுரி. அவரின் நிழலாய் வரும் வெண்ணெய் அழகி ஹூமா குரேஷி.(ம்ஹும்....) கண்ணாலேயே காதலையும், கவிதையையும் சுலபமாய் வெளிப்படுத்தும் கல்லுஜான் நஸ்ருதீன். அப்பாப்பா என்னா ஒரு நடிப்புடா.. சாமி. பரபர, துறு துறு, அப்பாவி பப்பனான அர்ஷத் வர்சி. எப்படியாவது மாதுரியை கவிதை கொண்டு சாய்த்து மெகமூதாபாத்தின் நிஜாமாய் வளைய வெறி கொண்டு அலையும், லோக்கல் எம்.எல்.ஏ, விஜய் ராஸ். பப்பனின் தாதா, ஒர் அனுபவம். நம்ம ஜான் விஜய் கூட ரெண்டு மூணு ஷாட் நடித்திருக்கிறார். அற்புதமான காஸ்டிங். அருமையான நடன அமைப்பு. அதிலும் மாதுரி தனியாய் ப்ராக்டீஸ் செய்யும் அந்த நடன காட்சி வாவ்...வாவ்... ஆர்ட் டிபார்ட்மெண்ட். மற்றும் சேதுவின் ஒளிப்பதிவுக்கு இன்னொமொரு வாவ். விஷால் பரத்வாஜின் இசை. படம் நெடுக உறுத்தாமல் ஓடும் நகைச்சுவை. என் பெயர் ... இட்டால்வி என்று தன்னை அழைக்கச் சொல்லி விஜய் ராசை இம்சை செய்யும் கவிஞரிடம் அவரின் பெயர் காரணம் கேட்க, அது இடாலியின் மருவு எனும் போது சிரிக்காமல் இருக்க முடியாது. அதே போல... பப்பனின் தாதாவிடமிருந்து தப்பித்து ஓடும் போது, தாதாவின் அடியாள் “ என்ன இப்படி இவனை தப்பிக்க விட்டுட்டீங்க” என்று கேட்க, தாதா..”ஜோக்கர் செத்துட்டான்னா பேட்மேன் என்ன பண்ணுவான்?” என்று கேட்க, அதற்கு அடியாள் “அப்ப நீங்க ஜோக்கரா?” என்றதும் தாதா முறைப்பார். புரிந்து கொண்ட அடியாள் “பேட்மேனை பேட்ஸ்மேன்” என்பான். விஜய் ராஸ் டீமை பப்பனும், கல்லுவும் ஆளுக்கு ஒர் துப்பாக்கியை வைத்துக் கொண்டு விடிய விடிய அரைத் தூக்கத்தில் கன் பாய்ண்டில் வைக்கும் காட்சி, ஹெட் விழுந்தா உன் தலை, டெயில் விழுந்தா உன் லுல்லா என்று இரண்டு பக்கமும் டெயில் வைத்து பெட் கட்டும் காட்சியென சுவாரஸ்யத்திற்கு, நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. அருமையான கவிதைகள், அழகு பெண்கள், அதன் பின்னிருக்கும் துரோகங்கள் என Dedh Ishqia  டோண்ட் மிஸ் இட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
போலீஸ் செக்கிங் என்கிற பெயரில் செல்போன் நம்பரெல்லாம் கேட்கிறார்கள். விட்டால் சின்னவீட்டு நம்பரெல்லாம் கேட்பார்கள் போல... இது நியாயமா?

கவிதை, ஆர்ட், பழமை, காதல், காமம், துரோகம் அனைத்தையும் ரசிக்க #Dedh Ishqiya

    • சூப்பர் சிங்கர் ஓட்டுக்காக தந்தியில் ஒரு பக்க விளம்பரம். ம்ஹும்.. பணம் விளையாடுது.
  • உன்னதங்களோடு தன்னை கம்பேர் செய்து கொண்டு அந்த நிலை வரை ஏதும் முயற்சிக்கவே மாட்டேன் என்பது குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் முயற்சி.
  • வயசான காலத்துல எதுக்கு இப்படி சக்களத்தி சண்டைன்னே புரியலை.. நான் யாரைச் சொல்றேன்னு தரூரா புரியும்னு நினைக்கிறேன்.
  • உடல் பருமன் குறைக்க வழி சொல்லும் புத்தகமே ஒல்லியாகத்தான் இருக்கிறது
  • சினிமாவுக்கும், தெருச்சண்டைக்கும் கிடைக்கும் வரவேற்பு சமூக கவலைகளுக்கு கிடைப்பதில்லை.#FacebookLikes
  • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
  • புத்தக கண்காட்சி
  • கடந்த ரெண்டு மூன்று நாட்களாய் போக முடியவில்லை. காணும் பொங்கலன்று வெறிச்சோடி போயிருந்தது.பதிப்பாளர்கள் முகத்தில் அவ்வளவாய் சந்தோஷமில்லை. நிழல் திருநாவுக்கரசு சார் ஒர் புத்தக வெளியீட்டுக்கு அழைத்தார். சுரேஷ்வரன் எழுதிய அகம் புறம் என்கிற நூலை நான் வெளியிட்டேன். கொஞ்சம் நேரம் டிஸ்கவரியில் உட்கார்ந்திருந்தேன். ஜாக்கி வந்திருந்தார். ரெண்டு பேரையும் படிக்கும் வாசகர் வந்திருந்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஜாக்கி தன் டிவி சேனல் வேலையைப் பற்றியும், நான் என் ப்ட வேலைகளைப் பற்றியும் பேசிவிட்டு, வந்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கு. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள போகணும்.
  • @@@@@@@@@@@@@@@@@@@@
  • அடல்ட் கார்னர்
  • Beer vs. Pussy . . .
    1. Beer is always wet. Pussy needs a little work.
    - One point to BEER
    2. Warm beer tastes awful.
    - One point to PUSSY
    3. A really cold beer is satisfying .
    - One point to BEER
    4. If after taking a swig of your favorite beer you find a hair between your teeth, you may
    vomit.
    - One point to PUSSY
    5. Ten beers in one night and you cannot drive home. Ten PUSSIES in one night and you do not want to drive anywhere.
    - One point to PUSSY
    6. If you have a lot of beer in a public place, your reputation may
    suffer. If you eat any PUSSY in public, you become a legend.
    - One point to PUSSY
    7. If a cop stops you and you smell of beer you may get arrested. If you smell of PUSSY he may buy you a beer.
    - One point to PUSSY
    8. You normally do not find old beer.
    - One point to BEER
    9. Too much beer and you will think you see flying saucers. Too much PUSSY and you will think you have seen God.
    - One point to PUSSY
    10. In most countries there is a tax on beer.
    - One point to PUSSY
    11. If you have another beer the first one never gets pissed off
    - One point to BEER
    12. You can always be sure if you are the first one to open a bottle or can. You cannot always be sure that you are the first one to taste PUSSY.
    - One point to BEER
    13.. If you shake up a beer it will get all agitated but it eventually
    settles down.
    - One point to BEER
    14. You always know how much beer is going to cost
    - One point to BEER
    15. Beer does not have a mother
    - One point to BEER
    16. Beer never expects to be hugged for half an hour after you drink it
    - One point to BEER
    17. You'll never find beer wearing pads or tampons
    - One point to BEER
    18. Sex is a good form of exercise
    - One point to PUSSY
    19. Beer will never make you feel less of a man or your abilities as a man
    - One point to BEER
    20. Beer does not make lame excuses when you want to drink it
    - One point to BEER
    21. What beer will dress up in a sexy nurse outfit?
    - One point to PUSSY
    22. PUSSY doesn't give you a hangover
    - One point to PUSSY
    23. A beer will let you try other beers but PUSSY will never let you try another
    - One point to BEER
    24. Beer doesn't ask for your payslip at the end of the month
    - One point to BEER
    25. PUSSY gives you unnecessar y
    expenses,chocolates,flowers,phone calls,dates,thus depletes funds to buy beer.
    - One point to BEER
    26. With a license beer can be sold legally
    - One point to BEER
    27. Beer only has one sickness (hang over)
    - One point to BEER
    28. If you do PUSSY very well chances are you'll get recommendations and you won't have to pay a cent for it
    - One point to PUSSY
    30. PUSSY does not have an expiry date(i wonder how true this is because i've seen some that have gone far beyond their use by date)
    - One point to PUSSY  FINAL SCORE: BEER 17 PUSSY 13
    That's it! The matter is settled, the clear winner is: BEER
    PS: If you are a woman and at this point feel angry, degraded or
    discriminated against, just remember that Beer would experience none of those
    feelings, let alone express them. - An extra point for BEER

    • கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

தனிமரம் said...

கொத்துப்பரோட்டோ சுவாரசியம்.

கார்த்திகேயன் said...

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கியப் புத்தகங்களின் பட்டியலை பதிவிட்டால் நன்றாக இருக்கும் சங்கர்...

www.writerkarthikeyan.blogspot.in

MURUGESH said...

where is the point no : 29 ?

Unknown said...

Sir unga TT first lokk superb all the best waiting for the film