Thottal Thodarum

Feb 6, 2014

புதிய கொள்ளை உஷார்.

  • 80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர்
முன்பெல்லாம் வீட்டிற்கு லெட்டர் மூலம் உங்களுகு பரிக்சு விழுந்திருக்கிறது இவ்வளவு ரூபாய் பணம் கட்டினால் பல லட்ச ரூபாய் பரிசென்றெல்லாம் அனுப்பி, பணத்தை சுருட்டுவார்கள். பின்னர் டெக்னாலஜி அதிகமாக, அதிகமாக, அதனை வைத்து பணத்தை சுருட்டும் முறை டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு ஏற்ப இன்னும் ஸ்மார்ட் ஆக ஆரம்பித்தது. மெயில் மூலம் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது, என்று சொல்லி, அக்கவுண்ட் நம்பரையெல்லாம் அனுப்பச் சொல்லி, நம் அக்கவுண்டில் உள்ள அமெளண்டையெல்லாம் லபக்கிக் கொண்டுப்  போய்விடும் சோகம் நடந்தது ஒருபுறம் என்றால், அதன் பிற்காலத்தில் பெண் சபலத்தால் போன் மூலம் பேசி, பேங்கில் பணம் டெபாசிட் செய்து பணம் இழந்தவர்கள் பலர். இப்போது புதிய முறையாய் இன்று வந்த போன்கால் ஒன்றை பற்றி உங்களிடம் சொல்லி எச்சரிக்கையாய் இருக்க சொல்ல வேண்டியதால் தான் இந்த பதிவு.


என் உதவியாளர் ஹரியின் அம்மா சிவகங்கை மாவட்டத்திலுள்ளவர். அவருக்கு இன்று காலையில் 0884276662 2 என்கிற எண்ணிலிருந்து தொலைபேசி வந்திருக்கிறது. அவர்கள் ஏதோ ஒரு டிவி ப்ரோகிராமில் கலந்து கொண்டதில் வெற்றி பெற்றிருப்பதாகவும், அதற்கு ஒர் டாடா சபாரி கார் பரிசாக விழுந்திருப்பதாகவும், காரை பெற விருப்பமில்லையென்றால் 13 லட்சம் ரூபாய் கேஷாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பரிசை பெறுவதற்கு கார் என்றால் ரிஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் எல்லாம் சேர்த்து அவர்கள் சொல்லும் அக்கவுண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டினால் ஏழு நாட்களில் வண்டியை கொடுப்பார்கள் என்றும், பணமாய் வேண்டுமென்றால் ப்ராசசிங் சார்ஜாய் 13 ஆயிரம் அக்கவுண்டில் போடச் சொல்லியிருக்கிறார்கள்.  விஷயம் கேள்விப்பட்டதும், அந்த தொலைபேசி எண்ணில் நான் தொடர்பு கொண்டேன். 

“காலையில அம்மா சொன்னாங்க.. கார் ப்ரைஸ் விழுந்திருக்கிறதா?
என்றதும் யார் எந்த அம்மா என்ற கேள்விக்கூட இல்லாமல் “ஆமாம்” என்றது எதிர்முனை. சுத்த தமிழில் 

“உங்க கம்பெனி பேர் ?”

” லஷ்மி எண்டர்ப்ரைசஸ்”

“எங்க இருக்கு?”

“ஜம்மு காஷ்மீர்ல”

“உங்களுக்கு வெப்சைட் எல்லாம் இருக்கா?”

”இருக்குங்க.. ஆனா இப்ப அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல இருக்கு”

’உங்க பேர் என்னங்க?
“ரவீந்தர் சிங்
“இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?
“நான் சென்னை, கோவை,மதுரையில எல்லாம் வேலை செய்திருக்கேன். அதானால்த்தான்”

“ஓ.. சரி.. எந்த விதமான நம்பிக்கையும் இல்லாம எப்படிங்க  உங்க  அக்கவுண்டுல பணம் போடுறுது?
“நம்பிக்கையில்லைன்னா விட்டுறுங்க.. நாங்க மட்டும் ஏன் உங்களுக்கு பரிசு தரணும்?
“நாங்க போட்டியில வின் பண்ணதினாலத்தானே தர்றீங்க? அப்புறம் எந்த டிவி ப்ரோகிராம்ல வந்தது இ ந்த போட்டி?

“மூன் டிவிலங்க.. நம்புனா பணம்கட்டுங்க.. இல்லாட்டிவிட்டிருங்க.”

“நல்லதுங்க. நான் பணம் கட்டுறேன். அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. 

“நான் உங்க அம்மா நம்பருக்கே அனுப்புறேன்” என்று போன் கட் செய்யப்பட்டது. அடுத்ததாய் அதே நம்பருக்கு  கார்க்கி வேறொரு நம்பரிலிருந்து போன் செய்தான். அப்போது நீங்க யாரு? என்று கேட்க,  கார்க்கி மிரட்டும் தொனியில் கேள்விகள் கேட்க ஆர்மபித்தவுடன் உடனடியாய், கால் நான்கைந்து பேரின் போனுக்கு மாற்றி மாற்றி போய், பின்பு வேறொருவன் என்ன வேணும் உங்களுக்கு? என்று கேட்டான். தொடர்ந்து மிரட்டலாய் கேள்வி கேட்டதும், எங்க கம்பெனி ஸ்டீல் கம்பெனி நீங்க என்ன வேணும்னாலும் ஆக்‌ஷன் எடுத்துக்கங்க?” என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும், பேசிவிட்டு, வைத்துவிட்டான். மீண்டும் அந்த நம்பருக்கு கால் அடித்த போது போன் சுவிட்ச் ஆப். நண்பர்களே உங்களுக்கு இந்த மாதிரியான கால் வந்தால் ஏமாந்துவிடாதீர்கள். எச்சரிக்கை.
  • கேபிள் சங்கர்





Post a Comment

5 comments:

Raj said...

இது மாதிரி வேறு சில மோசடிகள்...

சில கால்கள் வேறு நாட்டிளிருந்துகூட வரும். பிஸ்னஸ் பண்ணலாம் என்று ஆரம்பிக்கும் (நான் அதிக பட்சம் ரெண்டு நிமிஷம் பார்ப்பேன், கம்பெனி வெப்சைட் அட்ரஸ் கொடுங்க / ஈமெயில் ஐடிக்கு டீடைலா ஈமெயில் அனுப்புங்க அப்படின்னு சொல்வேன் மறுத்தால் போனை கட் பண்ணிடுவேன்). அப்புறம் அவங்க நம்ம பிஸ்னஸ் எப்படி போகுது (அவங்கள பத்தி சொல்ல மாட்டங்க) அப்படின்னு குறைந்த பட்சம் பதினைந்து நிமிஷத்துக்கு இழுத்துவிடுவார்கள். ஒரு அட்ரஸ் நோட் பண்ணினால் கூட திரும்ப திரும்ப ரிபீட் பண்ணுவார்கள்...
கடைசியில் தான் தெரியும்... வந்த இன்கமிங் காலுக்கு நாம் தான் பணம் கட்டனும். (இது தரைவழி தொலைபேசிக்கும்தான்).

- சமீபத்தில் சில குறுக்குவழி சாப்ட்வேர்கள் போட்டு சில தறுதலைகள் வீட்டு பெண்கள் போன் எடுத்தால் கெட்ட கெட்ட வார்த்தையாக பேசுகின்றனர்.. எப்படி அவர்களை தண்டிப்பது என்பது தெரியவில்லை.

ghi said...

எனக்கு Samsung galaxy phone பரிசு என்றார்கள். போடா வெண்ணை... என்று திட்டிவிட்டேன்.

Unknown said...

சங்கர் ஜி ...உங்களுக்கு ஒரு கோரிக்கை >>>http://jokkaali.blogspot.com/2014/02/blog-post_7.html
K Gopaalan7 February 2014 10:31
இவங்க மூணுபேரையும் வச்சு மாமியார் அஞ்சிய மருமகள்ன்னு படம் எடுக்கலாமா.

கோபாலன்

ReplyDelete
Replies

Bagawanjee KA7 February 2014 11:00
இன்று காலையில் தமிழ் ஹிந்துவில் ,நம்ம பதிவுலக 'தல 'டைரெக்ட் செய்யும் தொட்டால் தொடரும் படம் சம்பந்தமாக கேபிள் சங்கரின் பேட்டியை படித்தேன் ...அவரிடம் அடுத்த படமாக மாமியார் அஞ்சிய மருமகள் தலைப்பை பரிசீலிக்க சொல்கிறேன் .உங்களுக்கு டைட்டில் ராயல்ட்டி கிடைக்கலாம்!

Unknown said...

Hari unaku car prize vilunthu irruku miss pannita ..

Tech Shankar said...

நமக்கு அவன் 13 லட்சம் தருவானாம். ஆனால் அவனுக்கு நாம 25 ஆயிரம் கொடுக்கணுமாம். என்னிடம் இப்படி போன் வந்தால் 13 லட்சத்தில் 25 ஆயிரத்தைக் கழித்துவிட்டு 12,75000 மட்டும் எனக்குக் கொடு. என கேட்பேன். சிந்தனை செய் மனமே. நமக்கு அவன் நிறைய தருகிறான். ஆனால் அவன் ஏன் நம்மிடம் குறைந்த பணம் எதிர்பார்க்கிறான்.