சாப்பாட்டுக்கடை - Grill Box
உள்ளே சென்றதும், வழக்கம் போல ஒர் வட மாநில பெண் ஒருத்தி அரைகுறை ஆங்கிலத்தில் காலியாய் இருந்த ரெஸ்டாரண்டுக்கு இங்கே தான் டேபிள் புக் செய்ய வேண்டுமென்றாள். பெயர் சொல்லி, உள்ளே அழைத்துச் சென்றாள். ஒவ்வொரு டேபிளின் மேலும் ஒர் லேட்டஸ்ட் புகைப் போக்கி அமைத்திருந்ததும், நட்ட நடு ஹாலில் பார்பக்யூ செய்யும் சமையல் அறையை வைத்திருந்ததும், அதனைச் சுற்றி பஃபே அயிட்டங்களை பரப்பியிருந்தார்கள். எனக்கென்று ஒர் தனி 2 டேபிள் சேரை தெரிந்தெடுத்து அமரச் சொன்னவர்கள் புகை போக்கியை இழுத்து டேபிளின் நட்ட நடுவுக்கு அமைத்தார்கள். உடனடியாய் லைவ் குமுட்டி ஒன்றை டேபிளின் நடுவே அமைத்து அதன் மேல் சிக்கன், எரா, மீன், பன்னீர், உருளைக்கிழங்கு, என அயிட்டங்களை இரும்புக் கம்பியில் குத்தி வாட்டியெடுக்க வசதியாய் குமுட்டியின் நடுவில் அதனை பரப்பி வைத்துவிட்டு போனார்கள். உடன் ஒர் வெல்கம் டிரிங்காய் மாக்டெயில் ஒன்றை தந்தார்கள். வெல்கம் ட்ரிங்கின் பெயர் கேட்டபோது வழக்கம் போல மங்கோலியன் அவனுக்கு தெரிந்த இந்தியிலும், ஆங்கிலத்திலும் சொன்ன பெயர் புரியாமல் சரி விடு ஏதோ ஒண்ணு என்று குடித்தேன். நன்றாகவே இருந்தது.
Grill Box
Ragaviah Road
tnagar.
Comments