Thottal Thodarum

Feb 25, 2014

கேட்டால் கிடைக்கும் - சப்வே

இரவு பதினோரு மணியிருக்கும். கிட்டத்தட்ட கடை அடைக்கும் நேரம் நிச்சயம் விருகம்பாக்கம் சப்வேக்காரன் என்னைப் போன்ற ஒர் கஸ்டமரை எதிர்பார்த்திருக்க மாட்டான். ஒரே ஒரு ஆள் மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப, மெல்ல மெனுவை பார்வையிட்டேன். ரோஸ்டட் சிக்கன் சப்பை ஆர்டர் செய்தேன். சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும், கோக், டயட் கோக், சாப்ட் டிரிங்க் வகையறாக்கள், இப்போது புதியதாய் இட்டாலியன் ஐஸ்கிரீம் வேறு. சிரித்துக் கொண்டேன்

Feb 17, 2014

கொத்து பரோட்டா - 17/02/14- கதிர்வேலனின் காதல், The Wolf Of The Wall Street, பாலு மகேந்திரா, நாவல்கள், திரை விமர்சனம்

  • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர்
தொட்டால் தொடரும் படத்தின் பாடல் காட்சிக்கான லொக்கேஷன் பார்க்க காரைக்குடி சென்றிருந்த நேரத்தில்தான் மொபைலில் செய்தி வந்தது. பாலுமகேந்திரா உடல் நலக்குறைவென. அச்செய்தி படித்த அரை மணி நேரத்தில் அவரின் மரணச் செய்தி வந்தது. தன் படைப்புகளின் மூலம் நம்மைக் கவர்ந்த ஒர் மாபெரும் கலைஞனின் இழப்பு அவரது ரசிகனாகிய எனக்கு கொஞ்சம் வருத்தத்தையே தந்தது. . பல விழாக்களில் அவர் கலந்து கொண்டு பேசும் போது நானும் விழாவின் ஆடியன்ஸாய் உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு ஒர் விழாவில் அவருடன் நான் மேடையில். பெருமையாய் இருந்தது. விழாவின் முடிவில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். கிளம்பும் போது புத்தகங்கள் எல்லாம் எழுதியிருக்கேன்னு சொன்னீங்களே அதை கொடுங்க என்று கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் பின் நான் அவரை சந்திக்கவேயில்லை. அவரது கனவுப் பட்டறையில் பயிலும் மாணவர்களுக்கு சிறுகதைகளை படித்து அதன் சாரம்சத்தை எழுதும் பயிற்சிக்கு பல புத்தகங்களை படிக்க சொல்லி கொடுப்பாராம். அப்படி ஒரு கதையாய் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை கொடுத்து அதிலிருக்கும் கதையை  எழுதச் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப் பட்டதிலிருந்து பெரும் சந்தோஷம் என்னை ஆக்கிரமித்தது. என் அலுவலகத்திலிருந்து சில நூறு மீட்டர்களில் இருக்கும் அவரது அலுவலகத்தை நான் சென்று பார்த்ததேயில்லை.  பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@

Feb 10, 2014

கொத்து பரோட்டா -10/02/14 - பால்யகால சகி, புலிவால், நடுநிசிக் கதைகள், கேட்டால் கிடைக்கும், பீனிக்ஸ் மால்

  • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர்
நடுநிசிக் கதைகள்-7
நைட் ஷோ முடித்துவிட்டு, சிஜடி நகர் வழியாய் வந்து கொண்டிருந்த போது வழக்கம் போல போலீஸ் மறித்தார். “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுவிட்டு அசுவரஸ்யமாய் எதிர் திசை தெருவில் தெரிந்த நடமாட்டத்தை நோட்டம் விட்டார்.

”படம் பார்த்துட்டு வர்றேன் சார்.”

“டிக்கெட் இருக்கா?”

“இல்லை”

“அதெப்படி டிக்கெட் இல்லாம?”

“நெட் புக்கிங் சார்”

”அப்படின்னா..” என்று கேட்டுவிட்டு எங்கே தனக்கு தெரியவில்லை என்று காட்டிவிட்டால் மரியாதை குறைவாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் “நெட்  ஓகே..ஓகே”.. சரி.. என்ன படம்?” எனக்கு எரிச்சலாய் இருந்தது. நான் பார்த்துவிட்டு வந்த இந்திப்படத்தின் பேரை சொன்னால் இவருக்கு தெரியுமா? எந்த ஷோ எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று தெரியுமா? 

“இந்தி படம் சார்.”

”என்ன படம்?”

“சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசாரிக்கிறது ரொம்பவே ஓவர் சார்.. பேப்பர்ஸ் பாருங்க, லைசென்ஸ் கேளுங்க, சரி.. “

“அதிகாரிங்க விசாரிக்க சொல்லியிருக்காங்க சார். படம் பேர் சொல்லுங்க..”

நான் சிரித்தபடி “ தே இஷ்கியா”

அவர் முகத்தில் தெரிந்த ரியாக்‌ஷனை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அனுபவிக்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 9, 2014

பண்ணையாரும் பத்மினியும்

  • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர்

குறும்படமாய் பார்த்த போது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்த படம். இவ்வளவு அருமையாய் மெல்லிய உணர்வுகளை குறும்படமாய் ஆக்கியிருக்கிறாரே.. இவர் நிச்சயம் நல்ல இயக்குனராய் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம். அதையே பெரிய படமாய் எடுக்க இருக்கிறார் எனும் போது கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. இதை ஒரு முறை விஜய் சேதுபதியிடம் கூட கூறினேன். இல்ல பாஸு.. ஸ்கிரிப்டை ரொம்ப மெச்சூர்டா பண்ணியிருக்காரு என்றார் நம்பிக்கையுடன்.  படம் பார்த்த போது நான் இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையும், விஜய் சேதுபதி வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை என்பது சந்தோஷமாய் இருந்தது.

குறும்படம் பார்க்காதவர்களுக்கு இந்த டைட்டிலே ஆர்வத்தை ஏற்படுத்தும். வயதான பண்ணையாருக்கும், அவரது மனைவிக்குமிடையே ஆன காதல். பண்ணையாரின் பத்மினி கார் மீதான அப்சஷன் தான் படமே. ரத்தமும் சதையுமாய் உடனிருக்கும் மனைவியிடம் கொண்ட காதலை நம்முள் எவ்வளவு இயல்பாக கடத்த முடிகிறதோ அதே இயல்புடன் காரின் மீதான காதலையும் கடத்தியிருப்பது அபாரம். அதற்கு முழு க்ரெடிட் இயக்குனரையே சாரும். நடிகர்களிடமிருந்து பண்பட்ட நடிப்பை, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் கொண்டு அன்பை, காதலை, நெகிழ்ச்சியை, உன்னதமான மெல்லிய உணர்வுகளை கொண்டு வந்திருப்பது அவ்வள்வு சுலபமான ஒன்றல்ல. ஜெயபிரகாஷும், துளசியும் வாழ்ந்திருக்கிறார்கள். என்ன தான் கம்பேரிசனாய் “எனக்கு டபுள்ஸ் ஓட்ட தெரியாது” என்று வெகுளித்தனமாய் சொல்லி ஸ்கோர் செய்த தேனி முருகனை மிஞ்சவில்லை என்றாலும் க்ளாஸ். அதே போல பீடை கேரக்டரில் வரும் பாலமுருகன். ஆங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவைக்கு பொறுப்பேற்று அதை சரியாய் செய்திருக்கிறார்

விஜய்சேதுபதிக்கு படத்தைப் பொறுத்த வரை சப்போர்ட்டிங் கேரக்டர்தான். எங்கே பண்ணையார் கார் கற்றுக் கொண்டால் தன் வேலை பறிபோய்விடுமோ என்ற பதட்டத்தில் பத்து நாள் கழித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் போதும், பண்ணையாருக்கு ஈடான காதலை காரின் மீது வைத்துக் கொண்டு அலையும் காட்சிகளிலும், பண்ணையாரின் மகள் வரும் போதெல்லாம் எங்கே கார் போய்விடுமோ என்று பதைக்கும் காட்சியிலும், துளசி பண்ணையார் எங்கே வருத்தப் படுவாரோ என்று விஜய்சேதுபதியின் மூலமாய் ஆறுதல் சொல்லும் காட்சியில் குரலடைத்து, கண்கலங்குவது தெரியாமல் பேசும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பினால் ஹீரோவாகிவிடுகிறார். 

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் உனக்கான பிறந்தேனே இனிமை. பின்னணியிசையில் அனுபவசாலியாய் தெரிகிறார். ஸ்ரீகர் ப்ரசாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தோடு இயல்பாய் பயணிக்கிறது. பத்து நிமிட குறும்படத்தை இரண்டரை மணி நேரப் படமாய், ஐஸ்வர்யா காதல், பண்ணையாருக்கும், அவரது மனைவி துளசிக்குமான நெகிழ்ச்சியான காட்சிகள்  என ஓவர் செண்டிமெண்ட் காட்சிகளாய்   நீட்டி முழக்காமல் கிரிஸ்பாய் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தைத் தாண்டி பொறுமை காத்தால் நல்ல ஃபீல் குட் படம் பார்த்த அனுபவம் நிச்சயம். வாழ்த்துகள் அருண்குமார்.
  • கேபிள் சங்கர்

Feb 6, 2014

புதிய கொள்ளை உஷார்.

  • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர்
முன்பெல்லாம் வீட்டிற்கு லெட்டர் மூலம் உங்களுகு பரிக்சு விழுந்திருக்கிறது இவ்வளவு ரூபாய் பணம் கட்டினால் பல லட்ச ரூபாய் பரிசென்றெல்லாம் அனுப்பி, பணத்தை சுருட்டுவார்கள். பின்னர் டெக்னாலஜி அதிகமாக, அதிகமாக, அதனை வைத்து பணத்தை சுருட்டும் முறை டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு ஏற்ப இன்னும் ஸ்மார்ட் ஆக ஆரம்பித்தது. மெயில் மூலம் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது, என்று சொல்லி, அக்கவுண்ட் நம்பரையெல்லாம் அனுப்பச் சொல்லி, நம் அக்கவுண்டில் உள்ள அமெளண்டையெல்லாம் லபக்கிக் கொண்டுப்  போய்விடும் சோகம் நடந்தது ஒருபுறம் என்றால், அதன் பிற்காலத்தில் பெண் சபலத்தால் போன் மூலம் பேசி, பேங்கில் பணம் டெபாசிட் செய்து பணம் இழந்தவர்கள் பலர். இப்போது புதிய முறையாய் இன்று வந்த போன்கால் ஒன்றை பற்றி உங்களிடம் சொல்லி எச்சரிக்கையாய் இருக்க சொல்ல வேண்டியதால் தான் இந்த பதிவு.


சாப்பாட்டுக்கடை - Grill Box

 பார்பக்யூ நேஷனுக்கு போட்டியாய் அதே ஏரியாவில் ஒர் அவர்களின் சிக்னேசர் ஸ்டைலில் உணவு என விளம்பரம் பார்த்ததும் ஆர்வமானது. விலை வேறு அவர்களோடு கம்பேர் செய்து பார்த்த போது கொஞ்சம் சகாயமாய் இருந்தது வேறு பசியை கிண்டியது. ராகவய்யா ரோட்டில் எங்கே என்று யோசித்துக் கொண்டிருந்த போது சில வருடங்களாய் அங்கே நடந்து கொண்டிருந்த ஒர் கிரில் பேஸ்ட் ஓட்டலைத்தான் இவர்கள் மாற்றியமைத்து ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.