கொத்து பரோட்டா -27/01/14 - கோலி சோடா, தொட்டால் தொடரும், நடு நிசிக்கதைகள், மணிரத்னம் படைப்புகள், A Separation, Serbian Film, மல்ட்டிப்ளெஸ்கள்.
தொட்டால் தொடரும் தினசரி விளம்பரம் நேற்று வெளியானதிலிருந்து வந்த போன்கால்களை வைத்து பார்க்கும் போது, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதையும் உணர முடிந்தது. ஒவ்வொரு போன் காலிலும், அவர்கள் குரலில் தெரிந்த சந்தோஷம், என்னுள் மேலும் உற்சாகத்தையும் பயத்தையும் கொடுத்தது. நிச்சயம் எல்லாம் வல்ல இறைவனின் துணையோடும், உங்கள் அன்பின் துணையோடு சிறப்பாய் வர உழைக்கிறேன்.
மணிரத்னம் படைப்புகள் புத்தகம்
மணிரத்னம் என் ஆதர்ச இயக்குனர். இவரின் முதல் படமான பல்லவி அனுபல்லவியிலிருந்து கடல் வரை அத்துனை படங்களையும் விடாமல் பார்த்தவன். என்பதுகளில் தமிழ் சினிமாவை வேறு ஒரு நிலைக்கும் கொண்டு சென்ற கலைஞன். அவரின் மேலிருக்கும் ஆச்சர்யம் எனக்கு இன்றும் அகலவேயில்லை. ஆங்கிலத்தில் வந்த போதே இரவல் வாங்கி படித்துவிட்டேன். மீண்டும் தமிழில் கிழக்கின் மூலமாய் வந்ததும் படிக்க ஆவலாகிவிட்டது. நாம் ரசித்த கலைஞனின் படங்களைப் பற்றி, நம்மைப் போன்ற ஆதர்சத்துடன் ரசித்த ஒருவரின் கேள்விகளுக்கு, படைத்த கலைஞனின் பார்வையை பதிலாய் படிக்க மிகச் சுவாரஸ்யமாய் இருந்தது. நிறைய விஷயங்களைப் பற்றி ரசித்தவனுக்கு உள்ள புரிதலுக்கும், படைத்தவனுக்கு இருக்கும் புரிதலுக்குமான வித்யாசத்தை பல இடங்களில் மணி சார்.. தெளிவாக சொல்லி, ஒத்துக் கொண்டிருக்கிறார். ஓரிரு இடங்களில் அவரின் பட தோல்விகளுக்கான காரணங்களைப் பற்றி அவர் பேசியிருப்பதும் சுவாரஸ்யம். சில தகவல்கள் மட்டும் விதயாசமாய் இருந்தது. குறிப்பாய் அலைபாயுதேவில் ஆர்.செல்வராஜுடன் மணி சார் இணைந்து கதை, திரைக்கதை செய்திருப்பார். அவருடன் வேலை செய்ய காரணம் என்ன என்று கேட்டிருக்கும் கேள்விக்கு “அவரின் திறமை” என்பது போல பதிலளித்திருப்பார். ஆனால் உண்மையில் அலைபாயுதேவின் மூலக்கதை என்று பார்த்தால் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் செல்வராஜின் கதையில் வெளிவந்த தூங்காத கண்ணின்று ஒன்று என்ற கதையின் மூலமும், அலைபாயுதேவின் மூலமும் ஒன்று. அதனால் தான் அவர் கதையாசிரியரான ஆர்.செல்வராஜுடன் வேலை செய்திருக்கிறார். ஏன் அதை சொல்ல விழையாமல் வேறெதையோ சொல்கிறார் என்பது தான் புரியவில்லை. என்னைப் போன்ற தீவிர மணிரத்னம் ரசிகர்கள் என்றில்லாமல், ஒவ்வொரு சினிமா ரசிகனும், படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம். டோண்ட் மிஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோலி சோடா
மூன்று மாதங்களுக்கு முன் இயக்குனர் விஜய் மில்டன் அழைத்திருந்தார். ஃபீரியாய் இருந்தால் அவரின் அலுவலகத்திற்கு வர முடியுமா? என்று கேட்க, வருகிறேன் என்றேன். என்ன சொல்லப் போகிறார்? என்று யோசித்துக் கொண்டிருந்தவனிடம், நம்ம படம் டப்பிங் முடிஞ்சு வந்திருக்கு ஒரு வாட்டி பார்த்து உங்க கருத்த சொல்லுங்க என்று சொல்லிவிட்டு, டிவியில் படத்தைத்தை ஓடவிட்டார். ஆரம்பித்த பத்திருபது நிமிடங்களில் படத்தினுள் நுழைந்துவிட்டேன். படு சுவாரஸ்யமாக சென்றது. கிட்டத்தட்ட அந்த இளம் சிறார்களின் வாழ்கையையும், அவர்களின் காதல், ஏக்கம், கனவு எல்லாவற்றுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். குறிப்பாய் மார்கெட் தாதாவின் ரைட் ஹேண்டாய் வரும் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனின் கேரக்டரும், அவரின் நடிப்பும் அபாரம். அதே போல ஆச்சியாய் வரும் சுஜாதாவின் கேரக்டர். நச்சு நச்சுன்னு வரும் பாண்டியராஜின் வசனம். இம்ப்ரசிவாய் சென்றது. இரண்டாம் பாதியில் ஒரே ஷாட்டில் வரும் சண்டைக் காட்சியும், அதில் நடித்திருந்தவர்கள், எடுத்த ஒளிப்பதிவாளர் இருவரையும் பாராட்டியே தீர வேண்டும். அவ்வளவு கச்சிதம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆங்காங்கே சினிமாட்டிக்காக போனாலும், ஒர் பக்கா ஆக்ஷன் எண்டர்டெயினரை இம்மாதிரியான சிறுவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாய் கொடுத்த இயக்குனர் விஜய்மில்டனுக்கு பாராட்டுக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
திறக்கப்படாத மல்ட்டிப்ளெக்ஸுகள்
சென்னையில் மட்டும் சுமார் இருபதுக்கும் மேலான மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று கேட்டால் ஆளாளுக்கு ஒர் காரணம் சொல்கிறார்கள். சென்னை வடபழனியில் கமலா தியேட்டருக்கு எதிரில் அமைந்திருக்கும் ஃபோரம் மாலில் சத்யமின் பத்து திரையரங்குகள் தயாராகி இன்னமும் திறக்கப்படாமலேயே இருப்பதற்கு காரணம், தியேட்டர் திறந்தால் வடபழனி ட்ராபிக் ஸ்தம்பித்துவிடும் என்ற காரணத்தினால் லைசென்ஸ் தரவில்லை என்கிறார்கள். அப்படி ஆகிவிடும் என்று கட்டிடம் கட்ட பர்மிஷன் வாங்கும் போதே தெரியாதா? இப்போது மாலின் பின் பக்கமாய் 100 அடி ரோட்டில் வண்டிகளை வெளியேற இட ஆர்ஜிதம் செய்து கொண்டிருப்பதாய் சொல்கிறார்கள். அதே ப்ரச்சனைதான் வேளச்சேரி போனிக்ஸ் மாலுக்கும் என்கிறார்கள். அது தவிர, வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் வெறும் தியேட்டரை மட்டுமே நம்பி ஒர் மால் திறந்திருக்கிறார்கள். அதில் பிவிஆரின் ஐந்து திரையரங்குகள் இருப்பதாய் சொல்கிறார்கள். அவர்களும் பர்மிஷனுக்காக காத்திருப்பதாய் சொல்கிறார்கள். சின்ன படங்களோ, பெரிய படங்களோ, திரையரங்கு கிடைக்காமல் அல்லாடும் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு இவைகள் வந்தால் கொஞ்சமாகவாவது மூச்சு விடுவார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
A Separation -Nadar -Simin
ரொம்ப வருஷமாய் பார்க்க நினைத்து டவுன்லோடிட்டிருந்தேன். பட வேலைகள் காரணமாய் பார்க்க முடியவில்லை. கிடைத்த கேப்பில் தொடர்ந்து படம் பார்க்க டைம் கிடைக்க, பார்த்து விட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன் சிறந்த வெளிநாட்டு படத்திற்கு ஆஸ்கர் வாங்கிய படம். ரொம்பவும் சிம்பிளான கதைதான். கணவன் மனைவிக்குமிடையே கருத்து வேற்றுமை. அவர்களுக்கு 11 வயதில் ஒர் பெண். கணவனின் அப்பாவிற்கு மறதி நோய் வந்து தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருப்பதால் மனைவி அழைக்கும் ஊருக்கு தன்னால் வர முடியாது என்று சொன்னதால்தான் விவாகரத்து வழக்கு நடை பெறுகிறது. மனைவி வீட்டை விட்டு செல்ல, அப்பாவை பார்த்துக் கொள்வதற்காக ஒர் வேலைக்காரப் பெண்ணை பிக்ஸ் செய்கிறார்கள். அவள் தன் சிறு பெண்ணுடன் வந்து பார்த்துக் கொள்ள, ஒர் நாள் அவள் பெரியவரை கட்டிப் போட்டுவிட்டு, வெளியே சென்று வருகிறாள். தன் அப்பாவை அந்நிலையில் பார்த்த கதாநாயகனுக்கு கோபம் வந்து வேலைக்காரப் பெண்ணை திட்டி, அவள் தன் ட்ராயரில் இருந்த பணத்தை காணவில்லை. திருடிவிட்டாள் என்று சொல்லி, வெளியே அனுப்புகிறான். வேலைக்காரி தான் நல்லவள், திருடவில்லையென்றும், தன்னை நிருபிக்க, மன்றாட, அவளின் தோளைப் பிடித்து தள்ளிவிடுகிறான். திடீரென தள்ளிவிடப்படவள் வயிற்றில் வளரும் கரு கலைந்து போய்விட, ப்ரச்சனையாகிறது. போலீஸ் கேஸ் ஆகி, கதாநாயகனை சிறையில் வைக்கும் படி நேர, மனைவி பெயில் கொடுத்து கூட்டி வந்து மீண்டும் சேரவிருக்கும் நிலையில் அவர்களுக்குள் ப்ரச்சனை வெடிக்கிறது. பின்பு என்ன ஆனது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அருமையான எடிட்டிங், மல்ட்டி கேமரா செட்டப் போல ஷூட் செய்த விதம். வேலைக்காரியாய் நடித்த பெண்ணின் அற்புதமான நடிப்பு என பார்த்த ரெண்டு மணி நேரமும், நம்மை கட்டிப் போட்ட வசனங்கள். வாவ்.. ஆஸ்கர் வாங்கியதில் ஆச்சர்யமேதுமில்லை..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
A Serbian Film
நண்பர் ஒருவர் கொடுத்த லிங்கின் மூலமாய் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே படத்தைப் பற்றி கொஞ்சம் படித்துவிட்டுத்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் படம் பார்த்ததன் விளைவு அடுத்த நாள் பூராவும் மனம் அதிர்ந்த நிலை. மிலோ ரிடையர்ட் ஆன போர்ன் ஸ்டார். அவன் தன் மனைவி, மகனுடன் சந்தோஷமாய் இருந்தாலும், பணத்தேவையின் காரணமாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் அவளுடய கோ ஸ்டார் ஒருத்தியின் மூலமாய் வால்டிமிர் என்பவன் ஆர்ட் பிலிமெடுக்கிறான். அவர் ஒரு இண்டிபெண்டண்ட் போர்னோகிராபர் என்று சொல்லி, நல்ல பணம் தருவான் என்று அறிமுகப்படுத்துகி்றாள். பணத்துக்காக ஒத்துக் கொண்ட மிலோவை முதல் நாள் ஒர் ஆர்பனேஜுக்கு அழைத்து செல்கிறார்கள். வால்டிமிர் அவனுடய விரைப்புத்தன்மைக்காகவே அவனை காஸ்டிங் செய்ததாக சொல்லி பாராட்டி, ஒர் பதினைந்து வயது மைனர் பெண்ணுடன் உறவாடச் சொல்கிறான். அதற்கு மறுத்து, அடுத்த நாள் அப்பெண்ணை காணச் செல்கையில் அவன் மயக்கமுற்று அவன் வீட்டில் இருக்கிறான். அவனுடய மனைவி,மகனை காணவில்லை. அவர்களைப் பற்றியோ, அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி ஞாபகமில்லாமல், அலைகிறான். இதன் நடுவில் அவனுக்கு கலந்து கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியத்தினான் அவனுடய லுல்லா விரைத்து தெறித்துக் கொண்டிருக்க, மீண்டும் அந்த அர்பனேஜுக்கு வந்து தேடுகிறான். அதன் பின் நடக்கும் காட்சிகள் எல்லாம் கண் கொண்டு பார்க்க திட மனது வேண்டும். நியூ பார்ன் செக்ஸ் என்று சுடச் சுட கருவறையிலிருந்து வெளியே எடுத்த குழந்தையை ரேப் செய்யும் காட்சி உட்பட பல வக்கிரம் பிடித்த காட்சிகள். இதையெல்லாம் மீறி படத்தில் நல்ல மேக்கிங், அண்ட் ஆர்.ஆர். இருப்பதை தவிர்க்க முடியாமல் ரசித்தேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரெண்டொரு நாளுக்கு முன் ஹிந்துவில் சுதீஷ் காமத் சின்ன பட்ஜெட் க்ளாஸ் படங்கள் ஏன் சென்னையில் ரிலீஸ் ஆவதில்லை என்று இரண்டு படங்களைப் பற்றி எழுதி விநியோகஸ்தர்களிடம் கேட்டிருந்தார். அதற்கு விநியோகஸ்தர்கள். இங்கே அம்மாதிரி படத்தை விளம்பரம் எல்லாம் செய்து வெளியிட்டால் முப்பது ரூபாய் கிடைக்கும். ஆனால் மற்ற நகரங்களில் நூறு ரூபாய் கிடைக்கும் அதனால் தான் ரிலீஸ் செய்வதில்லை என்றார். சின்ன படங்கள், வெகு ஜன ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க நியாயமான டிக்கெட் விலை இருந்தால் முப்பது ரூபாய் கிடைத்தாலும், நாட்பட ஓட்டி சம்பாதிக்கலாமே.. எனக்கென்னவோ எல்லா விநியோகஸ்தர்களும் விலை பத்தலை, பத்தலைன்னு பெங்களூர், மும்பை போல 300-400க்கு டிக்கெட் விற்க அடி போடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுநிசிக்கதைகள் -6
நண்பர் ஒருவர் சரக்கடித்துவிட்டு வண்டியில் போயிருக்கிறார். வழக்கம் போல போலீஸ் செக்கிங். டிடிக்காக பிடித்திருக்கிறார்கள். ப்ரீத் அனலைசரில் ஊத சொல்லியிருக்கிறார்கள். யார் யாரோ ஊதினதில் எல்லாம் ஊத முடியாது என்றிருக்கிறார். புதியதாய் ட்யூப் கொடுத்து ஊத சொல்லியிருக்கிறார். ஊதியவுடன் அவர் ஆர்வமாய் “எவ்வளவு சார் வந்திருக்கு?” என்று கேட்க, இன்ஸ்பெக்டர் 78 % என்றிருக்கிறார். நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. சார் டுபாக்கூர் மிஷின் சார் இது தப்பா காட்டுது. சரி மினிமம் எவ்வளவு இருந்தா குடிச்சிட்டு வண்டி ஓட்டலாம்? என மேல் கேள்வி கேட்க, அது சரியாய் தெரியலை.. 20 ஓ என்னவோ.. அதெப்படி டுபாக்கூர்னு சொல்றீங்க? என்று கேட்டிருக்கிறார். பின்ன என்ன சார்.. நான் வாங்கினது குவாட்டர். அதிலேயே அதிகபட்ச ஆல்கஹால் பர்செண்டேஜ் 48ன்னுதான் போட்டிருக்கான். நான் குவாட்டர்ல பாதிதான் அதுவும் தண்ணி சேர்த்து அடிச்சிருக்கேன் அப்ப எவ்வளவு காட்டணும்? 24தானே? எப்படி 78ன்னு காட்டும்? என்றவுடன் கொஞ்சம் கிலியடித்த முகத்துடனே.. நல்ல கேள்வி நானும் என்னா? எப்படின்னு விசாரிக்கிறேன். இப்ப வண்டிய விட்டுட்டு நாளைக்கு காலையில பைன் கட்டிட்டு வண்டிய எடுத்துக்கங்க.. என்று சாவியை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க, சார்.. வண்டி சாவியை கொடுங்க.. என்றிருக்கிறார் நண்பர். “அதெல்லாம் முடியதுங்க.. சரக்கடிச்சிட்டு வண்டி ஓட்டுறதே தப்பு இதில அதட்டலா வேற கேட்குறீங்களா?” என்றதும் நண்பர்.. “சார்.. வண்டியை நீங்களே வச்சிக்கங்க.. சீட் டிக்கில குவாட்டர்ல பாதி இருக்கு. அது வேணும்” என்றிருக்கிறார். போலீஸ் “ஙே”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மியூசிக் வீடியோக்கள் ஒழிந்துவிட்டது அதுவும் தமிழில் கிடையவே கிடையாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது சமீபத்தில் பார்த்த வீடியோ.. செம்ம.. இன்பரசிவான.. மேக்கிங் அண்ட் பாடல்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வாய்ப்புங்கிறது நல்லதாவும் இருக்கலாம் கெட்டதாவும் இருக்கலாம் ஆனால் அது கிடைச்ச உடனேத்தான் தெரியும்.
- http://t.co/eNcCf2okjC கமலை எதிர்த்தார்கள் இப்போ செயல்படுத்த ஆரம்பிச்சாச்சு. இது போன்ற பல விஷயங்களை கமல் தான் ஆரம்பிச்சிருக்காரு
Comments
நிச்சயம் சிறப்பாக வரும்,நீங்கள் இந்த இடத்திற்கு சாதரணமாக வரவில்லை,நிறையக் கஷ்டங்களுக்குப் பிறகு வந்திருக்கீங்க,அதற்குண்டான பலன் நிச்சயமாக இருக்கும்...
உங்கள் படம் மிகப்பெரிய வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்...
www.writerkarthikeyan.blogspot.in
What's the smallest hotel in the world?
a pussy, because you have to leave the bags outside.]]
The original joke is...
The bag (it is not bags) MUST be left outside (it can also hang!) in order to "fulfill" the job!
DEAR SIR,I AM A REGULAR VISITOR FOR YOUR BLOG. THOTTAL THODARUM----UNGAL VETRI THODARM...