எண்டர் கவிதைகள் -22

ம்.. என்றாய்

 ம் என்றேன்

ம் மிகவும் பிடிக்குமா? 

ம்ம்ம்ம் என்றேன்

ஏன்?

உன் ஒவ்வொரு ம்க்கும் 

ஒவ்வொரு அர்த்தமென்றேன்

ம்ஹும்..

ம் என்றேன்

கோபமாய்,

சிணுங்கலாய்,

செல்லமாய்,

சலிப்பாய்

முத்தமிடும் போதும்

இறுக்கமாய் அணைக்கும் போதும்

அணைத்த பின் நடக்கும் கூடலின் போதும்

கூடல் முடிந்து பேச்சாய் பதில் சொல்லும் போதும்

உன் ஒவ்வொரு ‘ம்”மும் ஒவ்வொரு அர்த்தமென்றேன்

“ம்... அப்படியா” என்றாய்

இந்த ம் எதை ஆரம்பிக்கும் என்று 

எனக்கு தெரியும்

  • கேபிள் சங்கர்

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.