கேட்டால் கிடைக்கும் - சப்வே
இரவு பதினோரு மணியிருக்கும். கிட்டத்தட்ட கடை அடைக்கும் நேரம் நிச்சயம் விருகம்பாக்கம் சப்வேக்காரன் என்னைப் போன்ற ஒர் கஸ்டமரை எதிர்பார்த்திருக்க மாட்டான். ஒரே ஒரு ஆள் மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப, மெல்ல மெனுவை பார்வையிட்டேன். ரோஸ்டட் சிக்கன் சப்பை ஆர்டர் செய்தேன். சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும், கோக், டயட் கோக், சாப்ட் டிரிங்க் வகையறாக்கள், இப்போது புதியதாய் இட்டாலியன் ஐஸ்கிரீம் வேறு. சிரித்துக் கொண்டேன்
“உங்க சப்பை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டா உடல் எடை குறையும். அவ்வளவு ஹெல்தின்னு சொல்றாங்களே..? உண்மையா?”
கடைக்கார இளைஞன் பரபரப்பாக ஆமாம் என சந்தோஷமாய் தலையசைத்தான்.
“அப்ப எதுக்கு அது கூட அதிக கலோரிய கொடுக்குற கோக்கை விக்குறீங்க?”
இந்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை போல.. திருதிருவென விழித்துக் கொண்டு, கஸ்டமர் கேக்குறாங்க.. என்றான். “சார் எந்த ப்ரெட் வேணும்?” “சிக்கன் ப்ரைடா?” “இன்னொரு ஸ்லைஸ் சிக்கன் பில்லப் பண்ணலாமா?” “அறுபது ரூபா அதிகமாகும்?” “புல் வெஜிட்டபிள்ஸ் போட்டுறலாமா?” போன்ற தொடர் கேள்விகளுக்கு பின் சப்பை கொடுத்தான். முதல் கடி கடித்தபின் தண்ணீர் ஞாபகம் வர, “தம்பி தண்ணீர் வேண்டும்” என்று கேட்க, பாட்டில் வாட்டர் பாட்டிலைக் கொண்டு வந்து வைத்தான். “ இல்லை தம்பி.. எனக்கு உங்க ரெஸ்ட்டாரண்டுல கொடுக்குற தண்ணி வேணும்.” என்றேன்.
“அது தனியா கிடையாது சார்..”
“ஏன் நீங்க யாரும் தண்ணி குடிக்கவே மாட்டீங்களா?”
“எங்களுக்கு கேன் வாட்டர்”
“அப்ப அதைக் கொடுங்க”
”இல்ல சார். நாங்க கொடுக்ககூடாது. ரூல்ஸ் கிடையாது.”
“எது குடிக்க தண்ணி கேட்டா காசுகொடுத்து தான் வாங்கணும் ரூல்ஸா? ஒரு விஷயம் தெரியுமா? ஒவ்வொரு ரெஸ்ட்டாரண்டும், எங்கே சாப்பிடற வசதி வச்சிருக்காங்களோ அவங்க நிச்சயம் குடிக்கவும், நல்ல சுகாதரமான டாய்லெட் வசதியும் செய்து கொடுத்தாத்தான் உங்களுக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ் தெரியுமா?” விழிக்க ஆரம்பித்தான். “அமெரிக்காவுல இப்படி கஸ்டமருக்கு அவன் அடிப்படை வசதிய கொடுக்காமத்தான் விப்பீங்களா?’ என்று பேசிக் கொண்டிருந்த போதே.. க்ளாஸ் இல்லாமல் ஒர் பெரிய ஜக்கில் குடிக்கும் தண்ணீர் வந்தது. சப் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை குடித்துவிட்டு, கிளம்பும் போது “ தம்பி நான் தண்ணி கேக்குறது எனக்காக இல்லை.. என்னைக்கு இங்க வேலை செய்யுற நீ சாதரண டீக்கடைக்கு போய் தண்ணி கேட்டா காசு கொடுன்னு கேக்கும் நிலைம வரும் அப்போத்தான் தெரியும். இங்க இல்லை.. கே.எப்.சி, மெக்டொனால்டு, சென்னையில இருக்குற எல்லா மால்லேயும் குடிக்கிற தண்ணி வக்க ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமில்லை.. நீங்களும் கேட்டா கொடுங்க.. மினரல் வாட்டரை என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். மீண்டும் ஓர் முறை போய் தண்ணீர் கேட்டு போராட வேண்டும் அப்போதுதான் பழக்கத்திற்கு வருவார்கள். நண்பர்களே கேட்டால் கிடைக்கும். கேளுங்க.. கேளுங்க.. கேட்காமல் விடாதீங்க..
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
மனைவியுடன் போயிருந்தாலும் இப்படி கேட்பீர்களா ?? டவ்ட்டு,ஹிஹிஹி.
how cable you can put fight like this? kandipa dhillu venum ungala maari kelvi keka